சொற்களால் விவரிக்கமுடியாத அந்த சக்தியே கண்ணால்
காணும்படியான ரூபத்தில் பூமிக்கு வந்தது. ஸச்சிதானந்தமே அவர், என்று அறிந்துகொள்வதுதான் முழுமையான ஞானம். எவருடைய மனம்
பிரம்மத்திலேயே லயித்திருக்கிறதோ, எவர் இவ்வுலக வாழ்விருந்து
நிவிர்த்தியடைந்தவரோ, எவர் உலகியல் தொல்லைகளிருந்து
விடுபட்டவரோ, எவர் முழுமுதற்பொருளுடன் தம்முடைய ஆத்மாவை
ஒன்றுபடச் செய்துவிட்டாரோ, அவர் தூய ஆனந்தத்தின்
உருவமாவார்.
வேதம் ''ஆனந்தமே பிரம்மம் (முழுமுதற்பொருள்)” என்று
விளம்புவதை கதை கேட்பவர்கள் பலமுறை கேட்டிருப்பார்கள். புத்தகஞானிகளும் இதைப்
போதிகளில் (புராணங்களில்) படித்திருப்பார்கள். விசுவாசமுள்ள பக்தர்களோ இதை
சிர்டீயில் அனுபவிக்கிறார்கள்.
தர்மம்,
அதர்மம் என்னும் லக்ஷணங்களுடன் விளங்கும் இவ்வுலகம்
விசித்திரமானது. ஆத்மஞானம் அடையாதவர்கள்தாம், இதுவிஷயம்
அசட்டை செய்யாது இவ்விதிகளை அனுசரிக்கவேண்டும்.
ஆத்மஞானிகளுக்கோ இதுவிஷயத்தில் ஆதங்கம்
ஏதுமில்லை. அவர்கள் தங்களுடைய ஆத்ம ஸ்வரூபத்திலேயே அடைக்கலம்
புகுந்திருக்கிறார்கள். அவர்கள் நித்தியமாக விடுதலையடைந்தவர்கள்; ஆனந்தமானவர்கள்; ஸதா சின்மய (தூய ஞான)
ரூபமானவர்கள்.
பாபா எல்லாருக்குமே அதிஷ்டானமானவர் (அடித்தளமானவர்). அவருக்கு எப்படி ஓர் உட்காரும் ஆசனம் அளிப்பது? அதுவும் ஒரு வெள்ளிச் சிம்மாசனம்? ஆயினும், பாபா, பக்தர்களுக்கு அவ்வளவு செல்லம் கொடுத்திருந்தார்.
அவருடைய பழைய ஆசனமான ஒரு கந்தல் கோணிப்பை அங்கு இருந்தது. அதன்மேல் பக்தர்கள் மிக்க அன்புடன் ஒரு சிறு மெத்தையை அவர் அமர்வதற்காக வைத்தனர்.

உட்கார்ந்த
நிலையில் சாய்ந்துகொள்ளும் சுவரை ஒட்டி, ஒரு திண்டும்
வைக்கப்பட்டது. பக்தர்களுடைய மனத்தின் ஓட்டங்களை மதிக்கும் வகையில் பாபா அவர்களுடைய
விருப்பங்களை ஏற்றுக்கொண்டார்.
சிர்டீயில்
இருப்பதுபோல் தெரிந்தாலும், பாபா எங்கும் சுதந்திரமாகச்
சுற்றிவந்தார். இந்த அனுபவத்தைத்தான் ஸாயீ எப்பொழுதும் பக்தர்களுக்கு அளித்தார்.
பற்றற்றவராகவும் மனத்திண்மை உடையவராகவும் இருந்த பாபா, பக்தர்கள் செய்த சடங்குபூர்வமான பூஜையையும் ஏற்றுக்கொண்டார். எல்லாரிடமிருந்தும் இவ்விதமாக, சிலர் சாமரம் வீசியும் சிலர் விசிறியால் இதமாக விசிறியும் வேறு சிலர் மங்களவாத்தியங்களை முழங்கியும் பாபாவைத் தொழுதார்கள்.

சிலர்
அவருடைய கைகளையும் பாதங்களையும் அலம்பினர்; சிலர்
அத்தரும் சந்தனமும் பூசினர்ó; சிலர் விசேஷமான நைவேத்தியம்
படைத்து, பதின்மூன்று பொருள்கள் அடங்கிய தாம்பூலத்தைக்
கொடுத்தனர்.
சிலர்,
அரைத்த சந்தனத்தை அவருடைய நெற்றியில் இரண்டு விரல்களால் சிவங்கத்தின்மேல்
இருப்பதுபோல் கோடுகளாக இட்டனர். சிலர், அரைத்த சந்தனத்துடன்
கஸ்தூரி கலந்து நெற்றியில் இட்டனர்.
ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment