Friday, June 24, 2016

சாயி புத்ரன் பதில்கள்

நாங்கள் வீடு கட்டினோம், அது ராசி இல்லாத வீடு என்று சொல்கிறார்கள். குடி போனது முதல் கஷ்டமாக உள்ளது. நிம்மதி இல்லை. இதை சரி செய்ய வழி கூறுங்கள்.
சகுந்தலா, பெங்களூரு

சாயிபுத்ரன் பதில்;
நாங்கள் வீடு கட்டியபோதும் அப்படித்தான் இருந்தது. கற்று அறிந்தவர்கள், அடியார்கள் ஆகியோரின் பாதம் படாதவரை வீடு வனமாக இருக்கும் என்று கேள்விப்பட்டோம். எங்கள் வீட்டுக்கு அவர்களை வரவழைத்தோம். இன்று தெய்வ கடாட்சம் உள்ள வீடாக இருக்கிறது.


இவர் ரொம்ப கொடியவர் என்கிறார்களே, அதற்கு ஏதேனும் இலக்கணம் உண்டா?
ஜி.கமல், நாகனூர்

சாயி புத்ரன் பதில்;
பிறரை எப்போதும் நிந்திக்கிறவன், தான் பிறருக்குக் கொடுத்ததை புகழ்ந்துகொள்கிறவன், எல்லோரையும் சந்தேகிப்பவன், கடவுளை நம்பினாலும் அவர் தன்னை வஞ்சித்துவிட்டதாக நினைத்து தீய செயல்களில் ஈடுபடுகிறவன், வஞ்சகப்பார்வை பார்க்கிறவன் ஆகியோர்தான் கொடியவர்.


வறுமை, பிரச்சினை, பாவம் இவை வராமல் இருக்க உபாயம் சொல்லுங்கள்.
கெ. முத்தமிழ், மதுரை - 3

சாயி புதரன் பதில்;
கடமையை கண்ணும் கருத்துமாகச் செய்தால் வறுமை உன்னை அணுகாது. வாயை அடக்கிக்கொண்டு அமைதி காத்தால் பிரச்சினை வராது. உடலாலும் மனதாலும் வாக்காலும் சுத்தமாக இறைவனை வழிபாடு செய்தால் பாவம் வராது.




No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...