இப்பொழுது
இரண்டாமவரின் கதையைக் கேட்பாயாக:
. ஒரு
காலத்தில் நான் சமுத்திரக் கரையோரமாகத் திரிந்துகொண் டிருந்தபோது ஒரு பெரிய
மாளிகையைப் பார்த்தேன்; மாளிகையின் வராந்தாவில்
உட்கார்ந்தேன். அந்த மாளிகையின் யஜமானர் ஒரு பிராமணர்; நல்ல
வம்சத்தில் பிறந்தவர்; பணக்காரர். அவர் என்னை அன்புடன்
வரவேற்று யதேஷ்டமாக (நிரம்ப) அன்னமும் பானமும் அளித்தார்.
அதன்
பிறகு அதே இடத்தில், சுவரில் உள்ளடங்கிய அலமாரி இருந்த
இடத்திற்கு அருகில், சுத்தமானதும் சுந்தரமானதுமான
ஓரிடத்தில் என்னைத் தூங்குவதற்கு அனுமதித்தார். நான் அங்கே படுத்துத்
தூங்கிவிட்டேன். நான் ஆழ்ந்து தூங்குவதைப் பார்த்து, சுவரிருந்த
நகரக்கூடிய கல் ஒன்றைப் பெயர்த்துவிட்டுத் திருடன் ஒருவன் உள்ளே புகுந்துவிட்டான்.
என்னுடைய பாக்கெட்டைக் கிழித்து என்னிடமிருந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு
போய்விட்டான்.
கண்விழித்து என்ன நடந்ததென்று தெரிந்துகொண்டபோது நான் கண்ணீர் விட்டு அழுதேன். நான் முப்பதாயிரம் ரூபாயை இழந்துவிட்டேன். என்னுடைய மனம் வருத்தம் நிறைந்து கலங்கியது. பணம் பூராவும் வங்கி நோட்டுகள். இந்த திடீர் இழப்பினால் ஏற்பட்ட அதிர்ச்சி என்னுடைய இதயத்தைத் தாக்கியது. மாளிகையின் யஜமானராகிய பிராமணர் எனக்கு ஆறுதல் சொன்னார்.

எனக்கு
அன்னமும் பானமும் ஏற்கவில்லை. பதினைந்து நாள்கள் நான் வராந்தாவில் ஒரே இடத்தில்
பித்துப்பிடித்தது போலப் பரிதாபகரமாக உட்கார்ந்திருந்தேன். பதினைந்தாவது நாள்
முடியும்போது, எதிர்பாராமல் ஒரு பக்கீர் மறைபொருள் கொண்ட
சித்தர் பாடல்களைப் பாடிக்கொண்டு தெருவழியே சென்றார். நான் அழுதுகொண் டிருந்ததைப்
பார்த்தார்.
''என்னுடைய துக்கத்திற்குக் காரணமென்ன” என்று கேட்டார். நான் நடந்ததையெல்லாம் விவரமாகச் சொன்னேன். பக்கீர் சொன்னார், ”நான் சொல்கிறபடி நீர் செய்தால் நிவாரணம் கிடைக்கும். நான் ஒரு பக்கீரைப் பற்றியும் அவர் இருக்குமிடம் ஆகிய விவரங்களையும் சொல்கிறேன். நீர் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடும். அவர் உம்முடைய செல்வம் திரும்பிவந்துசேரும்படி செய்வார். ஆனால், வேண்டுதல் நிறைவேறும்வரை நான் சொல்லும் விரதமொன்றை நீர் அனுஷ்டிக்க வேண்டும். உமக்கு மிகவும் பிடித்தமான உணவுப்பண்டத்தை விட்டுவிட வேண்டும். இவ்வாறு செய்தால் உமக்குக் காரியசித்தி ஆகும்”.

அவருடைய
அறிவுரையைக் கேட்டு நான் அவர் குறிப்பிட்ட பக்கீரைச் சந்தித்தேன். இழந்த என்
செல்வத்தைத் திரும்பப் பெற்றேன். பின்னர் நான் அந்த மாளிகையை விடுத்து, முன்போலவே சமுத்திரக்கரையோடு சென்றேன். அலைந்து திரிந்துகொண்டே சென்று
கடைசியில் ஒரு கப்பலை அடைந்தேன். ஆனால், உள்ளே புக
முடியவில்லை. ஆயினும், நல்ல சுபாவமுள்ள சிப்பாய் ஒருவர்
எனக்கு எப்படியோ கப்பல் ஓர் இடம் பிடித்துக்கொடுத்தார். தெய்வ பலத்தால் காற்று
அனுகூலமாக வீசியது; கப்பல் நேரத்தோடு அக்கரை சேர்ந்தது.
பின்னர் நான் ஒரு குதிரைவண்டி பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். இந்தக்
கண்களால் மசூதிமாயீயைப் பார்த்தேன். பாபா சொன்ன கதை இங்கு
முடிந்தது.
கோவா
விருந்தாளிகளை வீட்டிற்கு அழைத்துச்சென்று உணவளிக்கும்படி சாமாவுக்கு பாபா
ஆணையிட்டார்.
தட்டுகள் வைக்கப்பட்டன. சாப்பிட உட்காரும்போது மாதவராவுக்கு ஆர்வம்
எழும்பியது. விருந்தாளிகளை அவர் கேட்டார்,
''பாபா
சொன்ன கதைகள் உங்களுக்குப் பாடம் ஆயிற்றா?
உண்மையைச் சொல்லப் போனால், ஸாயீ
பாபா இந்த இடத்தில் பல வருடங்களாக நிலைபெற்றவர். அவர் சமுத்திரத்தையோ கப்பலையோ
சிப்பாயையோ அறிய மாட்டார்.
ஓ,
பிராமணரென்ன, மாளிகையென்ன! ஜன்மம் பூராவும் ஒரு மரத்தடியில் கழித்தவர் அவர். திருடன் கொண்டுபோன
செல்வமெல்லாம் எங்கிருந்து வந்தது?
ஆகவே,
இந்த நிகழ்ச்சிகள் ஆரம்பகாலத்தில் உங்களுடைய வாழ்க்கையில்
நடைபெற்றனவாகத்தான் இருக்கவேண்டும். இக் கதையை நீங்கள் அடையாளம்
கண்டுகொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில், நீங்கள் வந்தவுடனே
பாபா கதையை ஆரம்பித்தார் என்று தோன்றுகிறது.”
விருந்தாளிகள் உணர்ச்சிவசப்பட்டுத் தொண்டை
அடைக்கக் கூறினார், ''ஸாயீ எல்லாம் அறிந்தவர்; பர பிரம்ம அவதாரம்; இரட்டைச் சுழல்களிருந்து
விடுபட்டவர்; இறைவனோடு ஒன்றியவர்; பேதமேதுமில்லாதவர்; எங்கும் நிறைந்தவர். அவர் இப்பொழுது சொன்ன கதை
எழுத்துக்கு எழுத்து எங்களுடையது. போஜனம் முடிந்த பிறகு உங்களுக்கு விஸ்தாரமாகச்
சொல்கிறோம்.
விஸ்தாரமான கதை நாளை…….
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு
அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment