என் பெயர்
குமார் என்பது. நான் தமிழ்நாட்டை சேர்ந்தவர். திருச்சியில் ஒரு நிறுவனத்தில் வேலை
செய்து வந்தேன். எனக்கு கிடைத்த சிறு சம்பளத்தில் 2008 ஆம் ஆண்டு திருமணம் ஆன நான் என் குடும்பத்துடன் எதோ சமாளித்தபடி வாழ்ந்து வந்தேன். 2011 ஆம் ஆண்டு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் தொழிலாளிகள்
குறைக்கப்பட்டார்கள். சம்பளமும் குறைந்தது.
ஆனாலும் நான் கஷ்டப்பட்டு என் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன். ஒன்பது வார சாயி விரதத்தையும்
துவக்கினேன். திடீர் என எனக்கு துபாய் நாட்டில் இருந்து நான் முன்னர் எப்போதோ போட்டிருந்த ஒரு விண்ணப்பத்திற்கு இண்டர்வியூ வந்தது. அதில் தேர்வு
பெற்று தற்போது துபாயில் வேலைக் கிடைத்து பாபாவின் அருளினால் நிம்மதியாக
இருக்கிறன். அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.
ஓம் சாயி
ராம்.
No comments:
Post a Comment