Wednesday, November 6, 2013

ஈரானியரின் பெண்

     ஒரு ஈரானிய கனவானுடைய அனுபத்தினை இப்போது படியுங்கள். அவரது சிறு மகளுக்கு ஒவ்வொரு மணிக்கும் வலிப்பு வந்த்து.  அப்போது அவள் பேசும் சக்தியை இழந்தாள்.  அங்கங்கள் குறுகி உணர்வின்றிக் கீழே சாய்ந்தாள்.  எந்த சிகிச்சையும் அவளுக்கு எவ்வித குணத்தையும் அளிக்கவில்லை.
     பாபாவின் உதியைச் சில நண்பர்கள் அவளது தந்தைக்கு சிபாரிசு செய்து, அதை பம்பாயில் விலேபார்லேயில் உள்ள காகாசாஹேப் தீஷித்திடம் இருந்து பெறும்படிக் கூறினார்கள்.  பின்னர் ஈரானிய கனவான் உதியைப் பெற்று தினந்தோறும் அதை நீரில் கலந்து தன் மகளுக்குக் கொடுத்தார். ஆரம்பத்தில் மணிக்கு ஒருமுறை வந்து கொண்டிருந்த வலிப்பு, ஏழு மணிக்கு ஒரு முறை வரத் தொடங்கியது.  அதற்குச் சில தின்ங்களுக்குப்பின் அவள் முழுமையும் குணமடைந்தாள்.

ஸ்ரீ சாயியைப் பணிக

அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்


மூலம்: ஸ்ரீ சாய் சத்சரிதம் அத்தியாயம் 34

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...