Tuesday, June 21, 2016

குட்டிக்கதை

சுயநலம் பற்றிய ஒரு குட்டிக்கதை கூறமுடியுமா?
எஸ். சரத்குமார், சென்னை-45
சாயி புத்ரன் பதில்கள்
யாரோ விளைவித்த வயலில் இருந்து ஒரு கதிரைப் பறித்துக் கொண்ட சேவல் ஒன்று, அதைப் பயிரிட்டு பலன் அனுபவிக்க வருமாறு தன் போன்ற மற்ற பறவைகளைக்கூப்பிட்டது. எல்லா பறவைகளும் வந்து கதிரை விதைகளாகப் பிரித்து விதைத்து, உழைத்து பலன் வரும் காலத்திற்காகக் காத்திருந்தன.
அறுவடை வந்தபோது, “எங்களுக்கு உரிய பங்கைத் தாருங்கள்எனச் சேவலிடம் கேட்ட போது, சேவல் சொன்னது:
உங்களுக்குத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் இப்போது விளைந்திருப்பதைப்பார்த்தால் அது எனக்கும் என் குடும்பத்திற்கும் போதாது, இதை உருவாக்கக் காரணமாக இருந்த நாங்கள் அனுபவித்துக் கொள்கிறோம், நீங்கள் இன்னும் சிறிது காலம் காத்திருங்கள், அடுத்த முறை கதிரை அறுத்து வந்து விதைத்துக் கிடைக்கிற பலனில் பங்கு தருகிறேன் என்றது.
பறவைகளும் அதை நம்பிப் போய்விட்டன. மறு முறையும் இவ்வாறே பயிரிட்டன. இந்த முறை பறவைகளிடம் நண்பர்களே, உங்களுக்குத்தான் எல்லாவற்றையும் தருவதாக இருந்தேன், என் குடும்பம் பெரிதாகிவிட்டது. பேரன் பேத்திகள் எல்லாம் இருக்கிறார்கள், அவர்கள் சாப்பிடத்தான் சரியாக இருக்கிறதே தவிர, மீதம் இருப்பதாகத்தெரியவில்லை. இருந்தாலும் நாங்கள் தியாகம் செய்து சிறிது தருகிறேன்எனக் கூறி ஒரு சில பறவைகளுக்கு மட்டும் சிறிது தந்தது.
சேவலின் செயலைப் பார்த்த அதன் பிள்ளை தந்தையிடம் கேட்டது, “அப்பா இது தர்மமா? இப்படி செய்யலாமாஎன்று?
இந்த நிலத்துக்கு நான்தான் தலைவர். வெளியே சேவல் பயிர் செய்ததாகத்தான் சொல்வார்கள், இதைப் பயன்படுத்தி நம் குடும்ப மேன்மைக்குச்செய்து கொண்டால்தான் நம் குடும்பம் பிழைக்க முடியும். ஓரிரண்டு பறவைக்கு போட்டுவிட்டால், மற்ற பறவைகள் அடுத்த முறை தங்களுக்குக்கிடைக்கும் என நம்பிக்கொண்டு நமக்காக வேலை பார்க்கும்.
இதுபோலச் செய்தால் நம்மைச் சுற்றி மற்ற பறவைகளை வைத்துக்கொள்ளலாம். அதிகம் கேட்டால் என்ன செய்வது?
அடுத்த முறையும் இதேபோல எதையாவது சொல்லி தட்டிக் கழித்துவிட்டு ஆண்டாண்டு காலமாக நாமே எல்லாவற்றையும் அனுபவிக்கலாம் என்றது சேவல்.
இதை எப்படி நம்புவது? எனக் கேட்ட குட்டிச்சேவலை, வயலுக்கு அழைத்துச் சென்றது சேவல். சேவலின் வருகையைப் பார்த்த மற்ற பறவைகள் ஆர்வத்தோடும், அதிகமாகவும் வேலை செய்யத்தொடங்கின.
பார்த்தாயா? அடுத்த முறை நமக்கு தருவார் என நம்பி இவை செய்கின்றன. செய்வதற்கு இவற்றை இப்படித்தான் பழக்க வேண்டும். சாப்பிடுவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றது தந்தைச் சேவல்.
அப்பா அவைகள் விழித்துக் கொண்டால் என்ன செய்வது எனக் கேட்டது குட்டிச் சேவல்.
இதுகூடத் தெரியாதா? அவை நம்மிடம் பங்கு கேட்க வரும்போது குடும்பச் சண்டையை அவிழ்த்து விடுவது போல நடிப்போம். அவை நம் மீதுபரிதாபப்படும், அல்லது நாட்டாமை செய் ஆசைப்படும். எல்லா பறவையின் கவனமும் இதிலேயே இருப்பதால், இதைத் தாண்டி பங்கு கேட்காது. எப்படியும் பலன் நம்மை விட்டுப்போய்விடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்என்று சொன்னது சேவல்.
அப்படியானால் உழைப்பதற்கு அவர்களுக்கு எப்போதுதான் பலன் கிடைக்கும்? என அப்பாவித்தனமாகக் கேட்டது குட்டிச் சேவல்.
அதைப் பற்றி அவைகளுக்கே தெரியாது, உனக்கு ஏன் இந்தக் கவலை? உன் பெட்டைக்கோழி முட்டையிட்டிருந்தால் அதற்கும் சிறிது தானியத்தை சேர்த்து வைஎன அதை கூட்டி வந்தது சேவல். இதற்குப் பெயர் தான் சுயநலம்.

பொறாமையை வென்றுவிடு.

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ , நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிர...