ஒருமுறை ராம் பாபா என்ற மகா
யோகி ஷீரடிக்கு பாபாவை தரிசிக்க வந்தார். அவர் யோகாவை நன்கு கற்றுத்
தேர்ச்சிப்பெற்றவர். ஆகவே தனது சமாதி நிலைக்கு பாபா உதவுவார், அருள் புரிவார் என்றுதான் ஷீரடிக்கு வந்தார். அங்கே பாபா
மக்கிப் போன ரொட்டியையும், வெங்காயத்தையும்
சாப்பிட்டுகொண்டிருந்தார். இதைப் பார்த்த யோகி, இவரா எனக்கு சமாதி நிலையை கற்றுத்தரமுடியும் என சந்தேகித்தார். இவரது எண்ணத்தை அறிந்த
பாபா, வெங்காயத்தை சாப்பிட்டு யாரால் செரிக்க முடியுமோ அவர்கள்
மட்டுமே அதை சாப்பிடவேண்டும் என்றார். இதைக்கேட்ட யோகி பாதத்தில் வீழ்ந்து
பணிந்தார்.
வைதீகம், பட்டினி, சிலவற்றை ஒதுக்கி
வைக்கும்முறை - இவற்றுக்கு பாபா முக்கியத்துவம் கொடுத்ததில்லை. அவர் விரும்புவது
எல்லாம் தன் பக்தனிடம் உளப்பூர்வமான நம்பிக்கையை மட்டுமே.
No comments:
Post a Comment