இயற்கையாகவே
மன்னிப்பளிப்பதில் மிகச்சிறந்தவர்களாகவும், எந்நிலையிலும்
பதட்டப்படாத அமைதியுடனும் கபடமற்றும் பொறுமையுடனும் இந்த ஞானிகள் ஒப்பற்ற
திருப்தியுடன் வாழ்ந்தனர். அவர்களில் ஒருவரே பாபா.
மனித
உருவில் காணப்பட்டாலும் பிரபஞ்சத்தில் உலவி வந்தாலும் அவர் நிர்குணமானவர்; நிர்விகாரமானவர்; ஸங்கம் தேவைப்படாதவர்;
அகமுகமாக முக்தியடைந்தவர்.
பகவான்
ஸ்ரீ கிருஷ்ணரே, ''ஞானிகள் என்னுடைய ஆத்மா; ஞானிகள் என்னுடைய உயிருள்ள பிம்பங்கள்; அன்பும்
கருணையும் உள்ள ஞானிகள் எல்லாரும் நானே” என்று கூறினார்.
''அவர்களை
என்னுடைய பிம்பங்கள் என்று சொல்வதுகூடச் சரியாகாது; ஏனெனில்,
ஞானிகள் என்னுடைய நிர்ச்சலமான, என்றும் மாறாத சொரூபங்கள். என் பக்தர்களின் சுமைகளை (பொறுப்புகளை) நான்
ஞானிகளின் பொருட்டே சுமக்கிறேன்.”
''அனன்னியமாக (வேறொன்று ஏதுமின்றி) ஞானிகளை சரணடைந்த பக்தர்களின்
பாதங்களை நான் வணங்குகிறேன்” என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
ஞானிகளுடைய பெருமையை உத்தவருக்கு உபதேசம் செய்தார்.
உருவமிருப்பவர்கள், உருவமில்லாதவர்கள்
இவர்கள் அனைவரிலும் சிறந்தவராகவும் குணவந்தர்களில் உத்தமமான குணமுடையவராகவும்
சான்றோர்களில் சீரிய சான்றோராகவும் அவர்களனைவரிலும் அரசனாகவும் இருப்பவர்;
எல்லா
ஆவல்களிலும் திருப்தியடைந்தவர்; தன்னிறைவு பெற்றவர்; யதேச்சையாகக் கிடைத்ததில் சந்தோஷமடைபவர்; அனவரதமும் ஆத்மாவில்
நிலைத்தவர்; சுகதுக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்; ஆத்மானந்த வைபவம்
அடைந்தவர் -- யாரால் அவருடைய கௌரவத்தை வர்ணிக்க முடியும்? அவர்
பிரம்மதேவனுடைய அவதாரம்; ஆகவே, சொற்களால் விவரிக்க முடியாதவர்.
ஸ்ரீ சாயிசத்சரித்திலிருந்து
No comments:
Post a Comment