Sunday, November 17, 2013

ஸாயீயினுடைய விருப்பம்


ஷீரடியி­ருந்து புறப்படுவதற்குமுன் அவருடைய அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஸாயீயின் ஆக்ஞையைத் தாண்டுவது விக்கினங்களுக்கு அழைப்பு விடுவதாகும். 

      உம்முடைய இஷ்டம்போல் ஷீரடியி­ருந்து திரும்பினால், வழியில் கடக்கமுடியாத இன்னல்கள் தோன்றும்; கடைசியில் வெட்கமும் அனுதாபமுந்தான் மிஞ்சும். 

      ஷீரடியி­ருந்து திரும்புவதென்பது மேற்சொன்னவாறே; எங்களுடைய கதியும் அதுவே. ''நான் அழைக்காமல் எவரும் இங்கு வருவதில்லை. இது பாபாவின் திருவாய்மொழி. 


      ''என்னுடைய விருப்பம் இல்லாது யார் அவருடைய வாயிற்படியைத் தாண்டமுடியும்? தம்மிச்சையாகவே யார் ஷீரடிக்கு தரிசனம் செய்ய வரமுடியும்?

       நம்முடைய ஓட்டங்கள் அனைத்தும் கிருபாமூர்த்தியான ஸமர்த்த ஸாயீயின் ஆதீனத்தில் இருக்கின்றன. அவருடைய சித்தத்தில் கிருபை உதித்தால்தான் எவரும் தரிசனத்திற்கு வரமுடியும். 

ஸ்ரீ சாய் சத்சரித்திரத்திலிருந்து

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...