வரிவிதிப்புத் துறையில் குமாஸ்தாவாக இருந்த
வி.எச். தாகூர் என்பவர் தமது வேலை நிமித்தமாக வட்கான் என்ற இடத்துக்குச் சென்றபோது,
புகழ்பெற்ற
கன்னட மகானான அப்பா என்பவரை தரிசித்தார். தாகூர் அவரை வணங்கியபோது,
அவர்
ஆசீர்வதித்துவிட்டு, "நீ வடக்கே உன்
அலுவலக விஷயமாக சுற்றுப்பயணம் போகும்போது ஒரு பெரிய மகானை சந்திப்பாய். அவர்
உனக்கு அமைதியடையும் வழியை காட்டுவார்" என்றார்.
தாகூருக்கு
ஜூன்னார் என்ற இடத்துக்கு மாற்றல் கிடைத்தது. அங்கு மிக செங்குத்தான நானேகாட் என்ற
மலையை எருமை மேல் ஏறி கடக்க வேண்டியிருந்தது.
சவாரி அவரது உடலை மிகவும் வலிக்குள்ளாக்கியது.பின்னர் அங்கிருந்து கல்யான் என்ற
இடத்திற்கு மாற்றல் பெற்று வேலை செய்தபோது நானா சாகேப் சந்தோர்க்கர் அறிமுகம்
கிடைத்தது. அவருடன் ஷீரடிக்கு சென்று பாபாவை தரிசித்தபோது,
அவரைப் பார்த்து
பாபா - "இங்கே காட்டப்படும் வழியானது
கன்னட மகானான அப்பாவின் போதனைகளைப் போலவோ, நானேகாட் மலைப்பாதையில் செய்யும் எருமைச்
சவாரியைப் போலவோ அவ்வளவு எளிதானதல்ல. இந்த ஆத்மீக வழியில் உன்னால் முடிந்த அளவு
முழுமுயற்சி செய்ய வேண்டும். அப்பா கூறிய யாவும் சரியே. இவை எல்லாவற்றையும்
பயிற்சியில் கொண்டுவந்து வாழவேண்டும். வெறும் படிப்பு மட்டும் உதவாது. பயிற்சி
இல்லாமலும், குருவின் அருள் இல்லாமலும் இருக்கும் வெறும்
படிப்பினால் பயன் இல்லை". என்றார் ஷிர்டி சாய்பாபா
No comments:
Post a Comment