Wednesday, June 22, 2016

உன்னிடம் கடன் வாங்கியவர் தாமாக வந்து தருவார்

பாபாவின் பக்தர் ஜோக், அவுரங்காபாத்தில் வாழ்ந்தவர். ஒருவருக்கு 1400 ரூபாய் கடன் கொடுத்திருந்தார். நீண்ட நாட்களாகியும் கடன் திரும்பவரவில்லை. கொடுத்த கடனை திரும்பக் கேட்டுச் செல்ல நினைத்தார். இதை அறிந்த சாயி பாபா, “கடனை வசூலிக்க நீ செல்லவேண்டாம்; கடன் வாங்கியவரே இங்கே தாமாக வருவார்என்றார்.
நேரில் போய்க்கேட்டும் தராதவன், தானாக எப்படி வந்து தருவான்?” என ஜோக் பாபாவிடம் கேட்டார்.
உன் பணம் எங்கே போய்விடும்? போய் வீட்டில் அமைதியாக இரு, தாமாகத் திரும்பவரும்என்றார் பாபா.
ஜோக் வருத்தத்துடன், “நான் மூவாயிரம் ரூபாயை இழக்கவேண்டும் என்கிறீர்களா?” என்று கூறிவிட்டு, பணமில்லாமல் நாளை முதல் நான் எப்படி வழிபாடு, ஆரத்தி, பூஜை போன்றவற்றை செய்வது? பணம் இல்லாமல் எப்படி வாழ்வது? நான் நேரில் சென்றாலே தராதவன், தானாக எப்படி வருவான்? ஒரு வழக்குத் தொடுத்தாலன்றி அவன் வழிக்கு வரமாட்டான்என்றார்.
சரி, இப்போதைக்கு அந்த விஷயத்தை மறந்துவிடுஎன்றார் பாபா. ஜோக் அதைப்பற்றி பேசவில்லை.
சில நாட்கள் சென்றதும், கடன் வாங்கியவர் வந்து ஜோக்கிடம் தான் முதலை மட்டும் தந்து விடுவதாகவும், வட்டியைத் தர இயலாது என்றும் கூறினார். வட்டியையும் சேர்த்துத் தந்தால்தான் வாங்குவேன் என்றார் ஜோக்.
அவசியம் இருந்தால் ஒழிய வட்டி வாங்கவேண்டாம். அதனால் அனைத்துப் பலன்களும் போய் விடும்என்றார் பாபா.
பிரார்த்தனைக்கு வருவோரில் பலர், “கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கிக் கொடுத்தேன். வாங்கியவர் ஏமாற்றி விட்டார்என்றோ, எனது மனைவிக்குத் தெரியாமல் கொடுத்தேன், ஏமாற்றிவிட்டார்என்றோ, எங்களிடம் வாங்கியவர் ஏமாற்றிவிட்டார்என்றோ கூறுவார்கள்.
அவர்களிடம், “பொறுமையாக இருங்கள், பணத்தை அவர் ஏமாற்றவில்லை, பாபா வாங்கி வைத்திருக்கிறார். உரிய நேரத்தில் தந்துவிடுவார்  என்று கூறி அனுப்புவேன்.
எனக்கே இந்த மாதிரி இழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. பாபாவின் பணம் சுமார் பதினோறு லட்ச ரூபாய் இப்படி வெளியே இருக்கிறது. என்னை ஏமாற்றவேண்டும் என்றோ, என் மூலம் பிறரை ஏமாற்ற வேண்டும் என்றோ கணக்குப்போட்டு வேலை பார்த்தவர், கையிருப்புகளைத் தொலைத்துவிட்டு கடன்காரனாகச் சுற்றுவதை பாபா காட்டுவார்.
என்னிடம் சொல்வார்: உனக்கு கையிருப்பு, சேமிப்பு, எதிர்காலத் திட்டம் இவையெல்லாம் வேண்டா. கடந்த காலத்தில் ஏற்பட்டவைகளை நினைத்து என் மீது பாரத்தை வை. நானே உன் நிகழ்காலத்தை கவனிக்கிறேன், எதிர்காலத்தைபொறுப்பு எடுத்துக்கொள்கிறேன். வருவாய்இல்லாதது போலிருந்தாலும் பத்திரிகையைத்தொடர்ந்து நடத்த உதவுகிறேன். இதைத் தாண்டி உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்பார்.
அதேபோல, “உன்னிடம் பெற்றவர் திரும்பத்தராதவரையில் அவருடைய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை வைத்துக்கொண்டே இருப்பேன்என்றும் கூறுவார். இதனால்தான் உண்டியல்பணத்தை கூட கோயில் செலவு போக, மீதியை கீரப் பாக்கத்திற்காக செலவிட்டு வருகிறேன்.
என்னை ஒழிப்பதாக நினைத்துக் கொண்டு அவதூறு பரப்பி, அதன் மூலம் ஒருசிலரை எனக்கு எதிராகச் செய்தவர்கள் கூட எந்த ஒரு பலனையும் அனுபவிக்க முடியாதபடி பாபா பார்த்துக்கொள்கிறார். எனக்குச் செய்த அதேபாபா உங்களுக்கும் செய்வார், பொறுமையோடுகாத்திருங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...