குருவாக்கியத்தின்மீது
அசைக்கமுடியாத விசுவாசத்தை அவருக்கு ஆஸனமாக அளிப்போம். எல்லா ஸங்கல்பங்களிருந்தும்
துறவேற்கிறேன் என்னும் ஸங்கல்பத்துடன் பூஜையை ஆரம்பிப்போம்.
சிலை,
யாககுண்டம், அக்கினி, ஒளி, சூரியமண்டலம், நீர்,
பிராமணர் ஆகிய வழிபாட்டுக்குரிய புனிதமான ஏழு பொருள்களுக்கும்
இயற்கை சக்திகளுக்கும் மனிதர்களுக்கும் மேலானவர் குருராஜர். வேறெதிலும் மனத்தைச்
சிதறவிடாது ஒருமுகமாக அவரை வழிபடுவோம்.
அனன்னியபாவத்துடன்
குருவினுடைய பாதங்களில் சரணடைந்து விட்டால்,
குரு மாத்திரம் அல்லர், இறைவனும்
பிரீதியடைவான். குருவழிபாட்டின் அற்புதம் இதுவே. குருபக்தர்கள்
இதை சுயமாக அனுபவிக்க வேண்டும்.
குருபக்தருக்கு 'உடல்தான் நான்’ என்னும் உணர்விருக்கும்வரைதான் அவருக்கு மனித வடிவில் ஒரு குரு தேவைப்படுகிறார். 'நான் கேவலம் இவ்வுடல் அல்லேன்’ என்னும் விழிப்பைப் பெற்றவருக்கு நிராகாரமான குருவே தேவையை நிறைவேற்றுகிறது. இது சாஸ்திரங்களின் கூற்று.

ஸ்ரீ சாய் சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment