பீஷ்மா
கல்விகேள்விகளில் வல்லவர்; இதிஹாஸ புராணங்களை நன்கு அறிந்தவர்.
ஆகையால், அவருடைய காலட்சேபம் மிகவும்
ரசிக்கக்கூடியதாக அமைந்தது. கேட்டவர்கள் அபரிமிதமான ஆனந்தமடைந்தனர்.
பாபாவின் முகம் மலர்ந்தது. எவ்விதமாக அனுமதி தந்தாரோ, அவ்விதமாகவே பக்தர்களை பஜனையுடனும் காலட்சேபத்துடனும் கொண்டாட்டத்தை நடத்தும்படி செய்தார்.
பாபாவின் முகம் மலர்ந்தது. எவ்விதமாக அனுமதி தந்தாரோ, அவ்விதமாகவே பக்தர்களை பஜனையுடனும் காலட்சேபத்துடனும் கொண்டாட்டத்தை நடத்தும்படி செய்தார்.
காலட்சேபத்தில் ஸ்ரீராமஜனனக் கட்டம் வந்தபோது குலால் என்னும் வர்ணப்பொடி எங்கும் தூவப்பட்டது. அதில் சிறிது பாபாவின் கண்ணில் விழுந்துவிட்டதால், கௌஸல்யாவின் அரண்மனையில் குழந்தையாக இருப்பதற்குப் பதிலாக, பாபா நரஸிம்ஹ அவதாரம் எடுத்துவிட்டார்.
ஆனால், வர்ணப்பொடி கண்ணில் விழுந்ததென்னவோ ஒரு சாக்குதான். ஸ்ரீராமாவதாரத்தில் மஹாவிஷ்ணு ராவணனை வதம் செய்து ராக்ஷஸர்களின் கொடூரச் செயல்களை அழித்ததை, காலட்சேபம் நடந்த நேரத்தில் பிரதிபப்பதற்காகவே அவர் கோபாவேசம் கொண்டார்.
உக்கிர நரஸிம்ஹரைப்போல் திடீரென்று கோபம் பொங்கி எழுந்தது; சாபங்களையும் வசவுகளையும் சரமாரியாகப் பொழிந்து தள்ளிவிட்டார்.
தொட்டில் தூள்தூளாகப் போகிறதென்று நினைத்து ராதாகிருஷ்ணபாயி மிகவும் அதிர்ந்துபோய்விட்டார். எப்படி அந்தத் தொட்டிலைக் காப்பாற்றுவது என்பது அவருக்குப் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. தொட்டிலைச் சீக்கிரமாக அவிழ்த்துவிடவேண்டுமென்று அவசரப்படுத்தித் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்தார். ஆகவே, காகா மஹாஜனி தொட்டிலை அவிழ்ப்பதற்குச் சென்றார்.
இது பாபாவை மிகவும் எரிச்சலூட்டியது. அவர் பயங்கரமாகவும் காகாவை அடிக்கப்போவது போலவும் ஆக்ரோஷத்துடன் தொட்டிலை நோக்கி ஓடினார். தொட்டிலைக் கழற்றும் முயற்சி நிறுத்தப்பட்டது; பாபாவும் அமைதியடைந்தார்.
பின்னர், பிற்பகல் தொட்டிலை அவிழ்க்க அனுமதி வேண்டப்பட்டபோது பாபா 'இன்னும் என்ன தேவை இருக்கமுடியும்? ஆனால், ஸாயீயின் திருவாய்மொழி என்றுமே சோடைபோனதில்லையே?’ என்று நான் யோசித்தேன். உற்சவம் இன்னும் ஸம்பூரணமாகவில்லை என்று என் மனத்துள் அப்போதுதான் உதித்தது.
அன்றைய உற்சவம் நடந்துவிட்டது; ஆனால், மறுநாள் 'கோபாலகாலா’ நடக்காமல் உற்சவம் முடிந்துவிட்டது என்று எவ்வாறு சொல்ல முடியும்?
இப்படியாக, பஜனை, கோபாலகாலா எல்லாம் அடுத்தநாள் கொண்டாடப்பட்டன. இதெல்லாம் நடந்து முடிந்தபிறகு பாபா தொட்டிலை அவிழ்த்துவிட அனுமதியளித்தார்.
அடுத்த வருடம் காலட்சேபம் செய்ய பீஷ்மா கிடைக்கவில்லை. ஆகவே, பாலபுவா ஸாதார்கர் காலட்சேபம் செய்வதற்கு அணுகப்பட்டார். ஆனால், அவரோ 'பிர்ஹாட் ஸித்த கவடே’ என்னும் ஊருக்குக் காலட்சேபத்திற்காகப் போகவேண்டியிருந்ததால் அவரும் கிடைக்கவில்லை.
ஆகவே, காகா மஹாஜனி, நவீன துகாராம் என்று பிரஸித்தி பெற்ற பாலபுவா பஜனியை அழைத்துக்கொண்டு வந்தார். ஸ்ரீராமஜன்ம உற்சவத்தை பாலபுவா பஜனி நடத்திவைத்தார்.
அவர் கிடைக்காமல்
போயிருந்தாலும் காகா மஹாஜனியே காலட்சேபம் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்
டிருப்பார். அவருக்கு தாஸகணு இயற்றிய ஸ்ரீராமஜனனக் காதைச் செய்யுள்கள் மனப்பாடம்.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment