மூல பரமாத்மா தனித்துச் செயல்படக்கூடிய
ஸித்திகள் நிறைந்தது. அதுவே ஸத், சித், ஆனந்தம் என்னும் முக்கூட்டான சக்தி. பக்தர்களுக்கு போதனை செய்வதற்காக
அவதாரம் செய்கிறது.
பிரம்மம் ஸச்சிதானந்தமாக மாறும்போது, மாயையும் செயலாற்ற ஆரம்பித்து ஸத்துவம், ராஜஸம், தாமஸம் ஆகிய குணங்களின்மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.
களிமண் ஓர் உருவமாக
வடிக்கப்படும்போது, பானை என்று பெயர் பெறுகிறது. பானை
உடைந்துவிட்டால், பெயரும் உருவமும் அடையாளமும் அதைவிட்டு
அகன்றுவிடுகின்றன.
இவ்வுலகமே மாயையிருந்து
உருவானதுதான். இவ்விரண்டுக்கும் உள்ள உறவு, காரண காரிய உறவுதான். உண்மையில், மாயையே ஓர் உருவத்தை ஏற்றுக்கொண்டு இவ்வுலகமாகக் காட்சியளிக்கிறது.
இவ்வுலகம்
தோன்றுவதற்குமுன், மாயையின் நிலை என்ன என்பதைச்
சிந்தித்தால், அது அவள் தோன்றாத நிலை, பரமாத்மாவுடன் ஒன்றுபட்ட, உருவெடுக்காத நிலை.
உருவெடுத்த நிலையோ
உருவெடுக்காத நிலையோ மாயை எப்பொழுதுமே பரமாத்ம ரூபம்தான். ஆகவே, இந்த மாயை பரமாத்மாவிருந்து பிரிக்கமுடியாத, பரமாத்மாவின் ஒரு பாகமே.
மாயை, தமோ குணத்திருந்து உயிரில்லாதவையும் நகர முடியாதவையும் ஆன பொருள்களை
சிருஷ்டி செய்தது. இது மாயையின் முதல் சிருஷ்டி காரியம்.
பிறகு, மாயையினுடைய ரஜோகுணம் பரமாத்மாவின் 'சித்’ குணத்துடன் சேர்ந்து உணர்வுள்ள, நகரக்கூடிய ஜீவராசிகளை, இக் கூட்டுச்சக்தி வெளிப்படும் வகையில் சிருஷ்டி செய்தது.
மாயையின் ஸத்துவ
குணம் புத்தியை சிருஷ்டி செய்தது. புத்தி ஆனந்தத்தில் ஊடுருவி, சிருஷ்டி என்னும் விளையாட்டைப் பூரணமாக்கியது.
இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக்கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால்,
இவ்வாறாக, மாயை பலவிதமாக மாற்றங்கள் அடையக்கூடியவள். அவள் அசைந்து செயல்பட ஆரம்பிக்காவிட்டால்,
முக்குணங்களும் தோன்றாநிலையிலேயே இருந்துவிடுகின்றன; சிருஷ்டி என்று ஏதும் நடப்பதில்லை.
முக்குணங்களுடன் செயல்பட ஆரம்பிக்கும்வரை மாயை தோன்றாநிலையிலேயே இருக்கிறாள். தானே ஒடுங்கிய நிலையில் இருக்கும்வரை அவள் தோன்றாநிலையிலேயே இருக்கமுடியும் என்று அறிந்துகொள்ள வேண்டும்.
மாயை பரமாத்மாவின் சிருஷ்டி; உலகம் மாயையின் சிருஷ்டி. ''பார்ப்பதனைத்தும் பிரம்மமே’ என்னும் சொற்றொடருக்கு, பரமாத்மா, மாயை, இவ்வுலகம், இம்மூன்றும் ஒன்றே என்றுதான் பொருள்கொள்ளவேண்டும்.
இந்த ஒருமையை நாம் அனுபவிப்பது எப்படியென்று தெரிந்து கொள்ளத் தீவிர ஆர்வமுள்ளவர்கள் வேதங்களைப் பயிலவேண்டும்.
வேதங்களையும் உபநிஷதங்களையும் தர்ம சாஸ்திரங்களையும் படித்தால், 'நித்தியமெது? அநிந்தியமெது?’ என்னும் பாகுபாட்டு ஞானம் கிடைக்கும். 'குருவினுடைய திருவாய்மொழியே வேதாந்தம்’ என்னும் அனுபவமும் கிடைக்கும்; பரமானந்தம் கிடைக்கும்.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment