Friday, November 29, 2013

ஸாயீ ஆத்மபோதத்தின் சுரங்கம்


        அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், கிரங்கத்தில் சிலசமயம் பிசாசைப்போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல் செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். 
    சிலசமயங்களில் மக்களின்மீது பிரேமை காட்டினார்; சிலசமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சிலசமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாகப் பொழிவார்; சிலசமயங்களில் ஆனந்தமாக அணைத்துக்கொள்வார். 
     ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார்.
 
      எப்பொழுதும் உள்முகமாகத் திருப்பப்பட்ட மனத்துடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்துகொண்டு, இங்குமங்கும் அலையவேண்டிய தொந்தரவோ, செல்வத்தையோ, புகழையோ சிறிதும் விரும்பாமல் பிச்சை எடுப்பதையே பிழைப்பாக ஏற்றுக்கொண்டு, புலன்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக்கொண்ட யோகநிலையில் அவர் வாழ்நாளைக் கழித்தார். 
     ஒரு யதி ஸந்நியாஸியைப்போல உடையுடுத்திக்கொண்டு, தம்முடைய ஸட்காவை ஸந்நியாஸிகள் எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய தண்டமாகக் கொண்டார். 'அல்லாமா­க் என்னும் வார்த்தைகளே அவருடைய இடைவிடாத ஜபம்; பக்தர்களிடம் அவர் காட்டிய பிரீதி அகண்டம். 
      மானிட உருவத்தில் அவதரித்த ஸாயீயின் உருவ லக்ஷணங்கள் இவ்வாறே; பூர்வஜன்மத்தில் சம்பாதித்த புண்ணியத்தால்தான் இப்புதையல் நமது கைகளுக்கு எதிர்பாராமலேயே கிடைத்திருக்கிறது. 
     ஸாயீ ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்; துரதிருஷ்டசாலி­கள். அவர்களுடைய விதி விசித்திரமானது. அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்? 
      ஸாயீ ஆத்மபோதத்தின் சுரங்கம்; பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம். ஸம்ஸார ஸாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாக.

      படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை  இப் 

பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும், அளவற்றதும் முடிவற்றதும் 

பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே பாபாவாக உருவெடுத்திருக்கிறது. 


ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...