Friday, November 22, 2013

என்னுடைய பிறந்த நாளில் பாபா என் வீட்டிற்கு வந்தார்

பாபா என்னை மிகப் பெரிய அளவு நேசிக்கிறார்.  என் பெயர் சிநேகா. எனக்கு வயது பதினொன்று ஆகும். என்னுடைய பிறந்த நாள் பிப்ருவரி 14 தேதியன்று வருகிறது. நான் சீரடிக்கு செல்ல நினைத்தான். முடியவில்லை. அதற்குப் பதில் ஹாங்காங்கில் உள்ள பிராண்டோ என்ற ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்றேன்.
நாங்கள் 7.30 மணிக்கு ஹோட்டலுக்கு செல்லக் கிளம்பினோம். நேரமோ 6.45 ஆகி விட்டது. ஹோட்டலில் டிவி பார்த்துக் கொண்டு இருந்தேன். அதில் ஆரஞ்சு நிற தலைப்பாகை கட்டிய ஒருவர் காட்சி தந்தார். அவர் இந்தி பாஷையில் எதோ கூறிக்கொண்டு இருந்தார். ஆனால் அது என்ன என்பது எனக்குப் புரியவில்லை.
நான் எழுந்து பாத்ரூமுக்குப் போய்விட்டு வந்தேன். வந்தால் டிவியில் சாயிபாபாவையும் சீரடி ஆலயத்தையும் காட்டிக் கொண்டு இருந்ததைக் கண்டேன். ஹாங்காங்கில் சீரடி பாபாவின் ஆலயம் எதுவும் கிடையாது.
இரண்டாவது அதிர்ச்சி என்ன என்றால் பிராண்டோ ஹோட்டலில் நான் எப்போது சாப்பிடப் போனாலும் ஹிந்தி பாட்டு மட்டுமே போடுவார்கள். ஆனால் இன்றோ அவர்கள் சீரடி ஆலயத்தைப் பற்றிய செய்தியைப் போட்டு உள்ளார்கள். ஆகவே நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்களுக்கு தேவையான நல்ல  தினத்தில் பாபா உங்களுக்கு காட்சி தருவார் என்பதே நான் கூறுவது.

ஸ்நேகா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...