Sunday, June 12, 2016

நான் கடன் பட்டதாக உணர்கிறேன்

என்னை எவன் மிகவும் விரும்புகிறானோஅவன் எப்போதும் என்னைக் காண்கிறான். என்னை விட்டு நீங்கினால் இவ்வுலகமே அவனுக்கு சூன்யமாய்த் தோன்றுகிறது. எனது கதைகளைத் தவிர பிறவற்றை அவன் கூறுவதில்லை. இடையறாது என்னையே தியானித்து என் நாமத்தையே ஜபம் செய்கிறான்.
முழுமையாக தன்னை என்னிடம் சமர்ப்பித்து என்னையே எப்போதும் எவன் நினைவில்கொண்டிருக்கிறானோ அவனுக்கு நான் கடன் பட்டதாக உணர்கிறேன். அவனுக்கு விடுதலை அளித்து எனது கடனைத் தீர்ப்பேன். என்னை நினைத்து எனக்காக ஏங்குபவனையும்எதையும் முதலில் என்னை நினைக்காமல் உண்ணாதவன்பாலும்,  நான் சார்ந்திருக்கிறேன்.
இங்ஙனம்என்னிடம் வருபவன் ஆறானது கடலுடன் ஒன்றாவது போல், என்னுடன் இரண்டறக் கலக்கிறான். பெருமையையும்அகங்காரத்தையும் விட்டொழித்துவிட்டு எள்ளளவும் அவற்றின் அடையாளம்கூட இல்லாதபடி விலக்கி உங்கள் இதயத்தே அமர்ந்துகொண்டிருக்கிற என்னிடம் உங்களைப் பூரணமாக சமர்ப்பிப்பீர்களாக!  நீங்கள் தொலை தூரமோஅல்லது எங்கெங்கேயோ என்னைத் தேடிக்கொண்டு போக வேண்டாம். உங்களது நாமத்தையும் ரூபத்தையும் நீக்கினால் உங்களுக்குள்ளும் அதைப்போன்று அனைத்து ஜீவராசிகளுக்குள்ளும் உளதாயிருக்கும் உணர்வு அல்லது ஸ்தாபிக்கப்பெற்றிருக்கும் உணர்வு நிலை காணப்பெறுகிறது. அது நானேயாகும்.
இதை உணர்ந்துகொண்டு உங்களிடத்தும் எல்லா ஜீவராசிகளிடத்தும் என்னைக்காண்பீர்களாக. இதை நீங்கள் பயிற்சி செய்தால்சர்வ வியாபகத்தை உணர்ந்து என்னுடன் ஒன்றாகும் நிலையை நீங்கள் பெறுவீர்கள்.    

ஸ்ரீ சாயி பாபா

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...