ஒரு சமயம்
கோவாவிருந்து இரண்டு இல்லறத்தோர் ஸாயீ தரிசனத்திற்காக ஷீரடிக்கு வந்திருந்தனர். இருவரும் ஸாயீபாதங்களில் வணங்கி தரிசனத்தால்
ஆனந்தமடைந்தனர்.
அவர்கள் இருவரும் சேர்ந்தே வந்திருந்தபோதிலும், ஸாயீ
அவர்களில் ஒருவரை மட்டும், ''எனக்குப் பதினைந்து ரூபாய்
தக்ஷிணை கொடும்” என்று கேட்டார். அவரும் சந்தோஷமாகக்
கொடுத்தார்.
மற்றவர்,
ஸாயீ எதையும் கேட்காதபோதிலும், தாமாகவே
முன்வந்து முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணை கொடுக்க முயன்றார். ஸாயீ உடனே அதை
நிராகரித்துவிட்டார். கொடுக்க முயன்றவர் மிக ஆச்சரியமடைந்தார்.
அந்த
சமயத்தில் மாதவராவும் அங்கிருந்தார். இதை ஓர் இசைவற்ற செயலாகப் புரிந்துகொண்டு
அவர் பாபாவிடம் என்ன கேட்டார் என்பதைக் கேளுங்கள்.
''பாபா,
நீங்கள் எப்படி இவ்வாறு செய்யலாம்? இரண்டு
சிநேகிதர்கள் சேர்ந்தே வந்திருக்கும்போது நீங்கள் தக்ஷிணையை ஒருவரிடமிருந்து
கேட்டு வாங்குகிறீர்கள். மற்றவர் அவராகவே மனமுவந்து கொடுத்த தக்ஷிணையை அவரிடமே
திருப்பிக் கொடுத்துவிட்டீர்கள். ஞானிகள் இம்மாதிரி
விஷமம் செய்யலாமா? ஒருவரிடமிருந்து நீங்களே கேட்டு
தக்ஷிணை வாங்கிக்கொண்டீர்கள். மற்றவர் தம்மிச்சையாகவே அளித்ததைத்
திருப்பிக்கொடுத்து அவரை ஏமாற்றமடையச் செய்தீர்கள். சிறிய தொகையை விரும்பி
ஏற்றுக்கொண்டீர்கள்; பெரிய தொகையின்மீது ஆசை காட்டவில்லை.
நான் உங்களுடைய ஸ்தானத்தில் (பதவியில்) இருந்திருந்தால் இந்த ரீதியில்
செயல்பட்டிருக்கமாட்டேன்.”
அதைக் கேட்ட பாபா, ''சாம்யா
(சாமா), உனக்குப் புரியவில்லை. நானென்னவோ
எதையும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்வதில்லை. கடனைத் திருப்பிக் கேட்பவள் இந்த
மசூதிமாயீ. கொடுப்பவர் தம் கடனிருந்து விடுபடுகிறார். எனக்கு
என்ன வீடா, வாசலா, குடும்பமா,
குழந்தையா? நான் ஏன் செல்வத்தை நாடவேண்டும்?
எந்த வகையில் பார்த்தாலும் நான் விசாரமில்லாதவன்; தொல்லைகளற்றவன். கடன், விரோதம்,கொலைக்குற்றம் இவற்றிருந்து யுகமுடிவு பரியந்தம் முயன்றாலும்
விடுபடமுடியாது. நீ இடர் வந்தபோது தேவிக்கு (ஸப்த சிருங்கி) நேர்ந்துகொண்டாய்.
உன்னை அதிருந்து விடுவிப்பதற்கு நான் படாதபாடு படவேண்டியிருந்தது. தேவைப்படும்
நேரத்தில் மிகப் பணிவாகவும் இரக்கமாகவும் கெஞ்சுகிறாய்; காரியம்
கைகூடிய பிறகு அதைப்பற்றிச் சிறிதும் கவலைப்படுவதில்லை. என்
பக்தர்களில் எவர் கடன் பாக்கி இல்லாதவரோ அவரே எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறார்.
'ஆரம்பகாலத்தில்
இந்த மனிதர் ஏழையாக இருந்தார். ரூ. 15/- சம்பளம்
கிடைத்தால், முதல் சம்பளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதாக
வேண்டிக்கொண்டார். ஆனால், பிறகு அதை அறவே மறந்துவிட்டார்.
'பதினைந்து முப்பதாகி, முப்பது அறுபதாகி,
அறுபது நூறாகியது. அவருடைய சம்பளம் இரண்டு மடங்காகவும் பின்பு
நான்கு மடங்காகவும் ஆக ஆக, அவருடைய மறதியும் அதிகமாகியது.
காலக்கிரமத்தில் அவர் ரூ. 700/- சம்பாதிக்க ஆரம்பித்தார். கர்மவசத்தால் (நல்வினைப்பயனால்) இன்று இங்கு
வந்திருக்கிறார். ஆகவே, தக்ஷிணை என்ற பெயரில்
அவரிடமிருந்து என்னுடைய பதினைந்து ரூபாயைக் கேட்டேன்”.
சரி இப்போது இரண்டாமவரின்
கதையைக் கேட்பாயக:
இது நாளை……..
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு
அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment