எனக்கு
நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவத்தின் மூலம், அன்பான ஒரு தாய் தந்தையைப் போல பாபா எப்போதும் என்கூடவே இருந்து
இக்கட்டான நேரத்தில் காப்பாற்றி ஆசி அளிக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்டேன்.
[புது தில்லி] ரஜௌரி கார்டனுக்கு மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, ராணி பாக் எனும் இடத்திற்கு ஆட்டோவில் செல்வது என் வழக்கம். புது
இடம் என்பதால் முதலில் பயமாக இருந்தாலும், நாளடைவில் இது பழகிவிட்டது. செல்லும் வழியெல்லாம் நாம ஜபம் செய்து
கொண்டிருப்பேன். ஸாயி என்னுடனேயே இருப்பதுபோல ஒரு தைரியத்தை இது அளித்தது.
வழக்கமாக
இந்த இடத்திற்குச் செல்ல ஆட்டோக்காரர் 50 ரூபாய்கள் கேட்பார். மீட்டர் எல்லாம் போடமாட்டார். ஆனால், அன்று நான் ஏறிய ஆட்டோக்காரரோ மீட்டரைப் போட்டுவிட்டார்.
அவருக்குக் கொடுப்பதற்கான பணத்தை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்லலாம் என எனது
ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தேன். நான் எடுத்து வந்ததாக நினைத்த தொகையை
விடவும் அது குறைவாகவே இருப்பதை உணர்ந்தேன். ரயில் பயணத்துக்கான கட்டணத்தைத் தவிர
அதிகப்படியாக வழக்கமாக அவர்கள் கேட்கும் 50 ரூபாய்கள் இருக்காது எனப் பட்டது. என்ன செய்வதெனத் தெரியாமல், பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். எனக்கு
நம்பிக்கை ஊட்டுவதுபோல, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று
ஆட்டோக்கள் பாபாவின் படம், உபதேசம் ஆகியவற்றைத் தாங்கி
என்னைக் கடந்து சென்றன. இது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
ரயில்
நிலையத்துக்கு சற்று முன்னதாகவே, மீட்டர் 42 ரூபாய் எனக் காட்டியபோது, ஆட்டோவை நிறுத்தி, இறங்கி ஆட்டோக்காரரிடம் அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு
நடக்கலானேன். மீதி கையில் இருந்த பணம் எனது மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்குப்
போதுமானதாக இருந்தது. 20 அடி தூரமே ரயில்
நிலையத்துக்கு இருக்கும்போது, அவ்வாறு நான் நிறுத்தி நடப்பதைக் கண்டு ஆட்டோக்காரரே வியந்தார்.
இதில்
பாபாவின் லீலை என்னவென்றால், வழக்கம்போல நான் மீட்டர் இல்லாத வாகனத்தில் ஏறியிருந்தால், அவர்கள் கேட்கும் அந்த 50 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, எனக்கு வீடு திரும்ப, ரயில் பயணம் செல்லும் கட்டணம் இல்லாது போயிருக்கும். அன்றைக்கெனப்
பார்த்து, மீட்டர் பொருத்திய ஆட்டோவில்
என்னை அழைத்துச் சென்று பாபா என்னை அந்த இக்கட்டான நிலையிலிருந்து [பழக்கமில்லாத
இடத்தில் நான் அலைந்து விடாமல்] காப்பாற்றினார். தில்லி இன்னும் எனக்கு அதிகப்
பழக்கமில்லாத ஊர் என்பதால் பாபா இவ்விதம் அருள் செய்தார்.
ஜெய் ஸாயி
ராம்.
No comments:
Post a Comment