Saturday, November 30, 2013

சாயிபாபா என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்

நான் 2009 ஆம் ஆண்டு முதல் தீவீரமான சாயி பக்தராக உள்ளேன். எனக்கு வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உள்ளன. ஆகவே நான் பிப்ருவரி ஏழாம் தேதி முதல் சாயி விரதம் இருக்கத் துவங்கி மயிலாப்பூர் ஆலயத்துக்கு சென்றேன். விரதத்தையும்  அன்று முதல் துவக்கினேன். அதனால் நான் சந்தோஷமாக உள்ளேன் என்பதின் அர்த்தம் அல்ல. நான் அழைக்காமல் யாரும் என்னிடம் வர முடியாது என்று பாபா கூறுவார். எனக்காக நீங்களும் பாபாவிடம் வேண்டுங்கள். என்னுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றுதான்  ஒன்பது வார விரதத்தை துவக்கினேன். பாபா என் வேண்டுகோளை நிறைவேற்று என்று உன்னையே வேண்டுகிறேன்.  நான் மிகவும் சங்கடத்தில் இருக்கிறேன். பாபா என்னை நீதான் காப்பாற்ற வேண்டும். பாபா என்மேல் கருணைக் காட்டுங்கள். நான் ஒன்பது வார விரதத்தை நல்லபடி முடிக்க நீங்கள்தான் துணை இருக்க வேண்டும். என்னுடைய பூர்வஜென்ம  கர்மாக்களை ஒழித்து என்னை பாபாதான் நீதான் காத்தருள வேண்டும்.

மரணத்தை வென்ற ஞானிகள்



     லி­யுகத்தின் கால அளவு நான்கு லட்சத்து இரண்டாயிரம் ஆண்டுகள்; இதில் சுமார் ஐயாயிரம் ஆண்டுகள் கழிந்தபிறகு பாபா அவதாரம் செய்திருக்கிறார்.  பாபாவினுடைய பிறந்த தேதி தெரியாமல், இந்தக் காலத்தை எவ்வாறு நிர்ணயம் செய்யமுடியுமென்று கதை கேட்பவர்கள் இங்கு ஒரு சந்தேகத்தை எழுப்பலாம். ஆகவே, இப்பொழுது கவனமாகக் கேளுங்கள். 

     புனிதமான சிர்டீ கிராமவாசியாக இருக்கவேண்டுமென்று ஸங்கல்பம் செய்துகொண்டு ஒரு க்ஷேத்திர ஸந்நியாஸியாக பாபா தமது கடைசி நாள் வரை 60 ஆண்டுகள் சிர்டீயில் வாழ்ந்தார்.
  முதன்முதலாக, பாபா 16 வயது பாலகனாக சிர்டீயில் தோன்றினார்; அச்சமயத்தில் அங்கு 3 ஆண்டுகள் தங்கினார். 

     பிறகு, அவர் சிர்டீயி­ருந்து மறைந்துவிட்டார்; மறுபடியும் தூரதேசமான நிஜாம் ராஜ்ஜியத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பிறகு அவர் கல்யாணக்கோஷ்டியுடன் சிர்டீக்கு வந்தார்; வந்தவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டார்.
  41 அப்போது அவருக்கு 20 வயது; அடுத்த 60 ஆண்டுகள் அவர் சிர்டீயிலேயே தங்கிவிட்டது எல்லாருக்கும் தெரிந்ததே.
     சகவருஷம் 1840ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் விஜயதசமியன்று (கி.பி. 1918ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ஆம் தேதி) பாபா மஹாஸமாதியடைந்தார்.   பாபாவினுடைய வாழ்நாள் 80 ஆண்டுகள். இதி­ருந்து பாபா பிறந்த ஆண்டு, சக வருஷம் 1760 (கி.பி. 1838) ஆக இருக்கவேண்டும் என்று அனுமானிக்கலாம். 

      மரணத்தை வென்ற ஞானிகளின் ஜீவிதகாலத்தை நிர்ணயிக்க முடியுமா? அது செயற்கரிய செயலாகுமன்றோ. சூரியன் உதிக்காமலும் அஸ்தமிக்காமலும் நிலையாக ஓரிடத்திலேயே இருக்கும் உலகத்தில், பிறப்பும் இறப்பும் அற்ற நிலையில், மஹான்கள் அவர்களுடைய இடத்திலேயே இருக்கின்றனர். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Friday, November 29, 2013

ஒரு பக்தையின் அனுபவம்



எனது பள்ளி நாட்களிலிருந்து நான் ஸத்ய ஸாயிபாபாவின் பக்தை. 

பஜனைகளுக்கு அடிக்கடி செல்வேன். ஷீர்டி ஸாயிபாபாவின் திருவுருவப் 

படத்துக்கு விளக்கேற்றி வைத்து பூஜை செய்வேன். திருமணமானதும்

என் கணவரும் பாபா பக்தராகி, வேதம் எல்லாம் கற்று, இருவரும் 

தினமும் ஓதுவோம். சென்ற ஆண்டு, என் தந்தை அவரது நண்பர் 

நாட்டை விட்டுச் செல்லும்போது அவருக்களித்த பெரிய ஷீர்டி பாபா 

படத்தை எனக்குத் தந்தார். ஸாயி ஸத் சரிதத்தைப் படிக்க எண்ணி,

அதைப் படித்து முடித்ததும் என் வாழ்வில் மிகப் பெரிய மாற்ற‌ங்கள்

 ஏற்பட்டன.

ஸாயீ ஆத்மபோதத்தின் சுரங்கம்


        அந்தரங்கத்தில் பர பிரம்மத்துடன் லயித்த நிலையில் இருந்தவர், கிரங்கத்தில் சிலசமயம் பிசாசைப்போல் நடந்துகொண்டார். உள்ளே அத்வைத ஆனந்தத்தில் திளைத்த அவர், வெளியே உலகியல் செயல்பாடுகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். 
    சிலசமயங்களில் மக்களின்மீது பிரேமை காட்டினார்; சிலசமயங்களில் கல்லெறிந்து அவர்களை விரட்டினார். சிலசமயங்களில் சாபங்களையும் திட்டுகளையும் மழையாகப் பொழிவார்; சிலசமயங்களில் ஆனந்தமாக அணைத்துக்கொள்வார். 
     ஆனால், உண்மையில் அவர் சாந்தமுள்ளவராகவும் தம்மையே கட்டுப்படுத்திக் கொண்டவராகவும் பற்றற்றும் பொறுமையாகவும், எந்நேரமும் தியானத்தில் இருந்தவாறு தம்மிலேயே ரமித்து, பக்தர்களுக்கு இனிய மனமும் முகமும் காட்டினார்.
 
      எப்பொழுதும் உள்முகமாகத் திருப்பப்பட்ட மனத்துடன் ஆடாது அசையாது ஒரே தோரணையில் உட்கார்ந்துகொண்டு, இங்குமங்கும் அலையவேண்டிய தொந்தரவோ, செல்வத்தையோ, புகழையோ சிறிதும் விரும்பாமல் பிச்சை எடுப்பதையே பிழைப்பாக ஏற்றுக்கொண்டு, புலன்கள் அனைத்தையும் உள்ளே இழுத்துக்கொண்ட யோகநிலையில் அவர் வாழ்நாளைக் கழித்தார். 
     ஒரு யதி ஸந்நியாஸியைப்போல உடையுடுத்திக்கொண்டு, தம்முடைய ஸட்காவை ஸந்நியாஸிகள் எப்பொழுதும் கையில் வைத்திருக்க வேண்டிய தண்டமாகக் கொண்டார். 'அல்லாமா­க் என்னும் வார்த்தைகளே அவருடைய இடைவிடாத ஜபம்; பக்தர்களிடம் அவர் காட்டிய பிரீதி அகண்டம். 
      மானிட உருவத்தில் அவதரித்த ஸாயீயின் உருவ லக்ஷணங்கள் இவ்வாறே; பூர்வஜன்மத்தில் சம்பாதித்த புண்ணியத்தால்தான் இப்புதையல் நமது கைகளுக்கு எதிர்பாராமலேயே கிடைத்திருக்கிறது. 
     ஸாயீ ஒரு சாதாரண மனிதரே என்று நினைப்பவர்கள் மந்தமதி படைத்தவர்கள்; துரதிருஷ்டசாலி­கள். அவர்களுடைய விதி விசித்திரமானது. அரிதாகக் கிடைக்கும் இவ்வதிருஷ்டத்தை அவர்கள் எவ்வாறு அனுபவிக்க முடியும்? 
      ஸாயீ ஆத்மபோதத்தின் சுரங்கம்; பூரணமான ஆனந்தத்தை அனுபவிக்கும் விக்கிரஹம். ஸம்ஸார ஸாகரத்தை முழுமையாகவும் பாதுகாப்புடனும் கடப்பதற்கு அவரைச் சட்டென்று பற்றிக்கொள்வோமாக.

      படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவி­ருந்து புல்பூண்டுவரை  இப் 

பிரபஞ்சத்தில் எங்கும் நிலவியிருக்கும், அளவற்றதும் முடிவற்றதும் 

பின்னமில்லாததுமான முழுமுதற்பொருளே பாபாவாக உருவெடுத்திருக்கிறது. 


ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Thursday, November 28, 2013

ஒரு பக்தரின் அனுபவம்


ஜெய் ஸாயிராம். என் பெயர் சுமன். உத்தகாண்ட்டைச் சேர்ந்தவன். பாபாவின் ஒரு எளிய அடியவன். அவர் சொன்னவற்றின்படி நடக்க முற்பட்டாலும், அடிக்கடி தவறுகள் செய்து, அவருடைய மன்னிப்பைக் கோருபவன். என்னுடைய முந்தையப் பதிவில் சொல்லியவாறு, கடந்த 7 ஆண்டுகளாக நான் சில சோதனைகளைச் சந்தித்து வருகிறேன். அவற்றை மீண்டும் சொல்லாத‌தற்காக என்னைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

சிறுவயது முதலே நான் ஸாயி வழியைப் பின்பற்றி வந்தபோதிலும், சமீப காலமாக இந்த பக்தி எனக்கு நல்ல பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக, எனது பிரச்சினை இன்னும் தீராத போதிலும், நான் ஸாயிக்கு நெருக்கமானவனாகவே இருக்கிறேன்.

எனது பிரச்சினை தொடர்பாக, ஸாயியின் ஆணைப்படி தில்லியில் இருக்கும் ஒருவரைச் சென்று பார்த்தேன். அந்தப் பெண்மணி அடுத்த 9 மாதங்களுக்கு மாதம் ஒரு முறை 7 தினங்களுக்குத் தன்னை வந்து பார்க்குமாறு சொன்னார். அதனால், மாதமொரு முறை தில்லி வந்து என் சகோதரனின் வீட்டில் தங்கி, மெட்ரோ ரயில் மூலம் இவர் இருக்கும் இடத்துக்குச் செல்லவேண்டியதாயிற்று. இது ஒரு 40 நிமிடப் பயணம் என்பதால், இந்த நேரத்தில் ஸாயி ஸத் சரிதப் பாராயணம் செய்ய முடிவெடுத்தேன். இப்படிச் செய்கையில் அந்த 7 நாட்களில் நான் ஸாயி ஸத்சரிதப் பாராயணத்தைப் பூர்த்தி செய்ததை அறியவில்லை. அடுத்த மாதத்திலிருந்து இதை உணர்ந்து, நான் செய்தபோது பாபாவின் ஆசீர்வாதம் எனக்குப் பல வகையிலும் கிடைத்ததை உணர்ந்தேன்.

ஒருமுறை எங்கள் தெருவின் வழியே ஸாயி பால்கி வந்தபோது நான் 10 ரூபாய் கொடுத்தேன். உதி, அக்ஷதை மற்றும் ஒரு பூ எனக்குக் கிடைத்தது. அன்று மாலை பூஜைக்குப் பின், ஸத்சரிதத்தைப் புரட்டியபோது, அப்பாசாஹேப் குல்கர்னி என்பவர் பாபாவுக்குப் பத்து ரூபாய் தக்ஷணை கொடுத்ததும், அவர்க்கு உதி, அக்ஷதை, மலர் பிரசாதம் கிடத்த நிகழ்வைப் படித்து, இரண்டிற்கும் இடையே உள்ள பொருத்தத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்னொரு முறை,பாராயணத்தை முடித்து நான் வீடு திரும்பியதும், மற்றொரு அதிசயம் நிகழ்ந்தது. காலையும், மாலையும் பாபாவுக்கு அளிக்கும் நீரையே நான் அருந்துவது வழக்கம். ஒரு நாளிரவில், அப்படி அந்த நீரைக் குடிக்கச் சென்றபோது, அதில் ஒருசில சொட்டுக்கள் மட்டுமே இருந்தது. வீட்டிலிருந்த வேறு யாரும் அதைத் தொடவே இல்லையெனச் சொன்னார்கள். இதுமாதிரி நேரங்களில் நான் பாபாவிடமே நேரிடையாகச் சீட்டுப் போட்டுக் கேட்பது என் வழக்கம். அப்படிக் கேட்டபோது, 'ஆம், நானே அதைக் குடித்தேன்' என வந்ததும் என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மற்றொரு முறை, பாராயணம் முடித்த அன்று என் தோழி ஒருவர் வீட்டுக்குச் சென்று பேசிக்கொண்டிருந்தபோது, பாதியில் எழுந்து சென்று அவள் ஒரு அழகிய பாபா சிலையை எனக்கு அளித்தாள். 'அவளது சகோதரன் ஷீர்டி சென்றபோது, இரண்டு சிலைகளை வாங்கியதாகவும், அந்த இன்னொன்றுதான் இது என்றும், அதை முறையாகப் பூஜை செய்யும் ஒருவருக்குத் தர எண்ணி, என்னிடம் அளித்ததாகவும் அவள் சொல்லி என்னை வியப்பில் ஆழ்த்தினாள். அதன் பின்னர் ஸ்கூட்டரில் இருவருமாகச் சென்றபோது, எங்கு போகலாம் என என்னைக் கேட்டுவிட்டு, அருகிலிருக்கும் பாபா கோவிலுக்கே செல்லலாம் எனச் சொன்னாள். அவள் ஒன்றும் பாபா பக்தை அல்லள். மகிழ்ச்சியுடன் அங்கே சென்று ஸாயி தர்பாரை கண்ணாரக் கண்டு, 10 ரூபாய் தக்ஷணை அளித்துவிட்டு, வீடு திரும்பிய பின்னரே, நிகழ்ந்த அனைத்தின் பெருமையும் புரிந்தது.

அடுத்த தடவை, நான் மெட்ரோவில் செல்லும்போது, வழக்கமாகப் படிக்காமல், பாட்டு கேட்கலாம் என நினைத்து, என்னிடமிருந்த 'ஐ-பாட்'-இல் கேட்கலானேன். அதை முன்னிரவுதான் முழுதுமாக 'சார்ஜ்' செய்திருந்தேன். ஆனால், இரண்டு பாட்டுகளுக்குப் பின்னர், அது வேலை செய்ய ஒத்துழைக்கவில்லை. வேறு வழியில்லாமல், நான் அன்றைய ஸத்சரித அத்தியாயங்களைப் படித்துவிட்டு, வீடு திரும்பினேன். ஆனால், என் மனம் என்னவோ அமைதியாகவே இல்லை. மதிய உணவை முடித்ததும், மீண்டும் எனது 'ஐ-பாட்'ஐ அழுத்த, இந்த முறை அது முழு நேரத்துக்கும் [40 நிமிடங்கள்] தொடர்ந்து ஒலித்தது. எனது சகோதரியுடன் இதைப் பகிர்ந்தபோது, 'உனது தினசரி பாராய‌ணத்தை நீ ஒதுக்கி பாட்டு கேட்கக்கூடாது என்றுதான் பாபா இவ்வாறு செய்திருக்கிறார்' எனத் தெளிவுபடுத்தினாள்.

பாபாவின் படம் ஏதாவதொரு ஆட்டோவிலோ, அல்லது வேறு இடத்திலோ காட்சி அளித்து என்னை மகிழ்த்துவதும் வாடிக்கையாக நிகழும். ஆனால், ஒருநாள் [அன்று வியாழக்கிழமை] அதுபோல எங்கும் தெரியாமல் நான் நம்பிக்கை இழந்துபோன நேரத்தில், ஒரு பஸ் நிறுத்தத்தில் ஒரு பையன் மிகப் பெரிய சமாதி புகைப்படத்தைத் தனது கைகளில் வைத்திருப்பதைக் கண்டு ஆனந்தத்துடன் தரிசனம் செய்துகொண்டேன்.


இதுபோல பாபா எப்போதும் என் கூடவே இருந்து, என்னைப் பாதுகாத்து, என‌க்கு நம்பிக்கையை ஊட்டுகிறார். இதைச் சொல்ல அனுமதித்தமைக்கு என் பணிவன்பான வணக்கம். 

எங்கும் நிறைந்தவரே பாபா!



     அணிமா சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியளவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ பாபா சுலபமாக ஸஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே. 
     அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்கமுடிந்தவருக்கு மரப்பலகை இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? 
      அணிமா, மஹிமா, லகிமா என்னும் அஷ்டமகாசித்திகளும் நவநிதிகளும், அவருடைய ந்நிதியில் கைகட்டிச் சேவகம் செய்தன. மரப்பலகை அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையே.
     புழு, எறும்பு, நாய், பறவை, மனிதர்கள், பெரியோர், சிறியோர், அரசன், ஆண்டி -- அனைத்தையும் அவர் சரிசமமாகப் பார்த்தார். 
            பார்வைக்கு அவர் ஷிர்டீவாசியைப் போலத் தெரிந்தார்; மூன்றரை முழம் உயரமுள்ள உடலைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. ஆயினும், புண்ணியங்களின் இருப்பிடமான அவர் எல்லாருடைய மனத்திலும் வசிக்கிறார். 
     அந்தரங்கத்தில் அவர் சங்கத்தை நாடாதவராகவும் பற்றற்றவராகவும் இருந்தார்; வெளியுலகில் மக்களை நற்பாதையில் செலுத்தவேண்டும் என்ற பலமான உந்துதல் இருந்தது. மனத்துள்ளே நிராசையாக இருந்தார்; ஆனால், வெளிமுகமாக பக்தர்களின்மேல் பாசம் இருந்தது.
 

      அந்தரங்கத்தில் செயல்களுக்குப் பலனேதும் எதிர்பார்க்கவில்லை; கிரங்கத்தில் தெரிந்த, பக்தர்களின் நல்வாழ்வு பற்றிய அவரது அக்கறை பரிசுத்தமானது. அந்தரங்கத்தில் பரமசாந்தியின் இருப்பிடமான அவர், எப்பொழுதாவது கோபத்தையும் காட்டினார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

குருவை நினை


 எவ்வளவு துன்பம் தரும் சோதனையாக இருந்தாலும், ஒரு சிஷ்யன் தன் குருதேவரைத் துறந்துவிடக்கூடாது. இந்த நெறியை, பிரத்யக்ஷமான அனுபவத்தை அளித்து, அவரவர் குருவின்மீது அவரவருக்கு உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் ஸாயீ திடப்படுத்தினார். 

      பாதங்களில் பணிவதற்கு வந்த அத்தனை பக்தர்களுக்கும், தமக்குப் பதிலாக அவரவர்களின் குருவை தரிசனம் செய்யும் அற்புதமான அனுபவத்தையளித்தார். சிலருக்கு ஒரு வழி; சிலருக்கு வேறுவழி. ஆயினும், ஒவ்வொருவருக்கும் சொந்த குருவின்மீது உண்டான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் திடப்படுத்தினார். 

ஸ்ரீ சாயி சத்சரித்திலிருந்து

Wednesday, November 27, 2013

ராம்லால்


பம்பாயில் வசித்துவந்த, ராம்லால் என்ற பெயர்கொண்ட பஞ்சாபி பிராமணர் ஒருவருக்குக் கனவில் பாபாவின் தரிசனம் கிடைத்தது. 
ஆகாயம், காற்று, சூரியன், வருணன் போன்ற இயற்கை தெய்வங்களின் அனுக்கிரஹ சக்தியால் நமக்கு உள்ளுலக, வெளியுலக ஞானம் கிடைக்கிறது. இது விழித்திருக்கும் நிலை. 
உடலுறுப்புகள் அனைத்தும் ஓய்வெடுத்துக்கொண் டிருக்கும்போது (தூக்கத்தில்), விழிப்பு நிலையில் செய்த செய்கைகளால் மனத்தில் ஏற்பட்ட சுவடுகள் உயிர்பெற்று, ஏற்றுக்கொள்பவரையும் ஏற்றுக்கொள்ளத்தக்க விஷயங்களையும் பொறுத்து, மறுபடியும் மனத்திரையில் ஓடுகின்றன. இதுவே கனவுகளின் குணாதிசயம். 
ராம்லாலி­ன் கனவோ விசித்திரமானது. அவர் எப்பொழுதுமே பாபாவை தரிசனம் செய்ததில்லை. பாபாவின் உருவத்தைப்பற்றியோ குணங்களைப்பற்றியோ எதுவுமே தெரியாது. ஆனால், பாபா அவரிடம் சொன்னார், ''என்னைப் பார்க்க வாரும்.
கனவில் தெரிந்த உருவத்தை வைத்துக் கணித்தால், அவர் ஒரு ஞானியாகத் தென்பட்டார். ஆனால், அவர் எங்கு வசித்தார் என்பது ராம்லாலுக்குத் தெரியவில்லை. விழித்துக்கொண்ட ராம்லால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். 
அவர் போக விரும்பினார். ஆனால், இடமோ விலாசமோ தெரியவில்லை. தரிசனத்திற்கு எவர் அழைத்தாரோ, அவருக்குத்தான் திட்டம் என்னவென்று தெரியும்.
அன்றைய தினமே பிற்பகல் வேளையில் ஒரு தெரு வழியாக நடந்துபோனபோது ஒரு கடையில் இருந்த படத்தைப் பார்த்துத் திடுக்கிட்டார். 
      கனவில் பார்த்த உருவம் இதுவே என்று ராம்லால் நினைத்தார். உடனே கடைக்காரரிடம் விசாரிக்க ஆரம்பித்தார். 
நிழற்படத்தில் உருவத்தின் லட்சணங்களைக் கவனமாகப் பார்த்தபின், ''இவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்று கடைக்காரரை விசாரித்தார். ''இது ஷீரடியில் இருக்கும் ஸாயீ என்று அறிந்துகொண்ட பிறகே நிம்மதியடைந்தார். 
மற்ற விவரங்களைப் பிறகு தெரிந்துகொண்டார். பின்னர் ராம்லால் ஷீரடிக்குச் சென்றார். பாபா மஹாஸமாதி அடையும்வரை அவருடன் இருந்தார். 
பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்திசெய்வதும், அவர்களை தரிசனத்திற்கு அழைத்து அவர்களுடைய உலகியல் தேவைகளையும் ஆன்மீகத் தேடல்களையும் நிறைவேற்றிவைப்பதுமே பாபாவின் மனோரதமாக இருந்தது. 
அவர், விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறிய நிலையில், விருப்பம் என்று எதுவும் இல்லாதவர்; சுயநலமற்றவர்; அஹங்காரமில்லாதவர்; பற்றற்றவர்; பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே அவதாரம் செய்தவர். 
கோபம் எவரைத் தொட்டதில்லையோ, எவரிடத்தில் துவேஷம் புக முடியாதோ, எவர் வயிறு நிரப்புவதைப்பற்றிக் கவலைப்படுவதில்லையோ அவரையே உண்மையான ஸாது என்றறிக. 
      'எல்லாரிடத்தும் சுயநலமில்லாத அன்பு என்பதே ஒரு ஸாதுவின் உன்னதமான வாழ்க்கை லட்சியம். தரும விஷயங்களைத் தவிர வேறெதிலும் அவர் தம்முடைய வார்த்தைகளை வீண் செய்வதில்லை. 
     சாராம்சமான ரகசியம் இங்கென்னவென்றால், என்னுடைய கையைப் பிடித்துக்கொண்டு தம்முடைய சரித்திரத்தைத் தாமே எழுதிக்கொள்வதன்மூலம், பக்தர்கள் தம்மை ஞாபகப்படுத்திக்கொண்டு அந்நினைவிலேயே மூழ்க வேண்டுமென்று ஸாயீ விரும்புகிறார். 
    அதனால்தான் பக்தர்கள் ஸாயீ சரித்திரத்தை சிரத்தையுடனும் பக்தியுடனும் கேட்கவேண்டும் என்று ஹேமாட், கதை கேட்பவர்களை அடிக்கடி வேண்டுகிறேன். 

 கேட்பவர்களின் மனத்தில் சாந்தி நிலவும். விசனத்தில் மூழ்கியவர்கள் விசனத்தி­ருந்து விடுபடுவார்கள். ஸாயீ பாதங்களில் பக்தி வளர்த்துப் பிறவிப் பிணியி­ருந்து விடுதலை பெறுவார்கள். 

ஒரு தந்தையைப் போல பாபா என்னை இக்கட்டிலிருந்து காப்பாற்றினார்!


எனக்கு நிகழ்ந்த ஒரு சிறிய சம்பவத்தின் மூலம், அன்பான ஒரு தாய் தந்தையைப் போல பாபா எப்போதும் என்கூடவே இருந்து இக்கட்டான நேரத்தில் காப்பாற்றி ஆசி அளிக்கிறார் என்பதைப் புரிந்துக்கொண்டேன்.

[புது தில்லி] ரஜௌரி கார்டனுக்கு மெட்ரோ ரயிலில் செல்வதற்காக, ராணி பாக் எனும் இடத்திற்கு ஆட்டோவில் செல்வது என் வழக்கம். புது இடம் என்பதால் முதலில் பயமாக இருந்தாலும், நாளடைவில் இது பழகிவிட்டது. செல்லும் வழியெல்லாம் நாம ஜபம் செய்து கொண்டிருப்பேன். ஸாயி என்னுடனேயே இருப்பதுபோல ஒரு தைரியத்தை இது அளித்தது.

வழக்கமாக இந்த இடத்திற்குச் செல்ல ஆட்டோக்காரர் 50 ரூபாய்கள் கேட்பார். மீட்டர் எல்லாம் போடமாட்டார். ஆனால், அன்று நான் ஏறிய ஆட்டோக்காரரோ மீட்டரைப் போட்டுவிட்டார். அவருக்குக் கொடுப்பதற்கான பணத்தை முன்னதாகவே எடுத்து வைத்துக் கொள்லலாம் என எனது ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்தேன். நான் எடுத்து வந்ததாக நினைத்த தொகையை விடவும் அது குறைவாகவே இருப்பதை உணர்ந்தேன். ரயில் பயணத்துக்கான கட்டணத்தைத் தவிர அதிகப்படியாக வழக்கமாக அவர்கள் கேட்கும் 50 ரூபாய்கள் இருக்காது எனப் பட்டது. என்ன செய்வதெனத் தெரியாம‌ல், பாபாவை மனமுருகிப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினேன். எனக்கு நம்பிக்கை ஊட்டுவதுபோல, ஒன்றன்பின் ஒன்றாக மூன்று ஆட்டோக்கள் பாபாவின் படம், உபதேசம் ஆகியவற்றைத் தாங்கி என்னைக் கடந்து சென்றன. இது என‌க்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ரயில் நிலையத்துக்கு சற்று முன்னதாகவே, மீட்டர் 42 ரூபாய் எனக் காட்டியபோது, ஆட்டோவை நிறுத்தி, இறங்கி ஆட்டோக்காரரிடம் அந்தத் தொகையைக் கொடுத்துவிட்டு நடக்கலானேன். மீதி கையில் இருந்த பணம் எனது மெட்ரோ ரயில் டிக்கெட்டுக்குப் போதுமானதாக இருந்தது. 20 அடி தூரமே ரயில் நிலையத்துக்கு இருக்கும்போது, அவ்வாறு நான் நிறுத்தி நடப்பதைக் கண்டு ஆட்டோக்காரரே வியந்தார்.

இதில் பாபாவின் லீலை என்னவென்றால், வழக்கம்போல நான் மீட்டர் இல்லாத வாகனத்தில் ஏறியிருந்தால், அவர்கள் கேட்கும் அந்த 50 ரூபாய்களைக் கொடுத்துவிட்டு, எனக்கு வீடு திரும்ப, ரயில் பயணம் செல்லும் கட்டணம் இல்லாது போயிருக்கும். அன்றைக்கெனப் பார்த்து, மீட்டர் பொருத்திய ஆட்டோவில் என்னை அழைத்துச் சென்று பாபா என்னை அந்த இக்கட்டான நிலையிலிருந்து [பழக்கமில்லாத இடத்தில் நான் அலைந்து விடாமல்] காப்பாற்றினார். தில்லி இன்னும் எனக்கு அதிகப் பழக்கமில்லாத ஊர் என்பதால் பாபா இவ்விதம் அருள் செய்தார்.


ஜெய் ஸாயி ராம்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...