அந்தக் காலத்தில் நூறு ரூபாய் இருந்தாலே பெரிய பணக்காரன். வெள்ளைக்காரர்கள் காலத்தில் நூறு ரூபாய்
கடன்வாங்கி மூன்று தலை முறையாக
கடனை அடைக்கமுடியாமல்
தாத்தா, அப்பா, பேரன் ஆகியோர் கடன் தந்தவர் பண்ணையில் வேலை செய்து வட்டி மட்டுமே கட்டிக்கொண்டு இருந்தார்கள்.
வெள்ளைக்கார துரை ஒருவர் அவர்கள் மீது இரக்கம் கொண்டு அன்பளிப்பாக நூறு ரூபாய்
கொடுத்து அவர்களை விடுதலையாக்கி விட்டார். மாத சம்பளம் வட்டிக்கு மட்டுமே சரியாக இருந்தது
என்றால் அந்தத்தொகையின் மதிப்பை பார்த்துக்கொள்ளுங்கள்.
நம்முடைய பிச்சைக்காரன் கதை ஆயிரம் வருஷத்துக்கு முந்தையது.
அவன் சிவனிடம் நூற்று ஒரு ரூபாய்
தந்தால் ஒரு ரூபாய்க்கு கற்பூரம் ஏற்றுவதாக வேண்டி வந்தான்.
அவனுடைய கெஞ்சலைக்கேட்டு இரக்கம் காட்டுமாறு அன்னை சிவனிடம்
வேண்டினாள். பணம் வந்தால் மனம்
மாறிவிடுவான் என சிவபெருமான் மறுத்துவந்தார். அன்னையின் தொடர் வற்புறுத்தலால், “நூறு ரூபாய் தருகிறேன், அவனது மனநிலையைப் பார்” எனக் கூறிய சிவபெருமான், அவன் போகும் வழியில் நூறு ரூபாய் ஒன்றைப் போட்டார். பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான்.
சரியாக நூறு ரூபாய் இருந்தது. “பெருமானே நன்றி. நீ எனக்கு
மட்டும்தான் பணம் கொடுத்தாயே தவிர, உனக்கு கற்பூரத்திற்குத் தரவில்லை. ஆகவே, நான் உனக்கு சூடம் ஏற்றவில்லை என நினைத்துக்கொள்ளாதே” என்று கூறிவிட்டு போய்விட்டான்.
வறுமையில் வாழ்வா சாவா போராட்டத்தில் இருந்த மனைவி மகளிடம் பணம்
கிடைத்த விவரத்தைச்
சொன்னான். ஆடம்பரப் பொருட்கள் வாங்கினான், அந்தஸ்து உயர்ந்தது. மனைவிக்கு கருப்பு மணியும், மகளுக்கு சங்கு வளையலும் வாங்கினான். தன் விரலுக்கு பெரிய வைர மோதிரம் வாங்கி மாட்டிக்கொண்டான்.
இவர்களை சோதிக்க நினைத்த பெருமான், முருகவேளை அழைத்துக்கொண்டு
பெண் கேட்டு அவன்
வீட்டிற்கு பார்வதியுடன் சென்றார். இவர்களைப் பார்த்ததும் மோதிரம் அவர்கள் கண்களுக்குத் தெரியும்படி கையை ஆட்டி ஆட்டி பல் தேய்த்தான். மனைவியிடம், “எங்கே சொம்பு?” எனக் கேட்டான்.
“அங்கே வச்சேன் பாருங்க, அங்கே வச்சேன் பாருங்க”என தனது கருப்பு மணி தெரிய கழுத்தை அசைத்து
அசைத்துச்சொன்னாள் அவள்.
மகளிடம், சொம்பை எங்கே வைத்தாய்?
எனக்கேட்டான்.
மகள் இங்கே இருக்கும் பாருங்க என வளையல் குலுங்கக் குலுங்க
காட்டினாள்.
“இவர்களுக்குப் பணம் வந்தால் பழையது மறந்துபோகும் என்று அப்பவே
சொன்னேன்! குடும்பமே எப்படி
அலம்பல் செய்கிறது பார். பணம் வராதபோது பணம் கேட்டு தொல்லைதந்தார்கள். பணம் தந்த பிறகு நம்மை
ஏமாற்றினார்கள், இப்போது ஆடம்பரம் காட்டுகிறார்கள்! இது தகாது; இவர்கள் பழைய நிலையை அடையட்டும்” என்று கூறிவிட்டு மறைந்தார்.
புதிய பணக்காரன் மீண்டும் பழைய பிச்சைக்காரனாகிவிட்டான்.
இவ்வளவு பெரிய கதை எதற்கு என நினைக்கத் தோன்றும்.
ஏ, சாயி பக்தா! சுவாமியிடம் எதையும் நேர்ந்து கொள்ளாதே. நேர்ந்துகொண்டால்
கோரிக்கை நிறைவேறிய உடனே அதை
நிறைவேற்றத் தவறாதே! ஸ்ரீஹரி
வாக்குத் தவறியவர்களை மன்னிக்கமாட்டார். அவர்களிடமிருந்து உள்ளதையும் எடுத்துக்கொள்வார். அதன் பிறகு
நேர்த்திக்கடனின் பொருட்டு சிரமப்பட வேண்டியிருக்கும்.
இறைவன் கொடுத்ததை திருப்தியுடன் அனுபவிக்கலாம், திருப்தியுடன் பிறருக்குக்
கொடுத்தும் வாழலாம். எல்லோரும்
இன்புற்றிருக்க நினைப் பதுவே சாயி தர்மம்!
பாபாவுக்கு உங்கள் மனம் தெரியும்; அப்படி இருந்தும் இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளார் என்றால் மனம் மாறுவீர்கள்
என்பதால்தான். அவரது நம்பிக்கைக்கு
ஏற்ப நடந்துகொண்டு வாழ்க்கையைத் தொடருங்கள்! மேலும் மேலும் உயர்வீர்கள்.
No comments:
Post a Comment