Saturday, November 16, 2013

மசூதி புனருத்தாரணம்

     
உருஸ் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பித்ததைப்போலவே, கோபால் குண்டுக்கு மசூதியைப் புனருத்தாரணம் செய்து அழகுபடுத்தவேண்டும் என்னும் யோசனையும் மனத்தில் உதித்தது. 

     மசூதி புனருத்தாரணம் செய்யப்படவேண்டுமென்றும் அதையும் தம் கைப்படச் செய்யவேண்டுமென்றும் கோபால் குண்ட் தீர்மானம் செய்தார்; வேலைக்கு வேண்டிய கற்களைத் தயார் செய்தார். 

     ஆனால் கோபால் குண்டுக்கு இந்த ஸேவையைச் செய்யக் கொடுத்துவைக்கவில்லை என்று தெரிகிறது. பிறகு, பாபாவின் விருப்பப்படி இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

      நானாஸாஹேப் சாந்தோர்க்கர் இப்பணியை ஏற்றுக் கொள்ளவேண்டுமென்றும் காகாஸாஹேப் தீக்ஷிதர் தளம் பரவும் பணியை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் பாபா விரும்பியதாக இப்பொழுது தெரிகிறது. 

     சிறிது காலம் கழித்து அது அவ்வாறே நடந்தது. முத­ல், பக்தர்கள் சோர்ந்து போகும்வரை திரும்பத் திரும்ப அனுமதி கேட்டும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. மஹால்ஸாபதி பரிந்துரை செய்யுமாறு வேண்டிக்கொள்ளப்பட்டார். இதன் பிறகே பாபா அனுமதி தந்தார். இரவோடு இரவாக தளம் போடப்பட்டது. அடுத்த நாளி­ருந்தே பாபா ஆஸனமாக ஒரு சிறுமெத்தையை உபயோகிக்க ஆரம்பித்தார். 



ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...