Sunday, November 10, 2013

சீரடியில் ராம நவமி திருவிழா








கோபால் குண்ட் என்ற பெயர்கொண்ட பக்தர் ஒருவர் இருந்தார். அவர் இடைவிடாது பாபாவின் நாமத்தை ஜபம் செய்துவந்த பரமபக்தர்.
அவருக்குப் புத்திரபாக்கியம் இல்லாதிருந்தது. ஸாயீயினுடைய ஆசீர்வாதத்தால் அவருக்கு ஒரு புத்திர ரத்தினம் பிறந்தான். அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். 

      சிர்டீயில் கிராம மக்கள் அனைவரும் உல்லாசப்படும் வகையில் ஒவ்வொரு வருஷமும் ஒரு திருவிழா அல்லது உருஸ் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் உதித்தது. 

     தாத்யா கோதே, தாதா கோதே, மாதவராவ் தேச்பாண்டே போன்ற கிராம முக்கியஸ்தர்களும் இந்த யோசனையை மிகவும் விரும்பி அதற்குண்டான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தனர். 

     இம்மாதிரித் திருவிழாக்கள் கொண்டாடுவது என்பது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது; ஜில்லா கலெக்டரிடம் அனுமதி பெறவேண்டிய நிர்ப்பந்தமும் இருந்தது. 

     கலெக்டருடைய அனுமதி பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டபோது, கிராமத்தின் கணக்கர் காழ்ப்புணர்வோடு விஷமத்தனமாக அதை எதிர்த்தார்; தடங்கல்களை ஏற்படுத்தினார். 

     கிராமத்துக் கணக்கர் எழுப்பிய ஆட்சேபணைகளால், சிர்டீயில் திருவிழா கொண்டாடப்படக்கூடாது என்று கலெக்டர் ஆணையிட்டுவிட்டார்.

    ஆனால், பாபாவே சிர்டீயில் உருஸ் திருவிழா நடத்தும் யோசனையை விரும்பி, அவருடைய சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் அளித்திருந்தார். 

    ஆகவே, கிராம மக்கள் மனவுறுதியுடன் இவ்விஷயமாகத் தொடர்முயற்சி எடுத்தனர்; படாதபாடுபட்டனர். அவர்கள் எல்லாரையும் திருப்திசெய்யும் வகையில், முன்னர்ப் பிறப்பிக்கப்பட்ட ஆணை அதிகாரிகளால் ரத்துசெய்யப்பட்டது. 


   அதிலி­ருந்து, பாபாவினுடைய சம்மதத்துடன் இந்த வருடாந்திர உருஸ் திருவிழாவை ஸ்ரீராமநவமியன்று கொண்டாடுவது என்று முடிவுசெய்யப்பட்டது. தாத்யா கோதே எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். இத் திருவிழாவிற்குத் தற்காலத்திலும் மக்கள் திரள்திரளாக வருகிறார்கள்.

ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...