Friday, November 15, 2013

ஸபாமண்டபம்



1911ஆம் வருடம் ஒரு ஸபா மண்டபம் கட்டப்பட்டது. ஆனால் ஓ! அது என்னே பகீரதப் பிரயத்தனம்?  என்ன உழைப்பு? எத்தனை தொந்தரவுகள்?  இது போதாதென்று இவ்வேலை அவர்களை பயத்தால் நடுங்கவைத்தது.

     எப்படியிருப்பினும், இந்த வேலையும் பக்தர்களின் கடுமையான உழைப்பால் அம்முறையிலேயே (மசூதி தளம் பரவிய) அந்தச் சூழ்நிலையிலேயே இரவோடு இரவாக முடிக்கப்பட்டது. 

     பெருமுயற்சியெடுத்து பக்தர்கள் இரவில் இரும்புத்தூண்களை நட்டு நிலைப்படுத்துவார்கள். அடுத்த நாள் காலையில் பாபா தூண்களைப் பிடுங்க முயல்வார். நல்ல சமயமாகப் பார்த்து, பக்தர்கள் மறுபடியும் தூண்களை நிலைப்படுத்துவார்கள். இத் தொடர்முயற்சிகளே அவர்களைச் சோர்வடையச் செய்தன. 

     எல்லாரும் கீழ்ப்பாய்ச்சியை இழுத்துக் கட்டிக்கொண்டு, இரவைப் பகலாக்கி, அவர்களுடைய இதயத்தி­ருந்த ஒரு பெரும் ஆவலைத் தீர்த்துக்கொள்ளக் கடுமையாக உழைத்தனர். 

   முத­லில் இவ்விடம் (மசூதியின் எதிரில்) ஒரு சிறு முற்றம் அடங்கிய திறந்தவெளியாகவே இருந்தது. ஒரு கொட்டகை கட்டுவதற்குத் தகுதியான இடம் என்று தீக்ஷிதர் கருதினார். 

    எவ்வளவு பணம் செலவானாலும் சரி, என்று தீர்மானம் செய்துகொண்டு இரும்புத் தூண்களையும் இரும்புக் கோணச்சட்டங்களையும் வாங்கினார்கள். இரவு படுத்துக் கொள்வதற்கு பாபா சாவடிக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்த பிறகு, அவர்கள் வேலையை முடித்தார்கள். 

    இரவு முழுவதும் பெருமுயற்சி செய்து பக்தர்கள் இரும்புத் தூண்களை நட்டு நிலைப்படுத்துவார்கள். காலையில் சாவடியி­ருந்து திரும்பிவந்தவுடனே பாபா கம்பங்களைப் பிடுங்க ஆரம்பிப்பார். 

    ஒரு நாள் பாபா கடுங்கோபம் கொண்டார். ஒரு கையால் தாத்யாவின் கழுத்தை நெறித்துக்கொண்டே மறுகையால் ஒரு கம்பத்தைப் பிடுங்க முயற்சிசெய்தார். 

     இரும்புத்தூணை பலமாக ஆட்டி அதைப் பிடுங்கிவிட்டார். பிறகு அவர் தாத்யாவினுடைய தலைப்பாகையைப் பறித்து, ஒரு தீக்குச்சியால் அதைக் கொளுத்தி, கோபம் பொங்கக் குழிக்குள் விட்டெறிந்தார். 

     அந்த சமயத்தில் அவருடைய கண்கள் நெருப்புக் கோளங்கள் போல ஜொ­லித்தன. அவருடைய முகத்தை நேருக்குநேராக யாரால் பார்க்க முடிந்தது? எல்லாருமே நடுநடுங்கிப் போனார்கள். 

       சட்டென்று தம்முடைய பாக்கெட்டில் கையைவிட்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து, சுபகாரியம் என்று குறிப்பளிப்பது போலக் குழியில் வீசி எறிந்தார். 

       சாபங்களும் திட்டுகளும் வசையும் சரமாரியாகப் பொழிந்தன. தாத்யா மனத்தளவில் பயந்து நடுநடுங்கிப் போனார். ஓர் இக்கட்டான நிலைமை உருவாகிவிட்டது. இது எங்ஙனம் நடந்தது

       மக்களனைவரும் செயலற்றுப் போனார்கள்õ 'இன்று என்ன என்றுமில்லாதவாறு துர்ச்சகுனம்? தாத்யாபாடீலை இந்த ஆபத்தி­ருந்து விடுவிப்பது எப்படி? என்று மக்கள் வியந்தனர். 

       பாகோஜி சிந்தே தைரியமாகவும் உஷாராகவும் முன்னேறினார்; பாபாவிடம் சுலபமாக மாட்டிக்கொண்டு அவருடைய கோபத்திற்கு இரையானார். பாபாவால் இஷ்டம்போல் துவம்சம் செய்யப்பட்டார்.

       மாதவராவும் பாபாவிடம் மாட்டிக்கொண்டார். பாபா அவர்மீது சில செங்கற்களை எறிந்தார். தாத்யாவை விடுவிக்க முயன்றவர்கள் அனைவரும் அதேபோன்று செங்கற்களால் தாக்கப்பட்டார்கள்.

      'இந்நிலையில் யார் பாபாவை தைரியமாக நெருங்கித் தாத்யாவை விடுவிக்க முடியும்? என்று மக்கள் யோசித்துக்கொண் டிருந்தபோதே பாபாவின் கோபம் தணிய ஆரம்பித்தது. கடைசியில் பாபா அமைதியடைந்தார். 

       உடனே ஒரு ஜவுளிக்கடைகாரர் அழைக்கப்பட்டு, தங்கச் சரிகைபோட்ட தலைப்பாகை கொண்டுவரச் செய்யப்பட்டது. ஓர் அரசரிடமிருந்து வரும் மரியாதையைப் போன்று பாபாவே அத் தலைப்பாகையைத் தாத்யாவுக்குக் கட்டிவிட்டார். 

       இந்த திடீர்க் கோபத்திற்கும் வசவுகளுக்கும் தாத்யாவின்மீது நடந்த தாக்குதலுக்கும் என்ன காரணம் என்பது மக்களுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருந்தது. 

      எக்காரணம்பற்றி அவர் கடுங்கோபமடைந்தார்? எப்படிக் கணநேரத்தில் சாந்தியடைந்து சந்தோஷமாகிவிட்டார்? இதற்கெல்லாம் காரணம் என்ன என்பது ஒருவருக்குமே புரியவில்லை. 

       சில சமயங்களில் பாபாவினுடைய மனம் சாந்தமாக இருக்கும்; எல்லாருடனும் பிரீதியுடன் பேசுவார். சில சமயங்களில் திடீரென்று எக்காரணமும் இல்லாமல் அவருடைய மனம் கொந்தளிக்கும். 

      பாபாவினுடைய காதைகள் இம்மாதிரியானவை; ஒன்றைச் சொல்­க்கொண் டிருக்கும்போதே இன்னொன்று மனத்தில் தோன்றுகிறது. எதை முத­ல் சொல்வது, எதைப் பிறகு சொல்வது என்று பிரவசனம் செய்பவரின் மனம் திக்குமுக்காடுகிறது. இந்தத் தேர்வில் பாரபட்சம் காட்டுவது முறையாகாது. 

      என்னாலும் பாரபட்சம் காட்டமுடியவில்லை. செவிமடுப்பவர்களின், கதை கேட்கவேண்டுமென்ற ஆவலைத் திருப்திசெய்யும் வகையில், எக்காதை எச்சமயத்திற்குப் பொருத்தமாக இருக்கிறதோ, அக்காதை அச்சமயத்தில் அவர்களுக்கு வந்து சேரும். 


ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...