Sunday, June 26, 2016

உனக்குச்செய்வேன்...



பாபா கோயிலுக்கு நிறைய பேர் வருவார்கள்.  கோயில் நிர்வாகியிடம், ‘ஐயா நான் ஐந்து ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வருகிறேன்என்கிறார் ஒருவர்; உடனே நிர்வாகி, ‘அப்படியா? சந்தோஷம்என்கிற அவர், இன்னொருவரிடம், ‘‘என்ன உங்களை காணவில்லையேஎன்கிறார்.
இரண்டு நிகழ்வுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஐந்தாண்டுக்குப் பிறகும் ஒருவர்அறிமுகம் செய்து கொள்ளும் நிலையிருந்தால் அவரால் கோயிலுக்கு எந்தப் பலனும் இல்லை என்று பொருள். ஆகவே, அவர் நிர்வாகியின் மனதில் நிற்கவில்லை.
கோயிலுக்கு வந்து காணாமல் போனவரை நிர்வாகி விசாரித்தால் அந்த நபர் கோயிலுக்கு எதையோ செய்திருக்கிறார்; ஆகவே, நிர்வாகியின் மனதில் இருக்கிறார்.
நாம் ஒருவர் மனதில் நிற்கவேண்டுமானால் சின்னதாயினும் எதையாவது செய்யவேண்டும். கடவுள் மனதில் நிற்கவேண்டுமானாலும் இப்படி செய்துதான் ஆகவேண்டும்,
பாபா சொன்னார்: யார் ஒருவர் சாப்பிடும் முன்பு என்னை மறப்பது இல்லையோ அப்படிப்பட்டவருக்கு நான் அடிமை.
இதன் பொருள் என்ன? எனக்கு செய்தவரை மறப்பதில்லை என்பது. வேறு பொருள்: ஏதும் செய்யாதவரை நான் இன்னும் நினைக்கவில்லை.
என்னிடம் மூவாயிரம் ரூபாய் கேட்டவருக்குப்பத்து ரூபாய் கூட இல்லை என்றேன். பக்கத்து ஊரிலிருந்து வேண்டிய ஒருவர் ஐநூறு ரூபாய் கேட்டு அனுப்பினார். உடனே ஐயாயிரம்          ரூபாய் தந்து. அவசரம் இல்லாவிட்டால் கேட்க  மாட்டீர்களே, முடியும்போது திருப்பித் தந்தால் போதும்என்று சொல்லி அனுப்பினேன்.
ஏன் இப்படி?
பக்கத்து வீட்டிலிருந்தாலும் எனக்கும் அவர்களுக்கும் தொடர்பில்லாததால் தரவில்லை. எங்கோ இருந்தாலும் தொடர்பில் இருக்கிறவருக்கு கேட்டதைவிட கூடத் தருகிறேன். வழியில் பலர் போக, எனக்கு வேண்டியவரும் போகிறார். வாங்க, வந்து  உட்கார்ந்து ஒரு வாய் சாப்பிட்டுவிட்டுத்தான் போகவேண்டும்என அக்கறையோடு கூறுகிறேன். இதைவழியில் போவோர் வருவோரிடம் கூறமாட்டேன். எனக்கு வேண்டியவரிடம் கூறுவேன்.
அந்த வேண்டியவர் என்னை அடிக்கடி வந்து பார்த்து எனக்குத் தேவையானதை செய்து தருபவராக, என் மீது மரியாதை வைத்தவராக இருப்பார். நான் என்ன சொன்னாலும் செய்கிறவருக்கு ஒரு முக்கிய வேலை என வந்தால் மறுப்பு சொல்லாமல் செய்து தருவேன். ஒருவேளை அவரால் முடியாத வேலை என்றால், நீங்கள் இருங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என அவருக்காக முழு மூச்சாக வேலை செய்வேன்.
ஏன் இப்படி?
ஒருவன் எனக்கு அறிமுகமானவனாக, நெருங்கி யவனாக, நம்பகமானவனாக, நான் சொல்வதைக்கேட்பவனாக  - செய்பவனாக இருக்கவேண்டும். அப்படியிருந்தால் அவன் மீது அன்பு வைத்து அவனுக்காக பொறுப்பு எடுத்து வேலை செய்கிறேன்.
கடவுளும் இப்படித்தான்., யார் தனக்கு வேண்டியவனோ யார் நம்பகமானவனோ, யார் தனக்குக் கீழ்படிந்து நடக்கிறானோ அவனுக்காக எல்லா வேலைகளையும் செய்து தருகிறார். அவன் பொறுப்பை ஏற்கிறார்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...