Tuesday, November 19, 2013

காகா மஹாஜனியின் எஜமானர் - 2

நேற்றைய தொடர்ச்சி...

  ''இங்கு என்ன கண்டீர், திரும்பத் திரும்ப வருவதற்கு? தர்கட் பதிலுரைத்தார்,  ''நாங்கள் தரிசனம் செய்ய வருகிறோம். சேட் குறுக்குச்சால் ஓட்டினார், ''ஆனால், இங்கு அற்புதங்கள் நிகழ்கின்றன என்று நான் கேள்விப்பட்டேனே?

        ஆகவே தர்கட் சொன்னார், ''என்னுடைய பாவனை அதுவன்று. மனத்தில் ஆழமாக எதை விரும்பியவாறு வருகிறோமோ அந்தக் காரியம் ஸித்தியாகிறது.

         காகா பாபாவின் பாதங்களில் விழுந்து திராட்சையைக் கைகளில் சமர்ப்பித்தார். மக்கள் ஏற்கெனவே கூடியிருந்தனர். பாபா திராட்சையை பக்தர்களுக்கு விநியோகம் செய்ய ஆரம்பித்தார்.  மற்றவர்களுக்கு அளித்ததைப் போலவே தரம்ஸீ சேட்டுக்கும் சில திராட்சைகளைக் கொடுத்தார். ஆனால், தரம்ஸீக்கு இந்த ஜாதி பிடிக்காது; விதையற்ற ஜாதியே பிடிக்கும்.

         விதையுள்ள திராட்சையே அவருக்குப் பிடிக்காது. பிள்ளையார் சுழி போடும்போதே பிரச்சினை எழுந்துவிட்டது. அவற்றை எப்படித் தின்பது என்பதே அவருடைய பிரச்சினை. வேண்டா என்று ஒதுக்குவதற்கும் மனோதிடம் இல்லை. 

         திராட்சையை நன்கு கழுவாமல் தின்னக்கூடாது என்று குடும்ப டாக்டர் தடைவிதித்திருந்தார்; தாமே கழுவுவதும் முறையான செயல் அன்று. நானாவிதமான கற்பனைகள் மனத்தில் உதித்தன.  ஆனாலும், வந்தது வரட்டுமென்று திராட்சைகளை வாயில் போட்டுக்கொண்டார். விதைகளைப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்õ ஒரு சாது வாழும் இடத்தில் எச்சில் விதைகளை எறிந்து அவ்விடத்தின் புனிதத்தைக் களங்கப்படுத்த அவர் விரும்பவில்லை.

          சேட் தமக்குள்ளேயே பேசிக்கொண்டார், ''இவர் ஒரு சாது. ஆயினும் எனக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதென்பது இவருக்குத் தெரியவில்லை. ஏன் எனக்கு இவற்றை பலவந்தமாகக் கொடுக்கவேண்டும்?

           இந்த எண்ணம் அவருடைய மனத்தில் ஓடிக்கொண் டிருந்தபோதே, பாபா அவருக்கு இன்னும் சில திராட்சைகளைக் கொடுத்தார். அவையும் விதையுள்ள ஜாதி என்றறிந்த சேட் அவற்றை வாயில் போட்டுக்கொள்ளாமல் கையிலேயே வைத்திருந்தார்.  அவருக்கு விதையுள்ள திராட்சை பிடிக்காதுதான்; ஆயினும், அவை பாபாவின் கையால் கொடுக்கப்பட்டவை. தரம்ஸீ தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டார்; என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

           அவருக்கு திராட்சைகளை வாயில் போட்டுக்கொள்வதற்கு விருப்பம் இல்லை. ஆகவே, அவற்றைக் கைக்குள் அடக்கிக்கொண்டார். திடீரென்று பாபா சொன்னார், ''அவற்றைத் தின்றுவிடும். சேட்ஜீ இந்த ஆணையை நிறைவேற்றினார்.

           ''அவற்றைத் தின்றுவிடும்ஃஃ என்று பாபா சொல்­ முடிக்குமுன்பே சேட் அவற்றைத் தம் வாயில் இட்டுக்கொண்டார். அவையனைத்தும் விதையற்றவையாக இருந்தன. சேட் ஆச்சரியத்தில் மூழ்கினார்.
திராட்சைகளில் விதை இல்லாமற்போனது கண்டு, தரம்ஸீ வியப்பிலாழ்ந்து தமக்குத்தாமே சொல்­க்கொண்டார். 

          ''என்னுடைய மனத்தில் இருந்ததை அறிந்து, இந்த திராட்சைகள் விதையுள்ளனவாகவும் கழுவப்படாதனவாகவும் இருந்தபோதிலும், எனக்கு ஸாயீ கொடுத்தவை விதையற்றனவாகவும் நன்மையளிப்பனவாகவும் இருந்தன. அவர் ஆச்சரியத்தால் செய­ழந்து போனார். பழைய சந்தேகங்களும் எதையும் உரித்துப் பார்க்கும் ஆர்வமும் எங்கோ ஓடி மறைந்தன. அவருடைய அகங்காரம் வீழ்ந்தது; மனத்தில் ஞானியின்மேல் பிரீதி பொங்கியது.  ஏற்கெனவே செய்துகொண்ட சங்கற்பங்கள் விலகின. ஸாயீபிரேமை இதயத்தில் பொங்கியது. ஷீரடி செல்லவேண்டுமென்ற ஆவலும், செய்துகொண்ட தீர்மானமும் நல்லதற்காகவே என்று நினைத்தார்.
பாபாஸாஹேப் தர்கடும் அப்பொழுது ஸாயீ பாபாவின் அருகில் அமர்ந்திருந்தார். அவருக்கும் சில திராட்சைகள் கிடைத்திருந்தன.

         ஆகவே தரம்ஸீ அவரைக் கேட்டார், ''உங்களுடைய திராட்சைகள் எப்படி இருந்தன? தர்கட் ''விதையுள்ளவை என்று சொன்னபோது சேட் அதிசயத்தால் வியந்துபோனார். 


        பாபா ஒரு ஞானி என்னும் அவருடைய நம்பிக்கை உறுதியாகியது. மேலும் திடப்படுத்திக்கொள்வதற்காக ஒரு கற்பனை அவருடைய மனத்தில் உதித்தது. அவர் தமக்குள்ளேயே சொல்­க்கொண்டார். ''நீர் அசல் சாதுவாக இருப்பின் அடுத்ததாக திராட்சை பெறும் முறை காகாவினுடையதாக இருக்கவேண்டும்.

         பாபா பல பேர்களுக்கு திராட்சை விநியோகம் செய்துகொண் டிருந்தார். ஆனால், மேற்சொன்ன எண்ணம் சேட்டின் மனத்தில் உதித்தவுடனே, அடுத்த சுற்றைக் காகாவிடமிருந்து ஆரம்பித்தார். சேட் அற்புதம் கண்டார்.

இதன் தொடர்ச்சி நாளை.....

ஸ்ரீ சாயி சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...