Thursday, November 7, 2013

பம்பாய் பெண்மணி

பம்பாயில், காயஸ்த பிரபு ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, பிரசவத்தின் போதெல்லாம் கடும் வேதனையடைந்தாள்.  ஒவ்வொரு முறை தான் கர்ப்பமானதும் என்ன செய்வதென்று தெரியாமல் அவள் பீதியடைந்தாள்.  பாபாவின் ஒரு பக்தரான கல்யாணைச் சேர்ந்த ராமமாருதி என்பவர் சுகப்பிரசவத்திற்க்காக அவளை ஷீர்டி அழைத்துச் செல்லும்படி அவளது கணவனுக்கு அறிவுரைத்தார்.  மீண்டும் அவள் கருவுற்றபோது கணவனும் மனைவியும் ஷீரடிக்குச் சென்று அங்கு சில மாதங்கள் தங்கி பாபாவை வணங்கி அவர் தம் கூட்டுறவால் ஆய பலன்களையெல்லாம் அடைந்தனர்.
     சில நாட்களுக்குப்பின் பிரசவ நேரம் வந்த்து.  வழக்கம் போல் கருப்பையிலிருந்து குழந்தை வரும் வழியில் தடங்கல் ஏற்பட்டது.  பிரசவ வேதனையை அவள் அனுபவித்தாள்.  என்ன் செய்வதென்றே  தெரியவில்லை.  ஆனால் பாபாவை நோக்கி நிவாரணத்திற்க்காகப் பிரார்த்தனை செய்தாள்.  இத்தருணத்தில் பக்கத்தில் குடியிருந்த ஒரு பெண்மணி வந்து சேர்ந்தாள்.  பாபாவினைத் தொழுது பிரார்த்தனை செய்தபிட் உதிக் கலவையை பருகுவதற்க்கு அவளிடம் கொடுத்தாள்.  ஐந்தே நிமிடங்களில் அப்பெண் பத்திரமாகவும், வலியேதுமின்றியும் பிரசவித்தாள்.
     பிறந்த குழந்தை அதன் தலைவிதிப்படி இறந்தே பிறந்தது.  ஆனால் தாயோ கவலையினின்றும், வலியினின்றும் நீங்கியவளாய் பத்திரமான பிரசவத்துக்காகப் பாபாவிற்க்கு நன்றி செலுத்தி எப்போதும் அவர்பால் நன்றியுள்ளவளாய் இருந்தாள்
ஸ்ரீ சாயியைப் பணிக

அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

மூலம்: ஸ்ரீ சாய் சத்சரிதம் அத்தியாயம் 34

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...