எந்தப் போதனையையும் புராணத்தையும் படித்தாலும் ஒவ்வொரு கட்டத்திலும் ஸத்குருவின் ஞாபகமே
வருகிறது. ஆகவே, ஸாயீதான் ராமனாகவும் கிருஷ்ணனாகவும்
தோன்றித் தம்முடைய காதையையே நம்மைப் பாராயணம் செய்யவைக்கிறார். ஸ்ரீமத் பாகவதம் கேட்கலாம் என்று உட்கார்ந்தால், உத்தவகீதையை பக்தர்களின் நன்மைக்காகப் பாடும் ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா, நகத்திருந்து சிகைவரை ஸாயீயாகவே காட்சியளிக்கிறார்.
ஒரு விஷயத்தைத் தெளிவாக விளக்க முயலும்போது, சாதாரணப்பேச்சிலேயே திடீரென்று ஸாயீயினுடைய கதை ஏதாவதொன்று ஞாபகத்திற்கு வருகிறது. எழுதவேண்டுமென்ற ஸங்கல்பத்துடன் ஒரு காகிதத்தை எடுக்கிறேன்; ஆனால், ஒரு அக்ஷரமும் வெளிவருவதில்லை. எனினும், ஸாயீயே அவருடைய அருளால் என்னை எழுத உணர்வூட்டும்போது, எழுதுகிறேன்; எழுதுகிறேன்; எழுதிக்கொண்டே யிருக்கிறேன்.

எப்பொழுதெல்லாம் அஹங்காரம் தலைதூக்குகிறதோ அப்பொழுதெல்லாம் அவருடைய கையால் அதை எழும்பமுடியாமல் அழுத்திவிடுகிறார். அத்தோடுமட்டுமல்லாமல், தம்முடைய சக்தியை சிஷ்யனின்மீது பாய்ச்சி, அவனை அருளாளனாக ஆக்கிவிடுகிறார்.
மனத்தாலும் வாக்காலும் செய்கைகளாலும் ஸாயீபாதங்களை முழுமையாக சரணடைந்துவிட்டால், அறம், பொருள், இன்பம், வீடு இவை நான்கும் நம்மைத் தாமாகவே வந்தடைகின்றன.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment