Wednesday, June 22, 2016

ஏலக்காய்.....

மூலிகைகளும் அதன் மர்மங்களும்.....வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது ஏலக்காய் பற்றி.
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: இஞ்சிவரிசை
குடும்பம்: இஞ்சிக் குடும்பம்
ஏல‌க்கா‌ய் எ‌ன்பது இ‌ஞ்‌சி செடி வகை‌யை‌ச் சே‌ர்‌ந்தது. ப‌ச்சை ‌நிற‌க் கா‌ய்களை‌க் கொ‌ண்டது. ஏல‌க்கா‌ய் ப‌ச்சை ‌நிற‌த்‌திலு‌ம், அட‌‌ர் பழு‌ப்பு ‌நிற‌த்‌திலு‌ம் இரு‌க்கு‌ம்.  ஏல‌க்கா‌ய் நறுமண‌ப் பொருளாக ம‌ட்டு‌ம் இ‌ல்லாம‌ல், பல மரு‌த்துவ‌க் குண‌ங்களை‌க் கொ‌ண்டதாகு‌ம்.
அஜீரணம்:
சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.
வயிற்றுவலி:
அவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.
கர்ப்பக்கால பிரச்சினை:
கர்ப்பிணி பெண்களுக்கு, அந்த கர்ப்பக் காலத்தில் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது உண்டு. இவற்றை போக்க, ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த ஏலரிசியை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை, தேவையான அளவு எலுமிச்சம்பழச்சாற்றில் குழைத்து, உணவு உட்கொண்ட பின்பு சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருசில நாட்கள் இப்படி உட்கொண்டு வந்தால் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கலாம்.
புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:
ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும். "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.
இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும். இதனைப் பல அன்பர்கள் பின்பற்றி சிலர் புகைப்பதையே விட்டுவிட்டனர்.
பிற பயன்கள்:
ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.
ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.
ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும்.
ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.
நான்கு ஏலத்தை கைப்பிடியளவு நாவல் இலைக் கொழுந்துடன் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.
தலை குளிர்ச்சிக்கான தைலம் தயாரிக்கும் சிற்றாமுட்டி வேர்ப்பொடியுடன் ஏலக்காயும், நல்லெண்ணெயும் மற்றும் சில மூலிகைகளும் பயன்படுத்தப்படுகின்றன.
கிரேக்க நாட்டில் கி.மு. 4-ம் நூற்றாண்டு முதலே ஏலக்காய் நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.
இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல், அழற்சி, சிறுநீரகக் கல், நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் போக்க ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
சித்த மருத்துவத்தில் சிறுநீர்ப்போக்கு கட்டுப்பாடு இன்மையை போக்கவும், வலுவேற்றியாகவும் ஏலக்காய் பயன்படுகிறது.
வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் சிறந்த மருந்து.
உணவு பொருட்களுடன் ஏலக்காய் சேர்த்தால் அவை மிகுந்த வாசனை கொண்டவையாகவும், சுவை மிகுதியாகவும் மாறும்.
குளிர் பிரதேசங்களில் உணவு பொருட்களின் வாசனைக்காக அதிக அளவில் ஏலக்காயை பயன்படுத்துகிறார்கள். இதனால், இந்திய ஏலக்காய்களுக்கு பல நாடுகளில் நல்ல மவுசு உள்ளது.
ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.
ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப்பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும். ஜீரணம் அதிகரிக்கும்.
ஏலக்காய் 15, வால் மிளகு 15, மற்றும் மூன்று வெற்றிலை ஆகியவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து பிறகு வடிகட்டி மூன்று வேளை குடித்தால் வாந்தி, குமட்டல் நிற்கும்.
ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்துபோல் போட்டால் தலைவலி சளி விலகும்.
ஏலக்காய், சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம் ஆகியவற்றை 20 கிராம் வீதம் எடுத்துக்கொண்டு நன்றாக வறுத்து பொடியாக்கி அரை தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் (தினசரி 3 வேளை) உடல் வலி, பசியின்மை, அஜீரணம் ஆகியவற்றுக்கு நிரந்தர தீர்வு ஏற்படலாம்.
ஏலக்காய் 10, மிளகு 5, கையளவு ரோஜா மொக்கு ஆகியவைகளை ஒரு லிட்டர் நீரில் நன்றாக பாதியாகும் வரை காய்ச்சி வடிகட்டி தேவையான சர்க்கரை, பால் சேர்த்துச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி பெறும்.
ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு, இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.
ஏலக்காய் விதைகளை தூள் செய்து அதனை பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து அதன் பின்னர் அரை ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நல்ல பலன் தெரியும். ஆனால் ஜாக்கிரதை, இதை அதிக அளவில் பயன்படுத்தினால், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி ஆண்மைக் குறைவு பிரச்சினையை ஏற்படுத்திவிடும் எச்சரிக்கை.....

வாட்ஸப்பில் படித்தது;

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...