எனது பள்ளி நாட்களிலிருந்து நான் ஸத்ய ஸாயிபாபாவின் பக்தை.
பஜனைகளுக்கு அடிக்கடி செல்வேன். ஷீர்டி ஸாயிபாபாவின் திருவுருவப்
படத்துக்கு விளக்கேற்றி வைத்து பூஜை செய்வேன். திருமணமானதும்,
என் கணவரும் பாபா பக்தராகி, வேதம் எல்லாம் கற்று, இருவரும்
தினமும் ஓதுவோம். சென்ற ஆண்டு, என் தந்தை அவரது நண்பர்
நாட்டை விட்டுச் செல்லும்போது அவருக்களித்த பெரிய ஷீர்டி பாபா
படத்தை எனக்குத் தந்தார். ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க எண்ணி,
அதைப் படித்து முடித்ததும் என் வாழ்வில் மிகப் பெரிய மாற்றங்கள்
ஏற்பட்டன.
No comments:
Post a Comment