Thursday, November 28, 2013

எங்கும் நிறைந்தவரே பாபா!



     அணிமா சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியளவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக ஸஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே. 
     அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்கமுடிந்தவருக்கு மரப்பலகை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? 
      அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமகாசித்திகளும் நவநிதிகளும், அவருடைய ந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையே.
     புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி -- அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார். 
            பார்வைக்கு அவர் ஷிர்டீவாசியைப் போலத் தெரிந்தார்; மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனத்திலும் வசிக்கிறார். 
     அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார்; வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்தவேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனத்துள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின்மேல் பாசம் இருந்தது.
 

      அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; கிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அவரது அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...