''பாபா
சொன்ன அத்தனை நிகழ்ச்சிகளும் எங்கள் வாழ்வில் நடந்தவை. எங்களை முன்பின்
பாராதவருக்கு இதெல்லாம் எப்படித் தெரிந்தது? ஆகவே
இவையனைத்தும் அதிசயமே!”
உணவுண்ட
பிறகு மாதவராவுடன் வெற்றிலைபாக்கு சுவைத்துக்கொண் டிருந்தபோது விவரணம்
ஆரம்பித்தது.
ஒருவர் சொன்னார், ''என்னுடைய ஆதி குடியிருப்பு ஸஹயாத்ரி
மலைத்தொடரில் இருக்கிறது. ஆனால், பிழைக்கும் வழி
விஷயத்தில் சமுத்திரக்கரைக்குத் தொடர்பு இருந்திருக்க வேண்டும். ஆகவே நான் ஏதாவது
வேலை கிடைக்குமென்று நினைத்து கோவாவுக்குச் சென்றேன். காரியசித்தி ஆகவேண்டுமென்று
நான் தத்தாத்ரேயரை அத்தியந்தமான பயபக்தியுடன் ஆராதனை செய்தேன்; நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்டேன்.
நான் தத்தரின் பாதங்களில் விழுந்து வேண்டிக்கொண்டேன், 'இறைவா! என்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக எனக்கொரு வேலை தேவைப்படுகிறது. கிருபை செய்து எனக்கு ஒரு வேலை வாங்கிக்கொடுங்கள். 'இன்றிருந்து சொற்ப அவகாசத்திற்குள் என்னுடைய வேண்டுகோள் நிறைவேறினால், முதல் மாதத்தில் எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை முழுவதுமாக உங்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன.
'பாக்கியவசமாக தத்தர் என்னுடைய பிரார்த்தனையை சீக்கிரமாகவே நிறைவேற்றி வைத்தார். அப்பொழுதிருந்து நான் மாதம் பதினைந்து ரூபாய் சம்பாதிக்க ஆரம்பித்தேன்.
பிறகு, ஸாயீ பாபா வர்ணனை செய்தவாறே எனக்குப் பதவி உயர்வுகள் பல கிடைத்தன. நேர்த்திக்கடன் ஏற்றுக்கொண்ட விஷயத்தை எப்படியோ என் மனம் அடியோடு மறந்துவிட்டது. ஆகவே, அது இந்த ரீதியில் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.
அவர் தக்ஷிணை வாங்கிக்கொண்டார் என்று யாராவது நினைக்கலாம். அது தக்ஷிணை அன்று; என்னால் திருப்பிக் கொடுக்கப்பட்ட கடனேயாகும். தக்ஷிணை என்ற சாக்குப்போக்கில் என்னுடைய பழைய நேர்த்திக்கடன் எனக்கு ஞாபகப்படுத்தப்பட்டது.

தாத்பரியம்
என்னவென்றால், ஸாயீ திரவியம் எதையும் யாசிப்பதில்லை;
தம்முடைய நிஜமான பக்தர்களையும் யாசிக்க அனுமதித்ததில்லை.
செல்வத்தை அவர் அனர்த்தமாகவே (கேடாகவே) கண்டார். பக்தர்களையும் பணமோகத்திருந்து
காப்பாற்றினார்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு
அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment