அக்கினியின்மீதும் அவருக்கு
அம்மாதிரியான ஆதிபத்தியம் இருந்தது. இதுவிஷயமாக ஒரு சுருக்கமான காதையை கவனத்துடன்
கேளுங்கள். செவிமடுப்பவர்களே! அது பாபாவினுடைய அபூர்வமான
சக்தியை விளக்கும்.
ஒருநாள் நடுப்பகல்வேளையில் துனியின் தீ பலமாக
எழும்பியது. அந்நேரத்தில் துனிக்குப் பக்கத்தில் நிற்பதற்கு எவருக்கு தைரியம்
இருந்தது? ஜுவாலைகள் திகுதிகுவென்று உயரமாக எரிந்தன.
தீ
பயங்கரமாக எரிந்து, பல சிகரங்கள் உயரமாகக் கிளம்பிக்
கூரையின் மரப்பலகைகளைத் தொட்டன. தீவிபத்தில் மசூதியே எரிந்து சாம்பலாகிவிடும்
போலத் தோன்றியதுõ
பாபா
என்னவோ அமைதியாகவே இருந்தார். முற்றும் வியப்படைந்த மக்கள் கவலையால்
பீடிக்கப்பட்டு உரக்கக் கூவினர், ''ஐயோ, எவ்வளவு அமைதியாகவும் படபடப்பின்றியும் இருக்கிறார்”.
யாரோ
ஒருவர் அலறினார், ''ஓடிப்போய்த் தண்ணீர் கொண்டுவாருங்கள்!’ மற்றவர் சொன்னார், ''யார் அதைத் துனியில்
கொட்டுவது? கொட்ட முயன்றால் ஸட்கா (பாபாவின் கைத்தடி)
பலமாக உம்மீது விழும். யார் இதைச் செய்ய தைரியமாக முன்வருவார்?”.
எல்லாரும் தைரியத்தை இழந்து தத்தளித்தனர்;
ஆனால் யாருக்குமே கேட்பதற்கு தைரியம் இல்லை. பிறகு பாபாவே
தாமிருந்த நிலையிருந்து சிறிது நெளிந்து ஸட்காவின்மீது கரத்தை வைத்தார்.
கொழுந்துவிட்டெரியும் தீயைப் பார்த்துக்கொண்டே
ஸட்காவைக் கையிலெடுத்துக்கொண்டு, ''நகரு, பின்வாங்கு, போ”
என்று சொல்லிக்கொண்டே அடிமேல் அடியாக அடித்தார்.
துனியிருந்து ஒரு கை தூரத்தில் இருந்த கம்பத்தை
ஸட்காவால் அடித்துக் கொண்டும் துனியை முறைத்துப் பார்த்துக்கொண்டும், ''சாந்தம் அடை; சாந்தம் அடை” என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
ஒவ்வொரு
அடிக்கும் துனி தன்னுடைய ஆக்ரோஷத்தை இழந்து பின்வாங்கியது. படிப்படியாக துனி
சாந்தமடைந்தது. மக்களுடைய பீதியும் அடியோடு தொலைந்துபோயிற்று.
ஞானிகளில்
சிறந்தவரும் இறைவனின் அவதாரமுமான ஸாயீ இவ்வாறே இருந்தார். அவருடைய பொற்பாதங்களில்
சரணடைந்தால், தம் கிருபைசெய்யும் கரத்தை உம்முடைய
சிரத்தின்மீது வைப்பார்.
எவர் இந்த அத்தியாயத்தை சிரத்தையுடனும்
பக்தியுடனும் நித்தியபாராயணம் செய்கிறாரோ, அவர் சாந்தமான
மனநிலையையும் ஆபத்துகளிருந்து முழு விடுதலையையும் அனுபவிப்பார்.
நான் இன்னும் வேறென்ன சொல்லுவேன்? மனத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, நியமநிஷ்டையுடன்,
விதிக்கப்பட்ட சடங்குகளைச் செய்துகொண்டு ஸாயீயை முழுமனத்துடன்
வழிபட்டால், முழுமுதற்பொருளை அடைவீர்கள்.
கடைசியில் நீங்கள் நிஷ்காமமானவராக (எதையும் வேண்டாதவராக)
ஆகிவிடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் துர்லபமாகிய (எளிதில் கிடைக்காத)
ஸாயுஜ்ய முக்திநிலையை (இறைவனுடன் ஒன்றிவிடுதல்) அடைவீர்கள்.
அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும்.
இக்காரணம்பற்றி, பரமார்த்த சுகத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள்
இந்த அத்தியாயத்தைத் திரும்பத் திரும்பப் பாராயணம் செய்யவேண்டும்.
அம்மாதிரியான பாராயணம் சித்தத்தைத் தூய்மைப்படுத்தி ஆன்மீக
நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும்
விரட்டியடிக்கப்படும்; விரும்பினவும் நன்மைகளும் விளையும்.
பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் எல்லாரும் (அம்மாதிரியான
பாராயணத்தால்) அனுபவிக்கலாம்.
ஸ்ரீ சாசாயி சத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment