Wednesday, November 27, 2013

ராம்லால்


பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்குக் கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது. 
ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை. 
உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண் டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம். 
ராம்லாலி­ன் கனவோ விசித்திரமானது. அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், ''என்னைப் பார்க்க வாரும்.
கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்குத் தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். 
அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னவென்று தெரியும்.
அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். 
      கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே கடைக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். 
நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களைக் கவனமாகப் பார்த்தபின், ''இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று கடைக்காரரை விசாரித்தார். ''இது ஷீரடியில் இருக்கும் ஸாயீ என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார். 
மற்ற விவரங்களைப் பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் ஷீரடிக்குச் சென்றார். பாபா மஹாஸமாதி அடையும்வரை அவருடன் இருந்தார். 
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது. 
அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர். 
கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான ஸாது என்றறிக. 
      'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு என்பதே ஒரு ஸாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களைத் தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை. 
     சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன்மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவிலேயே மூழ்க வேண்டுமென்று ஸாயீ விரும்புகிறார். 
    அதனால்தான் பக்தர்கள் ஸாயீ சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன். 

 கேட்பவர்களின் மனத்தில் சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தி­ருந்து விடுபடுவார்கள். ஸாயீ பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியி­ருந்து விடுதலை பெறுவார்கள். 

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...