Saturday, November 30, 2013

மரணத்தை வென்ற ஞானிகள்



     லி­யுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ஆண்டுகள்; இதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகு பாபா அவதாரம் செய்திருக்கிறார்.  பாபாவினுடைய பிறந்த தேதி தெரியாமல், இந்தக் காலத்தை எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியுமென்று கதை கேட்பவர்கள் இங்கு ஒரு சந்தேகத்தை எழுப்பலாம். ஆகவே, இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். 

     புனிதமான சிர்டீ கிராமவாசியாக இருக்கவேண்டுமென்று ஸங்கல்பம் செய்துகொண்டு ஒரு க்ஷேத்திர ஸந்நியாஸியாக பாபா தமது கடைசி நாள் வரை 60 ஆண்டுகள் சிர்டீயில் வாழ்ந்தார்.
  முதன்முதலாக, பாபா 16 வயது பாலகனாக சிர்டீயில் தோன்றினார்; அச்சமயத்தில் அங்கு 3 ஆண்டுகள் தங்கினார். 

     பிறகு, அவர் சிர்டீயி­ருந்து மறைந்துவிட்டார்; மறுபடியும் தூரதேசமான நிஜாம் ராஜ்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கல்யாணக்கோஷ்டியுடன் சிர்டீக்கு வந்தார்; வந்தவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டார்.
  41 அப்போது அவருக்கு 20 வயது; அடுத்த 60 ஆண்டுகள் அவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டது எல்லாருக்கும் தெரிந்ததே.
     சகவருஷம் 1840ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமியன்று (கி.பி. 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி) பாபா மஹாஸமாதியடைந்தார்.   பாபாவினுடைய வாழ்நாள் 80 ஆண்டுகள். இதி­ருந்து பாபா பிறந்த ஆண்டு, சக வருஷம் 1760 (கி.பி. 1838) ஆக இருக்கவேண்டும் என்று அனுமானிக்கலாம். 

      மரணத்தை வென்ற ஞானிகளின் ஜீவிதகாலத்தை நிர்ணயிக்க முடியுமா? அது செயற்கரிய செயலாகுமன்றோ. சூரியன் உதிக்காமலும் அஸ்தமிக்காமலும் நிலையாக ஓரிடத்திலேயே இருக்கும் உலகத்தில், பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில், மஹான்கள் அவர்களுடைய இடத்திலேயே இருக்கின்றனர். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...