பாடுபடுவது ஆன்மீக லாபத்திற்காகவோ
உலகியல் சுபிக்ஷத்திற்காகவோ எதற்காக இருப்பினும் சரி, எங்கு ஸத்குரு படகோட்டியாக இருக்கிறாரோ அங்கு அவரே படகை அக்கரை
சேர்க்கிறார். ஸத்குரு என்ற வார்த்தை உள்ளத்தைக்
கிள்ளும்போதே ஸாயீ மனக்கண்முன் தோன்றுகிறார். நிஜமாகவே நம் முன் தோன்றித் தம்முடைய
வரம் நல்கும் கரத்தை நம் இதயத்தின்மீது வைக்கிறார்.
அவருடைய வரம் தரும் கரம், துனியிருந்து வந்த சாம்பலுடன் என்னுடைய நெற்றியில் படும்போது இதயம் ஆனந்தத்தால் பொங்குகிறது; அன்பினால் கண்ணீர் ஆறாகப் பெருகுகிறது.
குருவினுடைய கைத் தொடல் பிரளயகாலத்து அக்கினியாலும் அழிக்கமுடியாத சூக்கும சரீரத்தை அழித்துவிடும் அற்புதசக்தி வாய்ந்தது; கரம் தீண்டுவதாலேயே சூக்கும சரீரம் சாம்பலாகிவிடுகிறது
.
கடவுளைப்பற்றியோ புராணங்களைப்பற்றியோ தப்பித்தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவலி வருபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாஸ்திகர்களுக்குங்கூட, குருவினுடைய கைத் தொடல் சாந்தியை அளிக்கும்.
கடவுளைப்பற்றியோ புராணங்களைப்பற்றியோ தப்பித்தவறி ஏதாவது காதில் விழுந்தாலே தலைவலி வருபவர்களுக்கும் அல்லது உடனே வெடித்துச் சிதறிப் பிதற்றும் நாஸ்திகர்களுக்குங்கூட, குருவினுடைய கைத் தொடல் சாந்தியை அளிக்கும்.
தாமரை போன்ற தம் கையை அவர் நம் தலையின்மீது வைக்கும்போது, பலஜன்மங்களாகப் பரிபக்குவம் அடைந்த மலம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுகிறது; ஸாயீயின் அன்பார்ந்த பக்தர்கள் தூய்மையடைகின்றனர். அவருடைய சுந்தரமான உருவத்தின்மேல் பார்வை படும்போது பரவசத்தால் தொண்டை அடைக்கிறது; ஆனந்தக்கண்ணீர் பெருகுகிறது; இதயத்தில் அஷ்டபாவம் எழுகிறது.
'நானே அது’ என்னும் பாவம் எழுப்பப்பட்டு, நிஜமான ஆனந்தத்தை உள்ளிருந்து மலரச் செய்கிறது. நான்-நீ என்னும் வேறுபாட்டை முழுவதும் அழித்து, முழு முதற்பொருளோடு ஐக்கியமாகிவிடுவதைக் கொண்டாடுகிறது.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment