Wednesday, June 15, 2016

திருப்தி

தர்சன்- ஸ்பர்சன்- சம்பாஷண் இந்த மூன்றுக்காகவும் சாயிவரதராஜனைப் பார்க்கச் செல்கிறேன். அதில் முழுமையான நிறைவு உள்ளது என்கிறார் எனக்கு வேண்டிய ஒரு சாயி பக்தர். எப்படி பார்ப்பதன் மூலமாக- அவரைத் தொடுவதன் மூலமாக- அவருடன் பேசுவதன் மூலமாக திருப்தி ஏற்படு கிறது? இதை விளக்கிக் கூறவேண்டும்.
கீதா ப்ரியா, திருச்சி-2
சாயி புத்ரன் பதில்கள்
எத்தனையோ பேர் என்னைப் பார்க்கிறார்கள், என்னிடம் பேசுகிறார்கள், என்னைத் தொடுகிறார்கள் அல்லது நான் தொடுகிறேன். எல்லோருக்கும் தெய்வீக உணர்வு வந்துவிடுகிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மை. யார் ஒருவர் சாயி பக்தியில் திளைத்திருக்கிறாரோ அவருடைய பக்தனாக என்னைக் கேள்விப்பட்டிருக்கிறாரோ அத்தகையவருக்கு, என்னைப் பார்ப்பதன் மூலம், என்னோடு பேசுவதன் மூலம், என்னால் தொடப்படுவதன் மூலம் பாபாவின் அருளைப் பெற்று விட்டதாக ஓர் உணர்வு ஏற்படுகிறது. இது அவர்கள் நிலைப்பாடுதானே தவிர, என்னிடமிருந்து எதுவும் செல்வதாகவோ, என்னிடம் விசேஷம் இருப்பதாகவோ எனக்குத் தெரிவதில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...