கர்மம், ஞானம், யோகம், பக்தி இந்நான்கும் இறைவனை அடையும் வழிகளாகும். இந்நான்கு பாதைகளும்
நம்மை வெவ்வேறு திசைகளில் அழைத்துச்சென்றாலும், கடைசியில் போய்ச்சேருமிடம் ஈசுவரப் பிராப்தியே (இறைவனை அடைவதே).
பக்திமார்க்கம் பள்ளம் படுகுழிகள் நிறைந்த கருவேலங்காட்டைக் கடந்து செல்வதுபோலக் கடினமானது. ஒருவரே நடக்கக்கூடிய ஒற்றையடிப் பாதையாக இருந்தாலும், நேராக இறைவனின் அண்மைக்கு அழைத்துச் செல்லும்.
இதைக் கடப்பதற்கு சுலபமான வழி, முட்களைத் தவிர்த்து ஒவ்வொரு அடியாக பயமின்றி எடுத்துவைக்க வேண்டியதுதான். இதையே அன்னையாகிய குரு தெளிவாக எச்சரிக்கிறார்.
மனமென்னும் செழிப்பும் வீரியமுமுள்ள மண்ணில் பக்தி என்னும் நீரைப் பாய்ச்சினால், வைராக்கியம் முளைக்கிறது; ஞானம் மலர்கிறது; பரவசநிலை பீறிட்டு கைவல்யம் (வீடுபேறு-மோட்சம்) கைகூடுகிறது. ஜனனமும் மரணமும் நிச்சயமாக விலகிவிடுகின்றன.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment