Thursday, November 21, 2013

பாபாவும் நரசிம்மரும் ஒருவரேதான்



பாபாவும்  நரசிம்மரும் ஒருவர்தான் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. நாங்கள் நரசிம்ம அவதார தினத்தன்று பாபாவின் ஆலயத்துக்கு சென்று விட்டு வந்தோம். நான் இணையதளங்களில் பாபாவின் மகிமைகளைப் பற்றி நிறையவே படித்துள்ளேன். ஆலயத்துக்கு சென்றுவிட்டு வந்தப் பின் நான் இணையதளத்தில் பாபாவின் மகிமையைக் குறித்துப் படித்துக் கொண்டு இருந்தபோது மகாலஸ்பதியின்  ஒரு அனுபவத்தைக் குறித்து படிக்க நேரிட்டது.
அதைப் படித்த எனக்கு அதில் இருந்த ஒரே ஒரு சிறு வரி எனக்குள் ஒரு பொறி தட்டியது போல இருந்தது. பாபா மகாலஸ்பதியுடன் அமர்ந்து கொண்டு சிலுமை புகைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அவர்கள் பக்கத்தில் வைத்து இருந்த கல் ஒன்று மாயமாய் மறைந்தது.   திடீர் என பாபா நரசிம்ம அவதாரத்தில் தோன்றியபடி எதோ கத்தியபடி இருந்தார். அதைப் படித்தப் பிறகு எனக்குள் நடந்த சில உணர்வுகளைக் குறித்து நான் எழுத விரும்பவில்லை. ஆனால் பாபாவோ தானே அனைத்தும் என்பதை எனக்கு எடுத்துக் காட்டிக் கொண்டு இருந்ததை உணர்ந்தேன். அதன் பிறகு நான் ஒரு  உறுதியான தீர்மானத்துக்கு வந்தேன்.  பாபாவே அனைத்து கடவுளும்.  நாம் பார்க்கும் அனைத்துக் கடவுட்களும் பாபாவேதான்.
அனந்தகோடி பிரும்மாண்ட நாயக யோகிராம் சாயிநாத் மஹராஜுக்கு ஜெய்

ஓம் ஸ்ரீ சாயிராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...