Tuesday, November 5, 2013

பிரேமை



      பிரேமை சிறிதும் இல்லாத மனிதனே இல்லை. ஒருவருக்கு ஒன்றின்மேல் பிரேமை; மற்றவருக்கு வேறொன்றின்மேல் பிரேமை. எதைப் பிரேமை செய்கிறார்கள் என்பதில்தான் மக்கள் வேறுபடுகிறார்கள்.
      சிலருக்கு சந்ததியின்மேல் பிரேமை. மற்றவர்களுடைய பிரேமை செல்வத்தின்மேல், புகழின்மேல், ஸம்பத்துகளின்மேல், உட­ன்மேல், வீட்டின்மேல், உலகியல் கீர்த்தியின்மேல் இருக்கலாம். சிலருக்கு அறிவை விருத்தி செய்துகொள்வதில் பிரேமை. 
      ஒருவர் விஷயசுகங்களில் தாம் செலுத்தும் பிரேமை அனைத்தையும் ஒன்றுசேர்த்து வடித்து, இறைவனின் பாதங்கள் என்னும் அச்சில் ஊற்றிவிட்டால், அது பக்தியாக மலரும். 
      ஆகவே, உம்மிடம் இருக்கும் உலகியல் பொருள்கள் அனைத்தையும் ஸமர்ப்பித்துவிட்டு, உம்மையே ஸாயீபாதங்களுக்கு சரணமாக்கிவிடுங்கள். அவர் உம்மிடம் கிருபை காட்டுவார்; இது ஒரு சுலபமான உபாயம். 
      மக்கள் இம்மாதிரியான சொல்பமான சாதனைகளால் பெருலாபத்தை அடையலாம். நிலைமை இவ்வாறிருக்க, ஏன் இந்த உதாசீனம்? 
     'மிகப் பெரிய லாபங்களை அல்பமான சாதனைகளால் பெறமுடியுமென்றால், பொதுவாக ஏன் மக்கள் இதில் ஈர்ப்பு இல்லாமல் அசிரத்தையாக இருக்கிறார்கள் என்று கதை கேட்பவர்களுக்கு சந்தேகம் வருவது இயற்கையே. 
     அதற்கு ஒரே காரணம்தான் உண்டு. இறைவனுடைய அருள் இல்லாது இந்த ஆவல் எழாது. இறைவன் அருள்செய்ய விரும்பி முகம் மலர்ந்துவிட்டால், கதை கேட்கவேண்டும் என்னும் விருப்பமும் ஆவலும் உடனே எழும். 

      ஆகவே ஸாயீயை சரணடையுங்கள்; இறைவன் உங்களுக்கு அருள் புரிவான். இக் கதையைக் கேட்கவேண்டுமென்ற விருப்பமும் ஆவலும் எழும்; சுலபமான ஆன்மீக ஸாதனையை அடைந்தவர்களாவீர்கள். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...