பாபா லெண்டிக்குக் கிளம்பிய பிறகு, காலட்சேபத்திற்கு வேண்டிய ஸம்பிரதாயமான ஏற்பாடுகளுக்கு இடையே
ஸபாமண்டபத்தில் ஒரு தொட்டிலும் கட்டப்பட்டது.
உரிய நேரத்தில் காலட்சேபத்தைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பாபா லெண்டியிருந்து திரும்பிவந்ததும் பீஷ்மா காலட்சேபம் செய்வதற்கு எழுந்தார். காகா மஹாஜனி ஆர்மோனியப் பெட்டியின் அருகில் அமர்ந்தார். பாபா திடீரென்று காகாவை அழைத்துவரச் சொன்னார்.
'பாபா உங்களைக் கூப்பிடுகிறார்’ என்று செய்தி வந்தது. காகா இதைக் கேட்டு பயந்துபோனார். ஏன் தம்முடைய மனத்தில் விபரீதமான எண்ணங்கள் தோன்றுகின்றன என்று அவருக்குப் புரியவில்லை; எனினும் காலட்சேபத்துக்குக் குந்தகம் ஏதும் நேராது என்று நம்பிக்கை கொண்டார்.
பாபாவினுடைய அழைப்பைப்பற்றிக் கேட்டபோது பயத்தால் காகாவின் தொடைகள் நடுங்கின. 'பாபா ஏன் இவ்வாறு மனக்கொந்தளிப்பு அடைய வேண்டும்? ’ நரம்புத் தளர்ச்சியினால் கால் கனத்துப்போக, மசூதியின் படிகளைத் தடுமாறிக்கொண்டே ஏறினார்.
பாபா அவரை, 'தொட்டில் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது’ என்று வினவினார். கதாகாலட்சேபத்தைப்பற்றியும் கொண்டாட்டத்தின் விவரங்களும் சுருக்கமாகச் சொல்லப்பட்டவுடன் பாபா மகிழ்ச்சியடைந்தார்.
பாபா, அருகிருந்த சுவர் மாடத்திருந்து ஓர் அழகான மாலையை எடுத்துக் காகாவின் கழுத்திலணிவித்தார். பீஷ்மா அணிவதற்காக இன்னொரு மாலையையும் அவரிடம் கொடுத்தார்.
பாபா தொட்டிலைப்பற்றிக் கேட்ட கேள்வி எல்லாரையும் சஞ்சலப்பட வைத்தது. ஆனால் பாபா காகாவுக்கு மாலையணிவித்ததைப் பார்த்ததும் எல்லாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment