நாளை 26-02-2018 திங்கட்கிழமை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கீரப்பாக்கம் சீரடி சாய்பாபா நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. சாயி பக்தர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

பஸ் ரூட்:தாம்பரம் முதல் கீரப்பாக்கம் வரை 55D

கூடுவாஞ்சேரி முதல் கீரப்பாக்கம் வரை - 55K

இறங்குமிடம்:

மூன்று ரோடு, கீரப்பாக்கம் பாபா கோயில்.

பாபா கோயிலின் கும்பாபிஷேகம் முன்னிட்டு கண்டிகை பேருந்து நிலையம் முதல் இலவச வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. ( தாம்பரம் - கேளம்பாக்கம் வழித்தடத்தில் கண்டிகை உள்ளது)

பாபா அருள் பருக அனைவரும் வருக! வருக!

Saturday, June 25, 2016

சாயி புத்ரன் பதில்கள்

பக்தி என்பது என்ன? கதை சொல்லி விளக்கிக்கூறவேண்டும்?
என். காயத்ரி தேவி, புதுக்கோட்டை
சாயி புத்ரன் பதில்:
செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் பகவானை நினைத்துக்கொண்டிருந்தான். அவன் கற்பனைகள் விரிந்தன;
, பரந்தாமா! நான் உனது காலணிகளை கால்
களில் மாட்டி விட வேண்டும், நீ களைத்துப் படுத்திருக்கும்போது உன் தலையில் பேன், ஈர்களை முடியைக் கோதிக் கோதி எடுக்கவேண்டும். நீ பசித்திருக்கும்போது அருந்த சுவையான பாலை என் கையால் கொடுத்து குடிக்கச் செய்ய வேண்டும், படுக்கப் போகும்முன்பு கைகளுக்கு முத்தமிட்டு உறங்க அனுப்பவேண்டும். நீ எழுந்து வெளி யேறிய பிறகோ உனது அறைகளை நான் சுத்தம் செய்யவேண்டும்.. இப்படி தன்னை மறந்து சொல்லிக் கொண்டிருந்தான்.
அந்த வழியே அவசர அவசரமாக நடந்துவந்த குருக்களின் காதில் இவன் பேசிய சத்தம் கேட்டது. கோயிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படாத இவன் பகவானுக்கு செருப்புப் போடுவதும், பேன் பார்ப்பதும். பால் ஊட்டுவதும், படுக்கையை சுத்தம் செய்வதும், கைகளுக்கு முத்தமிடுவதும் கற்பனைகூட செய்யமுடியாத ஒன்று.
உருவமில்லாமல் எங்கும் நிறைந்த இறைவனுக்கு இவன் எப்படி இதையெல்லாம் செய்வான்? என யோசித்தபடி நடந்தார்.
பகவான் கூறினார்: ஏ, குருக்களே! அவனுடைய அன்பைப் பார்த்தீரா? என்னை ஓர் உருவமாக எண்ணிக்கொண்டு எனக்கு என்னென்னவெல்லாமோ செய்வதாகக் கற்பனைச் செய்து அதில் மூழ்கியிருக்கிறான். கோயிலுக்கு வெளியே இருந்தாலும் என்னுடனேயே இருக்கிறான். நீர் எங்கே இருக்கிறீர்? எனக் கேட்டார்.
பகவானுக்கு அலங்காரம் செய்துவிட்டு, சொந்த அலுவலைப் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் வேகமாக நடந்துகொண்டிருந்த குருக்கள் ஒரு கணம் திகைத்துவிட்டார்.
பகவானே, சதா உன்னை நினைப்பவனே உண்மையான பக்தன்; உன்னிடம் கோயிலில் இருப்பவனல்ல. உன்னிடம் இருந்து உன்னையே நினைக்கும் நிலையை எனக்கு அருள்வாயாக என குருக்கள் வேண்டியபடி நடையைத்தொடர்ந்தார்.

மின் அஞ்சலில் தகவல் பெற

டெலிகிராமில் இணைய

சாயிதரிசனம் தற்போது டெலிகிராமிலும் வெளியிடப்படுகிறது.இணைய விருப்பம் உள்ளவர்கள் கீழ்க்காணும் இணைப்பின் மூலம் https://telegram.me/joinchat/Dcf11Qt4V2qtkig9h3pNkw சேரலாம்.

அன்பிற்குறியவர்கள்

கூகிள் பிளஸில் தொடர்பவர்கள்