Friday, November 15, 2013

இரண்டாவது விருந்தாளியின் கதை

     இப்பொழுது இரண்டாவது விருந்தாளி பேச ஆரம்பித்தார். ''நானும் என் சூசகத்தைப் புரிந்துகொண்டேன். மொத்த கதையையும் சொல்கிறேன்; கேளும். கேட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்.
     ''ஒரு பிராமணர் எனக்கு முப்பத்தைந்து ஆண்டுகளாகப் பணி செய்துவந்தார். அவர் அயராது உழைப்பவர்; நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். துரதிருஷ்டவசமாக அவருடைய புத்தி மயங்கியது. என்னுடைய பணத்தை அபகரித்தார். என்னுடைய வீட்டில் சுவருக்குள் அடங்கிய அலமாரி ஒன்று இருந்தது. அவர் யாருக்கும் தெரியாமல் சுவரின் கற்களை மெதுவாக நகர்த்தி ஒரு துவாரம் செய்துகொண்டார்.
       பாபா முன்பு குறிப்பிட்ட அலமாரியின் பின்பக்கந்தான் அவர் துவாரம் செய்த இடம். அதற்காக, எல்லாரும் தூங்கிக்கொண் டிருந்தபோது சுவரின் கற்களை நகர்த்தினார்.
      ''பாபா, என்னுடைய பணம் திருடு போய்விட்டதுஃ என்று சொன்னாரல்லவா? அது முற்றிலும் உண்மை. ஒரு கற்றை ரூபாய் நோட்டு திருடப்பட்டது.  அக் கற்றையின் மதிப்பு சரியாக முப்பதாயிரம் ரூபாய். பாபாவுக்கு இந்த விவரமெல்லாம் எப்படித் தெரிந்தது என்று எனக்கு விளங்கவில்லை. ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் பறிபோனதைக் கண்டு நான் இரவுபகலாக அழுதுகொண் டிருந்தேன். திருட்டைக் கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளால் நான் களைப்படைந்தேன். மன உளைச்சலாலும் சோகத்தாலும் நான் நீர்ச்சுழ­ல் மாட்டிக்கொண்டவன்போல் பதினைந்து நாள்கள் அவஸ்தைப்பட்டேன். மீளும் வழி தெரியவில்லை.
     ஒருநாள் நான் மனமுடைந்தவனாய் வராந்தாவில் உட்கார்ந்திருந்தபோது, உரக்கக் கேள்விகளைக்1 கேட்டுக்கொண்டு ஒரு பக்கீர் வீதி வழியாக நடந்து வந்தார்.   என்னுடைய சோகம் ததும்பிய முகத்தைப் பார்த்துவிட்டு சோகத்திற்குக் காரணம் என்னவென்று கேட்டார். நான் விவரமனைத்தையும் சொல்லி முடித்த பிறகு நிவாரணம் பெறுவதற்கு அவர் ஓர் அறிவுரை அளித்தார்.
      '''கோபர்காங்வ் தாலுகாவிலுள்ள ஷீரடி என்னும் கிராமத்தில் ஸாயீ அவ­யா (முஸ்லீம் ஞானி) வாசம் செய்கிறார். அவரிடம் பிரார்த்தனை செய்துகொண்டு ஒரு நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ளும். உமக்கு மிகவும் விருப்பமான உணவுப்பொருள் ஒன்றைச் சாப்பிடாமல் நிறுத்திவிடும். அவரை தரிசனம் செய்யும்வரை அதைச் சாப்பிடாமல் விட்டுவிடுவதாக அவரிடம் சொல்லும்.பக்கீர் என்னிடம் இதைச் சொன்னவுடன் ஒரு நிமிடமும் தாமதியாது நான் அரிசிச் சோற்றை விட்டுவிட்டேன். பாபா, என்னுடைய திருடுபோன பணம் திரும்பக் கிடைத்து, உங்களை தரிசனம் செய்த பிறகுதான் மறுபடியும் நான் அரிசிச் சோறு தின்பேன் என்று விரதம் எடுத்துக்கொண்டேன்.
     இதன் பிறகு பதினைந்து நாள்கள் கழிந்தன. பிராமணருடைய மனத்தில் என்ன தோன்றியதோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம்õ அவர் தாமாகவே என்னிடம் வந்து திருடிய பணத்தைத் திருப்பிக் கொடுத்தார்.
     'அவர் சொன்னார், 'என்னுடைய புத்தி என்னை ஏமாற்றிவிட்டது. அதனால்தான் இச்செயல் என்னால் செய்யப்பட்டது. நான் என் தலையை உமது பாதங்களில் வைக்கிறேன். உன்னை மன்னித்துவிட்டேன் என்று சொல்லுங்கள்.
     'அதன் பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்தது. ஸாயீயை தரிசனம் செய்யவேண்டுமென்ற தீவிர ஆவல் ஏற்பட்டது. அதுவும் இன்று நிறைவேறியது. பாக்கியசா­யாகவும், தன்யனாகவும் (எல்லா சம்பத்துகளையும் பெற்றவனாகவும்) ஆனேன்.
     ஆனால், நான் சங்கடத்தில் ஆழந்து சோகமாக வராந்தாவில் உட்கார்ந்துகொண் டிருந்தபோது எவர் எனக்கு ஆறுதல் அளித்தாரோ, அவரை நான் மறுபடியும் பார்க்கவேயில்லை.எவர் என்மேல் பரிதாபப்பட்டு என்மீது அக்கறை கொண்டு ஷீரடியைச் சுட்டிக்காட்டி ஸாயீயைப்பற்றி எனக்குத் தெரிவித்து அனுக்கிரஹம் செய்தாரோ, அவரை நான் மறுபடியும் சந்திக்க முடியவில்லை. 'எவர் நான் சற்றும் எதிர்பாராது தெருவழியே சூக்குமமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு வந்தாரோ, எவர் என்னைக் கடைசியில் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தாரோ, அவரை மறுபடியும் பேட்டி காண முடியவில்லை.
      ''உண்மையில், உங்களுடைய அவு­யா ஸாயீதான் அந்தப் பக்கீராக வந்தார் என்று தோன்றுகிறது. அவரே விருப்பப்பட்டு எங்களுக்கு தரிசனம் அளித்தார்.  ஏதாவது விருப்பம் நிறைவேற வேண்டுமென்றால் மக்கள் ஒரு ஞானியை தரிசனம் செய்ய விரும்புகின்றனர். நான் அவ்வாறு தரிசனம் செய்ய நினைக்கவில்லை. ஆயினும் நான் இழந்த பொருளைத் திரும்பப் பெறுவதற்காக, எடுத்தவுடன் என்னை ஞானிதரிசனம் செய்யப் பக்கீர் தூண்டினார். 'எவரிடம் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதால் நான் இழந்த செல்வத்தை சுலபமாகத் திரும்பப் பெற்றேனோ, அவர் என்னுடைய முப்பத்தைந்து ரூபாய் தக்ஷிணைக்கு ஆசைப்படுவது என்பது கனவிலும் நடக்காத காரியம்”.
     நேர்மாறாக, அஞ்ஞான மனிதர்களை ஆன்மீக நாட்டங்கொள்ளச் செய்வதற்காகவும் நம்முடைய மங்களத்தை உத்தேசித்து நம்மை நல்வழிப்படுத்துவதற்காகவும் அவர் நிரந்தரமாகத் தக்ஷிணை என்னும் சாக்குப்போக்கை உபயோகிக்கிறார்.
     இந்த அவதாரம் இதற்காகவே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அப்படி இல்லையென்றால், பாமரர்களும் பக்தி இல்லாதவர்களுமாகிய நாம் எவ்வாறு பிறவிக்கடலைக் கடக்க முடியும்? இதை நிதானமாக யோசித்துப் பாருங்கள்இவ்வாறாக, நான் இழந்த செல்வத்தைத் திரும்பப் பெற்ற பிறகு மகிழ்ச்சிக் கட­ல் திளைத்தேன். இதன் விளைவாக நேர்த்திக்கடனை முற்றிலும் மறந்துபோனேன். செல்வத்தின் மோஹத்தை வெல்வது எளிதோ.
     'பின்னர் ஒரு சமயம் நான் குலாபா பக்கம் சென்றபோது கனவில் ஸாயீயைக் கண்டேன். உடனே ஷீரடி செல்வதற்குக் கிளம்பினேன். ஸமர்த்த ஸாயீ தம் பயணத்தை விளக்கியவாறு, கப்பலுக்குள் நுழைவதற்கு அனுமதி கிடைக்காதது, சிப்பாயின் முயற்சியால் தடங்கல் விலகியது, இவை அனைத்தும் உண்மை. இவையனைத்தும் என்னுடைய பிரச்சினைகள். கப்பல் நின்றுகொண்டிருந்த இடத்தை நான் அடைந்தபோது சிப்பாய் எனக்காக மனப்பூர்வமாக சிபாரிசு செய்தார். அதன் பிறகே, முத­ல் எனக்குப் பயணம் செய்ய அனுமதி தர மறுத்த அதிகாரி இடம் கொடுத்து உதவி செய்தார்.
     அந்த சிப்பாயும் எனக்கு முன்பின் தெரியாதவர்; ஆயினும் அவருக்கு என்னைத் தெரியுமென்று சொன்னார். ஆகவே யாரும் எங்களைத் தடுக்கவில்லை. நாங்கள் சுகமாகக் கப்ப­ல் அமர்ந்துகொண்டோம். இதுதான் கப்ப­ன் கதையும் சிப்பாயின் கதையும். இதெல்லாம் எனக்குத்தான் நேர்ந்தது; ஆயினும் ஸாயீ இவற்றைத் தம்மேல் ஏற்றிக்கொண்டு கதை 
சொன்னார்.
      ''இந்த அற்புதத்தை நினைத்துப் பார்க்கும்போது என்னுடைய மனம் செய­ழந்து போகிறது. ஸாயீ இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பதை நான்
 உணர்கிறேன். இவ்வுலகில் ஓர் அணுவளவுகூட அவர் இல்லாத இடம் இல்லை. எங்களுக்கு எவ்வாறு இந்த அனுபவத்தை அளித்தாரோ, அவ்வாறே மற்றவர்களுக்கும் அனுபவங்களை அளிப்பார். 
நாங்கள் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? எங்களை அலக்காகத் தூக்கித் தம்மிடம் கொண்டுவந்து நல்வழிப்படுத்த, நாங்கள் எவ்வளவு பாக்கியம் செய்தவர்கள்!
     ஆஹா! என்னுடைய செல்வம் திருடுபோனதுதான் என்ன      நான் நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டதுதான் என்னதிருடுபோன செல்வம் சிரமமின்றித் திரும்பி வந்ததுதான் என்னநேர்த்திக்கடன் நிறைவேறிய அற்புதந்தான் என்னே!  எங்களுடைய வானளாவிய பாக்கியம் என்னேநாங்கள் அவரை இதற்குமுன் தரிசனம் செய்தது கிடையாது; அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதும் இல்லை; சிந்தனை செய்ததும் இல்லை. ஆயினும் அவர் எங்களை நினைவில் வைத்திருந்தார்; அனுக்கிரகமும் செய்தார்.  'ஆண்டாண்டாக அவருடைய கூட்டுறவில் மூழ்கி இரவுபகலாக அவருடைய பாதங்களுக்கு சேவை செய்யும் கடவுள்-பக்தர்கள் எவ்வளவு பாக்கியசா­களாகவும் தன்யர்களாகவும் இருக்கவேண்டும்?
     எவர்களுடைய கூட்டுறவில் ஸாயீ விளையாடினாரோ சிரித்தாரோ பேசினாரோ அமர்ந்துகொண்டாரோ நடந்து சென்றாரோ சாப்பிட்டாரோ படுத்துக்கொண்டாரோ கோபங்கொண்டாரோ, அவர்கள் அனைவரும் சிரேஷ்டமான பாக்கியசாலி­கள்.!
     எங்களுடைய கைகளால் அவருக்கு ஒரு சேவையும் செய்தோமில்லை. ஆயினும் அவர் எங்களுக்குப் பெருங்கருணை காட்டினார். அவருடைய சங்கத்திலேயே எப்பொழுதும் இருக்கும் உங்களுடைய பாக்கியத்தை நான் என் சொல்வேன்!
     'ஷீரடிவாழ் மக்கள் புண்ணியம் செய்து சம்பாதித்த நற்பலன்களையெல்லாம் ஒன்றுசேர்த்து உருக்கி ஒரு மனித உருவத்தை வார்த்து எடுத்தீர்கள் போலும்õ பரம பாக்கியசா­களாகிய நீங்கள் இவ்வுருவத்தை ஷீரடிக்குக் கொண்டுவந்து விட்டீர்கள்.. 
     அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் நாங்கள்
ஷீரடிக்கு வந்திருக்கிறோம். ஸ்ரீஸாயீயின் புனிதமான தரிசனத்திற்காக எங்களிடம் இருப்பதனைத்தையும் அவருக்கு சமர்ப்பணம் செய்யவேண்டுமென்று நினைக்கிறோம். தருமநெறி வாழும் ஸாயீ ஓர் அவதாரம்; ஆயினும் அவர் ஒரு விஷ்ணுபக்தரைப் போல் வாழ்கிறார்; அவர் ஒரு ஞானவிருட்சம்; சோபையில் ஆகாயத்தில் ஒளிரும் சூரியன்.
     பெரும் புண்ணியம் செய்ததால் இந்த மசூதிமாயீயைக் கண்டோம். எங்களுடைய நேர்த்திக்கடனையும் நிறைவேற்றிவைத்து தரிசனமும் தந்தார். இவர்தான் எங்களுடைய தத்தாத்ரேயர். இவர்தான் எங்களை நேர்த்திக்கடன் ஏற்றுக்கொள்ள வைத்தவர். இவர்தான் கப்ப­ல் இடம் வாங்கிக்கொடுத்தவர். இவரே எங்களை தரிசனத்திற்காக ஷீரடிக்கு இழுத்தவர். இவ்வழியாக, ஸாயீ, தாம் எங்கும் நிறைந்தவர் என்பதையும் எல்லார் மனத்திலும் உறைபவர் என்பதையும் எங்கு நடப்பதையும் சாட்சியாக அறிபவர் என்பதையும் எங்களுக்கு உணர்த்தினார். அவருடைய புன்னகை தவழும் முகத்தைப் பார்த்து நாங்கள் பரமானந்தம் அடைந்தோம். உலக வாழ்வின் பிடுங்கல்களையும் துக்கங்களையும் மறந்தோம்; பொங்கும் மகிழ்ச்சியை எங்களால் அடக்கமுடியவில்லை.
     கர்மவினைகளின் விளைவாக வாழ்க்கையில் நடப்பது நடக்கட்டும். அதை எங்களுடைய மனம் உறுதியாக எதிர்கொள்ளட்டும். ஆனால், ஸாயீபாதங்களின் மீது அகண்ட பிரேமை என்றென்றும் நிலவட்டும். அவருடைய புனிதமான உருவம் எங்கள் கண்களின் எதிரில் எப்பொழுதும் நிற்கட்டும்.     ஸாயீயின் லீலை ஆழங்காணமுடியாதது; கற்பனைக்கு எட்டாதது; அவர் செய்யும் உபகாரத்திற்கு எல்லையே இல்லைõ தயாநிதியேõ என்னுடைய தேகத்தை உங்களுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டுமென்பதை உணர்கிறேன்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...