Tuesday, November 19, 2013

ஒரு பக்தையின் அனுபவம்


நான் என்னுடைய சொந்த ஊரில் இருக்கும்போது ஒவ்வொரு பிரதோஷ தினத்தன்றும் நான் சிவபெருமானின் ஆலயத்துக்கு செல்வது உண்டு. நான் சென்னையில் வேலையில் சேர்ந்த பிறகு அடிக்கடி மயிலையில் உள்ள சாயிபாபாவின் ஆலயத்துக்கு செல்வது உண்டு.
நான் உள்ள இடம் அங்கிருந்து வெகு தொலைவில் இருந்ததினால் காலை அல்லது மாலையில்தான் அங்கு செல்வேன். அது போல சிவன் ஆலயங்கள் உள்ள இடம் எனக்குத் தெரியாது என்பதினால்  பிரதோஷத்துக்கு நான் சிவன் ஆலயத்துக்கு செல்வதை நிறுத்தி இருந்தேன்.
ஒருநாள் ஞாயிற்றுக் கிழமை அன்று பொழுது போகாமல் இருந்தேன். ஆகவே பாபாவின் ஆலயத்துக்கு செல்ல நினைத்தும் நேரமாகி விட்டதினால் அங்கு செல்ல மனமும் இல்லாமல் இரு மனதுடன் இருந்தேன்.

ஆனாலும் யாரோ ஒருவர் கண்டிப்பாக நான் பாபாவின் ஆலயத்துக்கு அன்று செல்ல வேண்டும் என்று கூறியதினால் பாபாவின் ஆலயத்துக்கு சென்று விட்டு திரும்பினேன். ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.  ஆனாலும் பாபாவின் தரிசனத்தை முடித்துக் கொண்டு வந்தேன். நானும் வீடு திரும்பியவுடன் எப்போதும் கேட்பது போல என்னுடைய தாயார் அன்று பிரதோஷம் என்பதினால் ஏதாவது  சிவன் கோவிலுக்குப் போனாயா என்று கேட்டார்கள். அதைக் கேட்ட நான் அதிர்ந்து போய் இன்று உண்மையாகவே பிரதோஷ தினமா என்று கேட்டேன்.  நாள்காட்டியை பார்த்து அன்று பிரதோஷ தினம் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டேன். ஆகவே பாபா என்னை அறியாமலேயே பிரதோஷ தினத்தன்று என்னை ஆலயத்துக்கு வரவழைத்துக் கொண்டு தான் யார் என்பதைக் காட்டி விட்டார்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...