Friday, November 8, 2013

ஹர்தா கனவான்


     ஹர்தாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தமது மூத்திரப் பையிலுள்ள கல் ஒன்றால் கஷ்டப்பட்டார்.  அத்தகைய கற்களெல்லாம் பொதுவாக ரணசிகிச்சை மூலமாகவே நீக்கப்படுகின்றன.  மக்கள் அவரையும் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொள்ளும்படிக்கூறினர். அவர் முதுமையும், தளர்ச்சியும் உடையவராகவிருந்தார்.  அவருக்கு மனோதிடமும் தேவையாயிருந்தது. அறுவைச்சிகிச்சைக்கு தன்னை உட்படுத்திக்கொள்ள அவரால் நினைக்க இயலவில்லை.  அவரது கஷ்டம் மற்றொரு வகையில் தீர இருந்தது.
     அந்த நகரத்தின் இனாம்தார் அந்நேரத்தில் அவ்விடத்துக்கு வரும்படியாக நிகழ்ந்தது. அவர் பாபாவின் அடியவர்களில் ஒருவர்.  எப்போதும் தம்மிடம் உதி கையிருப்பை வைத்திருப்பார்.  சிலரின் சிபாரிசின் பேரில் அம்முதியவரின் மகன் உதியை சிறிது அவரிடமிருந்து பெற்று தண்ணீரில் கலக்கி தனது கிழத் தந்தைக்கு உட்கொள்ளக் கொடுத்தான்.  ஐந்தே நிமிடத்திற்க்குள் உதி உடம்பில் சேர்ந்து, கல் கரைந்து சிறிநீர் வழியாக வெளி வந்துவிட்டது.  முதியவரும் விரைவில் குணம் அடைந்தார்.
ஸ்ரீ சாயியைப் பணிக

அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

மூலம்: ஸ்ரீ சாய் சத்சரிதம் அத்தியாயம் 34

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...