ஒரு பிரார்த்தனை வேளையில் கோடம்பாக்கம் விஜயலட்சுமி அம்மா ஒரு கேள்வி
கேட்டார்: “நாம் அவரை விழுந்து விழுந்து வணங்குகிறோம், எப்படியெல்லாமோ பூஜை செய்கிறோம், விரதம் மேற்கொள்கிறோம். அப்படியிருந்தும் நமக்கு எதையும் செய்யத் தயங்குகிறார். எந்த வித
செயலையும் செய்யாமல் இருக்கிற பாமர மக்களுக்கு அவர்கள் கேட்டதைத் தந்துவிடுகிறார்
இது ஏன்?” என்பதுதான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்வியை ஏன் கேட்டார் என்றால், அறுபத்திரண்டு வயது வரை குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தவர் பரமசிவம்; அவருடைய துணைவியார் ராணி அம்மாளுக்கு
ஐம்பத்து ஐந்து வயது. அந்த வயதில்
பாபாவை வேண்டி குழந்தை பெற்றார்கள்.
மருத்துவர்கள் கைவிட்ட பிறகு, கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்ட
இவர்களுக்கு அற்புதம் நடந்தது. இப்போது குழந்தைக்கு இரண்டு மூன்று வயதிருக்கும். அதை எடுத்துக்கொண்டு நமது பிரார்த்தனை மையத்திற்கு
வந்து கூடியிருந்த மக்களிடம் பேசும்போது, இவ்வளவு காலம் குழந்தையில்லை. சாயி வரதராஜன் நடத்திய கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டு அவருடன் சீரடிக்குச் சென்றோம். அவர் எங்களுக்காகப் பிரார்த்தனை
செய்தார். இந்தக் குழந்தை பிறந்தது.
மருத்துவப் பரிசோதனைக்கு சென்றபோது, பரிசோதித்த கிறித்தவ டாக்டர், “ஐம்பத்தைந்து வயதுவரை மாதவிலக்கு ஆகிறதா? ஆச்சரியம், நீங்கள் கர்ப்பம் தரித்திருக்கிறீர்கள், பைபிளில் சாராள் என்ற பெண் 90 வயதில் கர்ப்பம் தரித்து குழந்தை பெற்றாள். நீங்கள் இந்த
முதிர் வயதில் கர்ப்பம் தரித்துக் குழந்தை
பெறுகிறீர்கள்” என ஆச்சர்யப்பட்டதாக சொன்னார்.
இந்த அற்புதத்தைக் கேட்டுதான் விஜயலட்சுமி அம்மா இந்தக் கேள்வியைக் கேட்டார். வேதம் படித்தவன் அதை மனப்பாடம் செய்து அன்றாட பூஜைக்கும், இறைவழிபாட்டுக்கும் பயன்படுத்தி, வேதம் விதித்தபடி வாழவேண்டும். அப்போதுதான் அவனுக்கு இறையருள்
கூடும்.
உபாசகர் அல்லது சாதகர் தனது கடவுளை உடல், சொல், மனம் ஆகியவற்றில் உண்மை நிறைந்து வணங்கவேண்டும். பக்தர்கள்
நீதி தவறாமல் வாழ்ந்து ஆத்மார்த்தமாகவும்,
மிகச்சிரத்தையுடனும்
கடவுளை வணங்கவேண்டும்.
இந்த பாமரர்களுக்கு இவையெல்லாம் தூரம். ஆகவே, இவர்கள் ஆத்மார்த்தமாக இறைவன் நாமத்தை தியானித்தாலே போதும், கேட்டது கிடைத்து விடும். அதற்கு இந்த பரமசிவன் தம்பதி ஒரு சாட்சி என்றேன்.
அந்தம்மா என்னுடன் ரயிலில் வந்தபோது, கண்டதையெல்லாம் சாப்பிட்டுக்கொண்டு வந்தார். சர்க்கரை வியாதி வேறு, குழந்தை வரம் கேட்கிறீர்கள், இப்படி கண்டதை சாப்பிடுகிறீரே, எப்படி குழந்தை பிறக்கும்? எனக் கேட்டபோது, “நீங்க தான் இருக்கீங்களே. நீங்க பார்த்துக்கோங்க” என்று சொன்னார்.
அந்த வார்த்தையில் கள்ளம் கபடமில்லை, இது நல்லதா கெட்டதா எனத் தெரியவில்லை. அப்படியரு பாமரத்தனம். யாரோ ஒருவர், “இவரிடம் போய் வேண்டிக்கொள்” எனக் கூறி அனுப்பியிருப்பார்கள்;
அதை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறார்.
குருவின் மீது உனது நம்பிக்கையை வைத்து விட்டால் அவர் அதை சுமந்து செயலாக்க
உதவி செய்வார் என்பது கூட
அவருக்குத் தெரியாது. ஆனால் கண்மூடித் தனமான நம்பிக்கை.
கடவுள் பெயரை உச்சரித்துக் கொண்டிருப்பது அவ்வளவு உயர்வானது, கேட்டதை அளிக்கக்கூடியது.
இறைவன் விஷயத்தில் பாமரத்தனமாகத்தான் பக்தி செய்யவேண்டும். அப்படியிப்படி
என எல்லாம் தெரிந்ததுபோல
நடக்கக்கூடாது. அதை அவர் பார்த்து நமக்கு அனுக்கிரகம் செய்வார்.
இதுதான் எனது விளக்கம். கபடு இல்லாமல் என்னிடம் வா, நான் உன்னைக் கரைத் தேற்றி உனது கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன்..இது
சாயியின் உத்தரவாதம்.
No comments:
Post a Comment