சந்திரா பாய்
பாபாவை முதன் முதலாக 1892-ல் ஷீரடிக்கு வந்து பல தெய்வீக லீலைகளை
கண்டார். இவை அவளுக்கு பாபாவின் மேல் இருந்த நம்பிக்கை,
பக்தி,
அன்பு ஆகியவற்றை
உறுதி செய்தன.
பாபா அவளுக்கு
பல் ஒன்று கொடுத்தார். அதை ஒரு தாயத்தில் போட்டு பூஜித்து வந்தாள். அவள் கணவர் ஷீரடிக்கே
சென்றதில்லை. இருந்தாலும் தன் பக்தையின் கணவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்வதாக
இருந்தால் அதை முன்கூட்டியே தெரியப்படுத்தி எச்சரிக்கை செய்யுமளவுக்கு பாபா அவள்
மீது மிகுந்த தயை காட்டினார்.
சந்திரா பாய் 20
வருடங்களாக
ஷீரடிக்கு வந்து கொண்டிருந்தாள். 1918-ல் ஷீரடிக்கு வந்தபோது பாபா அவளிடம்,
"உன் ஆசை என்ன?"
எனக் கேட்டார்.
அவளோ,
"பாபா நீங்கள்
சர்வ வியாபி, எல்லாம் அறிந்தவர். என் ஆசைகளையும்
அறிந்தவர். எதைச் சொல்ல? " என்றாள்.
அப்போது அவளுக்கு வயது 48.குழந்தையில்லை. குழந்தை ஆசையிருந்தது. ஆனால்
பாபாவிடம் கேட்டதில்லை.
இக்காலக்கட்டத்தில்
பாபா மகா சமாதி அடைந்தார். முன்று ஆண்டுகள் கழித்து அவளின் 51
வது வயதில்
மாதவிலக்கு நின்றது. இதற்கு 5 மாதம் கழித்து அவளது வயிறு சற்று
உப்பியிருந்தது.கால்கள் வீங்கின, வாந்தி வந்தது. குடும்ப மருத்துவர்
பரிசோதித்து, வயிற்றில் கட்டியிருக்கிறது, அதை உடனே
அகற்றிவிட வேண்டும் என்றார். சந்திரா பாய் ஒப்புக்கொள்ளவில்லை. இது பாபா தந்த
குழந்தை 10
மாதம் பொறுத்து
பார்க்கலாம் என்றாள்.டாக்டர் 51 வயதில் குழந்தை பிறப்பது சாத்தியமற்ற செயல்
என அடித்துக் கூறினார்.
பாபாவின் தயை
சாத்தியம் இல்லாத எதையும் சாத்தியமாக்கும் என்றாள் அவள். இதற்கிடையில் அவள்
உடல்நிலை சற்று மோசமடைந்தது. இதை சரி செய்ய மாதக் கணக்கில் உதியும் நீரும் அருந்தி
வந்தாள்.
பாபா சமாதியாகி 3
வருடம் 2
நாட்கள் கழித்து
ஒரு த்ரயோதசி நாளில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.
ஒருமுறை
சந்திராபாயை பற்றி தாதா சாகேப் தீட்சித்திடம், "நான் எங்கே
சென்றாலும் இவள் என்னை தேடி வந்துவிடுகிறாள்.7 பிறவிகளில் இவள் என் சகோதரி" என்றார்
பாபா. 1918
ல் சந்திரா பாய்
பாபாவை சந்தித்த போது, "பாய்,
இனி என்னை
பார்க்க ஷிர்டிக்கு வந்து கஷ்டப்பட வேண்டாம். நீ எங்கு இருக்கிறாயோ அங்கே நான்
இருப்பேன்" என்றார். இதைக் கேட்ட சந்திரா பாய் அழுது விட்டாள்.
No comments:
Post a Comment