Monday, November 11, 2013

டாக்டர் பிள்ளை


          டாக்டர் பிள்ளை ஒரு சமயத்தில் நரம்புச்சிலந்தி நோய் கண்டு வருந்தினார். ஒன்றன்பின் ஒன்றாக ஏழு சிலந்திகள் தோன்றின. டாக்டர் மிகவும் கஷ்டப்பட்டார்.  இந்த டாக்டர் ஸாயீ பாபாவின்மீது மிகுந்த பிரேமை வைத்திருந்தார். பாபாவும் அவரைச் செல்லமாக பாவூ என்று அழைத்தார். அவரை தினமும் மிகுந்த அன்புடன் குசலம் விசாரிப்பார். 
        மசூதியில், மரத்தாலான கிராதியின் அண்மையே காலையிலும் மாலையிலும் பாவூவின் இடம். நெடுநேரம் பாபாவும் பாவூவும் அநேக விஷயங்களைப்பற்றிப் பரஸ்பரம் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வர். 
பாவூ இல்லாமல் பாபா சிலீம் பிடிக்கமாட்டார்; பீடி பிடிக்கும்போது பாவூ அருகில் இருக்கவேண்டும்; நியாயம் பேசுவதற்கும் பாவூ அருகில் இருக்கவேண்டும். சுருங்கச் சொன்னால், பாவூ இல்லாமல் பாபாவுக்குப் பொழுது இனிமையாக நகராது. 
        அதுவே அப்போதைய நிலைமை. ஆயினும் நரம்புச்சிலந்தி நோயின் வேதனை பொறுக்கமுடியாமற்போன நிலையில் பாவூ படுத்த படுக்கையாகிவிட்டார். வ­லியும் வேதனையும் அவருக்கு மனக்கொந்தளிப்பையும் சோகத்தையும் அளித்தன. இவ்வளவு நெருக்கடியான நிலையிலும் அவருடைய வாய் இடைவிடாது ஸாயீ நாம ஜபத்தைச் செய்துவந்தது. ''போதும், இந்த சோதனை (நரக வேதனை); மரணமே இதைவிட மேல்என்று சொல்­லி அவர் ஸாயீயிடம் சரணாகதி அடைந்தார். 
           அவர் பாபாவுக்கு ஒரு செய்தி அனுப்பினார், ''இந்தத் துன்பத்தை அனுபவித்து நான் ஓர் எல்லைக்கே வந்துவிட்டேன். அங்கமெல்லாம் எத்தனையோ ரணங்கள். இனியும் சகித்துக்கொள்ள எனக்குத் திராணியில்லை.
    நல்வழி நடக்கும் நான் ஏன் இந்த வேதனையை அனுபவிக்கவேண்டும்? கெட்ட செயல்களின் பாதையில் நான் சென்றதில்லையே. நான் என்ன பாவம் செய்தேன், என்மீது இவ்வளவு துன்பத்தையளிக்கும் அவஸ்தை இறங்கியிருக்கிறது? நரம்புச்சிலந்தி நோயின் வேதனை மரணவேதனைக்கு ஒப்பாக இருக்கிறது. பாபா, என்னால் இப்பொழுது இந்த வேதனையை சகித்துக்கொள்ள முடியவில்லையே?  நான் மரணமடைவதே நல்லது. என்ன யாதனை மீதமிருக்கிறதோ அதை அடுத்த பிறவியில் அனுபவித்துக்கொள்கிறேன். -- 
      'அனுபவிக்க வேண்டியதை அனுபவித்தே தீரவேண்டும். அதற்காகவே பல ஜன்மங்கள் எடுக்கவேண்டியிருக்கலாம். ஊழ்வினையால் விதிக்கப்பட்டதைத் தவிர்க்கமுடியாது. மந்தமதி படைத்த எனக்கும் இது தெரிந்திருக்கிறது. என்னுடைய கர்மவினையை அனுபவிப்பதற்குப் பத்து ஜன்மங்கள் வேண்டுமானாலும் சந்தோஷமாக எடுக்கிறேன். ஆனால், இந்த ஜன்மத்தை இத்தோடு முடித்துக் கொடுத்து எனக்கு தருமம் செய்யுங்கள்.
          போதும், போதும், போதும் இந்த ஜன்மம். எனக்கு இந்த ஜன்மத்தி­ருந்து விடுதலை தாருங்கள். என்னால் இந்தக் கஷ்டத்தை இனியும் அனுபவிக்கமுடியாது. இதுவே உங்களிடம் நான் செய்யும் பிரார்த்தனை, ஒரே பிரார்த்தனை”.
          சித்தர்களின் அரசராகிய ஸாயீ இந்தப் பிரார்த்தனையைக் கேட்டு தயையால் உள்ளம் நெகிழ்ந்தார். டாக்டர் பிள்ளைக்கு ஆறுதல் கூற அவர் பொழிந்த கருணாமிருதத்தைக் கேளுங்கள்.  மேலும், பக்தர்களின் கற்பகவிருக்ஷமான ஸாயீ, பக்தனின் இன்னல் தரும் அவஸ்தையை விலக்குவதற்கு எப்படி ஓர் உபாயத்தைத் துவக்கிவைத்தார் என்பதையும் கேளுங்கள்.  டாக்டர் பிள்ளை பாபாவுக்கு அனுப்பிய செய்தி தீக்ஷிதரால் கொண்டுவரப்பட்டது. அதைக் கேட்ட பாபா தீக்ஷிதரிடம் சொன்னார், ''போய் அவரிடம் சொல்லுங்கள். 'நிர்பயமான மனத்துடன் இருக்கவும் என்று.
         பாபா மேலும் டாக்டருக்குப் பாடம் சொல்­யனுப்பினார், ''இந்த அவதியைப் பத்து ஜன்மங்களுக்குப் பரப்புவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பத்து நாள்களுக் குள்ளாகவே பரஸ்பரம் பகிர்ந்துகொள்வதன்மூலம் இதை ஒழித்துவிடலாம். '', உமக்கு இகவுலகில் நல்வாழ்வும் பரவுலகில் மேன்மையும் மோக்ஷமும் அளிக்கக்கூடிய ஸமர்த்தன் நான் இங்கு உட்கார்ந்திருக்கும்போது, நீர் மரணத்தை வேண்டுகிறீரே? இதுதான் உமது புருஷார்த்தமோ (நீர் அடைய வேண்டியதோ)? அவரை எழுப்பித் தூக்கிக்கொண்டு இங்கு வாருங்கள். அனுபவிக்கவேண்டியதை அனுபவிக்கட்டும். பயத்தால் அவர் மனங்கலங்க வேண்டா. அவரை இங்கு உங்களுடைய முதுகிலாவது தூக்கிக்கொண்டு வாருங்கள்.
     ஆகவே, அந்த நிலையிலேயே டாக்டர் உடனே மசூதிக்குக் கொண்டுவரப்பட்டார். பாபா தாம் சாய்ந்துகொண்டிருந்த தலையணையை அவருக்குக் கொடுத்தார்.   தலையணை பாபாவின் வலப்பக்கத்தில், பக்கீர் பாபா வழக்கமாக உட்காரும் இடத்தில் வைக்கப்பட்டது. ''இதன்மேல் சாய்ந்துகொண்டு அமைதியாகப் படுத்துக்கொள்ளுங்கள். அனாவசியமாக மனத்தைக் குழப்பிக்கொள்ளாதீர் என்று பாபா சொன்னார். 

          ''மெதுவாகக் காலை நீட்டி உட்காரும். அது சிறிது நிவாரணம் அளிக்கும். ஊழ்வினையை அனுபவித்துத்தான் தீரவேண்டும். அதுவே வினையைத் தீர்க்கும் வழி. வேறு வழி ஏதும் இல்லை. வேண்டுவதோ வேண்டாததோ, சுகமோ துக்கமோ, அமிருதமோ விஷமோ -- இந்த இரட்டைச் சுழல்கள் நாம் சேர்த்த வினைகளுக்கு ஏற்றவாறு வெள்ளம்போல் நம்மை நோக்கிப் பாய்கின்றன. ஆகவே அவற்றைக் கண்டு சிரிக்கவும் வேண்டா, அழவும் வேண்டா.
     'எது எது நேர்கிறதோ, அது அதைப் பொறுத்துக்கொள்ளவும். அல்லாமா­க் நம் ரட்சகர்; எப்பொழுதும் அவரையே தியானம் செய்வீராக. பாரம் சுமப்பவர் அவரே. மனம், செல்வம், உடல், பேச்சு ஆகியவற்றால் அவருடைய பாதங்களில் சரணடையுங்கள். நிரந்தரமாக அவருடைய நாமத்தை ஸ்மரணம் செய்தால் லீலைகள் அனுபவமாகும்.
       டாக்டர் பிள்ளை அப்பொழுது சொன்னார், ''நானாஸாஹேப் சாந்தோர்கர் புண்ணின்மேல் கட்டுப்போட்டிருக்கிறார்; ஆயினும் நிவாரணம் சிறிதும் ஏற்படவில்லை.
         பாபா பதில் சொன்னார், ''நானா ஒரு பித்துக்குளி.  அந்தக் கட்டைப் பிரித்துவிடும்; இல்லையெனில் நீர் செத்துப்போவீர். ஒரு காக்கை வந்து இப்பொழுது உம்மைக் கொத்தும்; அதன் பிறகு நீர் குணமடைவீர். 
         அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண் டிருந்தபோது, அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதற்காக அப்துல்லா அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராதவிதமாக, அடுத்ததாக என்ன நடந்தது தெரியுமா? 
மசூதி ஏற்கெனவே ஒரு குறுகலான இடம்; பக்தர்களும் பலர் இருந்தனர். போதாததற்கு டாக்டர் பிள்ளையின் நிலைமைவேறு ஒரு நெருக்கடியை உண்டுபண்ணியிருந்தது. அப்துல்லாவுக்குக் கால் வைப்பதற்கும் வசதி இல்லாதிருந்தது. 
          மேலும், அப்துல் காரியமே கண்ணாக அகல் விளக்குகளுக்கு எண்ணெய் நிரப்புவதிலேயே குறியாக இருந்தார். பிள்ளை அங்கு உட்கார்ந்திருந்ததை ஒருகணம் கவனிக்கவில்லை. அப்பொழுது சற்றும் எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது. 
          அப்துல்லாவால்தான் என்ன செய்ய முடியும் பாவம் நடப்பது நடந்தே தீரும் அன்றோ? வேதனை குறைவதற்காக நீட்டி வைத்திருந்த பிள்ளையின் காலைத் தவறுதலாக அப்துல் மிதித்துவிட்டார். 
ஏற்கெனவே வீங்கிப் போயிருந்த பிள்ளையின் காலை அப்துல்லாவின் பாதம் பதம்பார்த்துவிட்டது. ''ஐயோ: பிள்ளை பயங்கரமாக அலறினார்; வ­லியால் துடிதுடித்தார்.  அந்த அலறல் அவருடைய தலையைத் துளைத்துக்கொண்டு சென்றது போலும்.  கூப்பிய கைகளுடன் அவர் பாபாவின் கருணைநாடி வேண்ட ஆரம்பித்தார்.
     கட்டி உடைந்து, சீழ் வெளிவர ஆரம்பித்தது. பிள்ளை மிகக் கலவரமடைந்து ஒரு பக்கம் ஓவென்று அழுதார்; மறுபக்கம் பாட ஆரம்பித்தார். '', கரீம் (அல்லா) என் நிலைமையைப் பார்த்து மனமிரங்கமாட்டீரா? ரஹிமான் (கருணாமூர்த்தி) என்றும் ரஹீம் (தயாளர்) என்றும் உம்மை அழைக்கின்றனரே!  நீரே இரண்டு உலகங்களுக்கும் சுல்தான் (சக்கரவர்த்தி);  இவ்வுலகமே உம்முடைய மஹிமையின் வெளிப்பாடன்றோ! இவ்வுலக வியாபாரம் அனைத்தும் ஒரு முடிவுக்கு வரும்; உம்முடைய புகழோ என்றும் நிலைத்திருக்கும்!  நீங்களே என்றும் உம் அடியவர்களின் அடைக்கலம்.
       குத்துவது­ அவ்வப்பொழுது வந்து போயிற்று. டாக்டர் பிள்ளையின் மனம் கொந்தளித்தது; அவர் சோர்வடைந்து பலமிழந்துபோனார். சுற்றியிருந்தவர்கள் அனைவரும் ஈதனைத்தும் பாபாவின் விளையாட்டே என்றறிந்தனர். 
        பாபா சொன்னார், ''பாவூவைப் பாருங்கள்; பாட ஆரம்பித்துவிட்டார்.பிள்ளை பாபாவைக் கேட்டார், ''பாபா, அந்தக் காக்கை வந்து என்னுடைய புண்ணைக் கொத்தப் போகிறதா?
   பாபா சொன்னார், ''நீர் போய் வாடாவில் அமைதியாகப் படுத்துக்கொள்ளும். காக்கை கொத்துவதற்கு மறுபடியும் வாராது.
         ''உம்முடைய காலை மிதித்தாரே! , அவர் இப்பொழுது வரவில்லை? அவர்தான் உம்மைக் கொத்திவிட்டுப் புண்ணின் வ­லியையும் குறைத்துவிட்டுப் பறந்துபோன காக்கை
       காக்கையாவது, கொத்துதலாவது, இந்த நிகழ்ச்சியை நடத்திவைத்தவர் அவரே. காக்கை அப்துல்லாவின் உருவத்தில் தோன்றியது. பாபா தாம் சொன்னது உண்மையென்பதை நிரூபித்துவிட்டார்õ            பாபாவின் வாக்கு வெறும் சொற்களல்ல; பிரம்மதேவன் எழுதும் தலையெழுத்துக்கு சமம். மனிதனுடைய கர்மவினையின் பலன்களையும் தடுத்து நிறுத்தும் சக்தி வாய்ந்தவை. அற்ப அவகாசத்திற்குள் (சிறிய இடைவெளியில்) பாவூ குணமடைந்தார். 
       உதீயைத் தடவுவதும் நீருடன் சேர்த்து உட்கொள்ளுவதுமே மருந்தும் அனுபானமும் (மருந்துக்கு வீரியம் சேர்க்க இணைத்து அருந்தும் பானமும்). பத்தாவது நாளன்று பொழுது விடிந்தபோது வியாதி வேரோடு அறுக்கப்பட்டது.  புண்ணி­ருந்து ஏழு நரம்புச்சிலந்திப் புழுக்கள் உயிரோடு வெளிவந்தன. பொறுக்க முடியாத வேதனை ஒழிந்தது. டாக்டர் பிள்ளையினுடைய துன்பம் ஒரு முடிவுக்கு வந்தது. 
            பிள்ளை இந்த அற்புதத்தைக் கண்டு ஆச்சரியமடைந்தார். பாபாவின் லீலையை நினைத்து நினைத்துக் கண்களி­ருந்து பிரேமதாரை வடித்தார்.   பிள்ளை பாபாவின் பாதங்களில் விழுந்தார். உணர்ச்சிவசத்தால் அவருக்குத் தொண்டை அடைத்தது. வாயி­ருந்து ஒரு வார்த்தையும் வெளிவரவில்லை. 
ஸ்ரீ சாயியைப் பணிக

அனைவருக்கும் சாந்தி நிலவட்டும்

மூலம்: ஸ்ரீ சாய் சத்சரிதம் அத்தியாயம் 34

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...