Saturday, June 25, 2016

அழுதால் கிடைக்கும்! நோக்கத்தைப் புரிந்துகொள்…நேர்மையானவர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்; ஏமாற்றுகிறவர்கள், பொய் பேசுவதை அன்றாடத்தொழிலாக வைத்திருப்பவர்கள்பிறர் சொத்தை அபகரிக்கிறவர்கள் ஆகியோர் சீரும் சிறப்புமாக வாழ்கிறார்கள்.நிலை தவறுகிறவர்கள் தங்கள் வாழ்வில் நடக்கிற ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஜோதிடம், பிரசன்னம், அருள்வாக்கு என சதா அலைகிறார்கள். இதனால் அவர்களின் பிள்ளைகளுடைய வாழ்க்கை கெட்டுவிடுகிறது. வாழவேண்டிய இளம் பெண்களின் வாழ்வு ஜாதகத்தால் மிக மோசமாகப் பாழாக்கப்படுகிறது, ;  ஆண்களின் திருமண வாழ்வில் சிக்கல், தடை போன்றவை ஏற்படுகிறது. விரைவில் விவாகரத்தில் முடிகிறது. செய்ய வேண்டிய செயல்கள் தள்ளிப் போடப்படுகின்றன அல்லது தவிர்க்கப்படுகின்றன.இன்டர்நெட் கலாச்சாரம், முகநூல் போன்றவற்றின் தாக்கத்தால் ஆண்களும், பெண்களும் தங்கள் வாழ்க்கை சீரழியும் விதத்தில் நடந்துகொள்கிறார்கள், எந்த நேரமும் இன்டர்நெட்டில் காலம் கழிக்கும் நிலை காரணமாக இளம் பிள்ளைகளுக்கு இயற்கையாக இருக்கவேண்டிய பொறுப்புணர்வும், செயல்திறனும் குறைந்துவிடுகிறது.
எதிர்காலத்தை எதிர்கொள்ளவேண்டிய அறிவு, தைரியம், திறமை பக்குவம் போன்றவற்றை அவர்கள் இழந்துவிடுகிறார்கள். திருமணம் ஆக வேண்டிய வயதில் சீர்கெட்டு விடுவதால், தாம்பத்ய வாழ்க்கை என்றாலே பயந்து ஒளிவதும், மனைவியைக் கண்டு பயப்படுவதும், அவள் பிடிக்கவில்லை என காரணம் கூறி விவாகரத்துப் பெறுவதும் நடக்கிறது.
பெற்ற தாய் தனது மகனை மருமகளுடன் வாழ விடாமல் தடுக்கிற நிகழ்வுகளால் வெளி உலகம் தெரியாத புதுப்பெண்கள் வாழாவெட்டியாக தாய் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். போட்டி -  பொறாமைகள், வருவாயைத் தாண்டிய செலவுகள், தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவுக்கு வாழ்வின் ஆதாரக் குறைவு, அத்யாவசியத்திற்கும் கடன்வாங்கினால்தான் முடியும் என்கிற நிலை ஆகியவற்றால் கடன் தொல்லைகளால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
வாகனப் பெருக்கம், வேலை பளு, உறவுகளில் சிக்கல், மன உளைச்சல் என வெளிப்புற உட்புற காரணங்களால் மரணங்கள் அதிகரிக்கின்றன. இப்படி, நிறைய விஷயங்களால் சராசரியான மனித வாழ்வு சீரழிகிறது. மனிதன் எதற்காகப் பிறந்தானோ, எதை சாதிக்க நினைத்தானோ அது கனவாகிவிடுகிறது.
சாயி இழுக்கக் காரணம்:
இவ்வாறு எல்லா விதத்திலும் தன்னுடைய நிலையை இழந்துவிடுகிற மனிதனுக்கு தக்க நேரத்தில் உதவி செய்து அவனை கைதூக்கி விட்டு, பிறருக்கும் அவனால் நன்மை உண்டாக இறைவன் விரும்புகிறான்.
நேரம் இல்லை, நிம்மதியில்லை, ஓய்வு சிறிதும் இல்லை என்றெல்லாம் புலம்புகிறவர்கள் கிடைத்த நேரத்திலாவது தன்னைத் தொழுது கஷ்ட நிவர்த்தி அடையட்டும் என்றே தனது வழிபாட்டை எளிமையாக்க உத்தேசிக்கிறான்.
ஆகவே, மக்களிடையே நேரடியாக மகான்களாக, ஞானியராக அவதாரம் செய்து வழிகாட்ட வருகிறான். ஆனால் அவர்களோ அவனை அருள்வாக்கு மேடையில் அமர்த்தி குறி சொல்லச் சொல்கிறார்கள். இதனால் மனம்நொந்து கடை விரித்தேன் கொள்வாரில்லை எனப் புலம்பிக் கொண்டு போகிறான். இந்த நிலையில் எப்படியேனும் மனிதனை கரை சேர்ப்பிக்க  வேண்டும் எனத் தீர்மானித்த ஈசனாகிய இறைவன் சாயியாகத் தோன்றி தனது பக்தன் விருப்பம் போல நடந்து அவனை தன் பக்கம் இழுத்துக் கொள்கிறான்.
நீங்களும் நானும் துன்பச் சுமையின் பாரம் நீங்கி இன்பம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் சாயியிடம் வந்திருக்கிறோம். நாம் நமது கடவுளிடம் சதா உலக விஷயங்களுக்காக கேட்கிறோம், பரிகாரம் செய்தும் பரிகாசத்துக்கு ஆளாகிறோம். அருள் செய்கிற இறைவன் பொறுப்பெடுத்து வழி நடத்த வந்திருக்கும்போது, வீணாக அவனை குறி மேடையில் உட்கார்த்தி கெட்டுவிடுகிறோம்.
இந்த நிலையை மாற்றி இதயத்தின் தன்னை ஏற்றிக்கொண்டு தனது பக்தன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே சாயி பாபாவாக அவதரித்து, மிக எளிமையான வழிமுறைகளுடன் பக்தர்களை ணுகுகிறார் இறைவன்.
சாயி என்று ஒரு தரம் சொன்னாலே இதயத்திற்குள் நுழைந்து விடுகிறான். சாயி சாயி என்று சதா நினைத்தால் எல்லா பாரங்களையும் வாங்கி விடுகின்றார்.
இறைவனை நம்புகிற மக்களும், நல்லவர்களும் கெட்டுப் போகக்கூடாது, கடனிலும் கஷ்டத்திலும் சிக்கி அல்லல் படக்கூடாது என்ற நோக்கில் நல்லவர்களையும், கருணை மனம் உள்ளவர்களையும் மட்டும் தேடிப்பிடிக்கிறார்.
அப்படித்தான் நீங்களும் நானும் அவரால் பிடிக்கப்பட்டோம். சிட்டுக் குருவியின் காலில் நூலைக் கட்டி இழுப்பதைப்போல தன்னிடம் அவன்தான் நம்மை இழுத்தார். சாயி பக்தர்கள் ஆனோம்.
அதன் பிறகு எப்படி நடந்துகொள்வது?
உணர்ந்துகொள்ளுங்கள்:
உன்னிடம் வந்துவிட்ட பிறகு எல்லா பொறுப்புகளையும் என்னிடம் விட்டுவிடு என அவன் கெஞ்சுகிறான். உடும்புப்பிடியாக அவற்றைப் பிடித்துக்கொண்டு, விடாமல் நம் வழியில் போகிறோம், கஷ்ட நிவர்த்திக்கு அவன் நம்மோடு இருந்தும் கண்ணில்லாதவர் போல காணாது இருக்கிறோம்.
உள்ளத்தில் அவனிருந்தும் உணராமல் பிதற்றுகிறோம்; இறைவா என்னை காப்பாற்று என வெளியே அலைந்து திரிகிறோம்; அல்லல் என அனைத்தையும் நம் தலையில் தூக்கிப் போட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பிரச்சினைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு சுகமாக வாழும் நோக்கத்தில்தான் பாபா உங்களை அழைத்திருக்கிறார்; உங்கள் இடம் தேடி வந்திருக்கிறார். ஆகவே, சாயி பக்தராகிய உங்களுக்கு சங்கட நிவர்த்தி என்பது நிச்சயம். இதை மட்டும் உணர்ந்துகொண்டால்போதும்,
வெற்றி பெறவேண்டும் என்ற உத்வேகம் உங்கள் மனதில் தோன்றிவிடும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம், விடாமுயற்சி, செயல் திறன் ஆகியவைஏற்படும். வாழ்க்கையில் நிச்சயம் வென்றே தீருவோம் என்ற உந்துதல் ஏற்பட்டு செயல்பட ஆரம்பிப்போம்.
இதெல்லாம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவர் மனதில் சாயி பாபா வேலை செய்கிறார் என்று பொருள். இப்படிப்பட்டவர் எந்த நிலையைக் கண்டும் அச்சப்படத் தேவையில்லை. தனது இன்றையநிலைக்காக கூனிக் குறுகத் தேவை கிடையாது.
சாயி பாபா என்கிற பரம் பொருள் நம்முள் அமர்ந்து சேவையைத் துவங்கி விட்டதை உறுதியாக அறியலாம்.
ஜோதிடம் பொய்யல்ல, ஆனால் அதன் மீது இவ்வளவு தீவிரமான நம்பிக்கை தேவையில்லை. அவரே எல்லா நிகழ்வுகளுக்கும் காரணகர்த்தா ஆகும்போது தேவையற்ற முயற்சி அலைச்சல், குழப்பம் வேண்டாம். அவர் பார்த்துக்கொண்டு நம்மை விடுதலை செய்துவிடுவார்.
இப்போது ஏற்பட்டுள்ள        கஷ்டம், பிரச்சினை என அனைத்தும் தற்காலிகமானது; அதை பாபா தீர்த்து நம்மை வெகு தூரம் கூட்டிச்செல்வார் என்பதை உணரவேண்டும். ஆகவே, நிலையற்ற ஒன்றுக்காக அவரை நாடுவதைத் தவிர்த்து, அதை விட மேலான ஒன்று இருக்கிறதா என்ற தேடுதலை ஆரம்பியுங்கள்.
இந்த இடத்தில்தான் உங்கள் வாழ்வில் ஆன்மிகம் ஆரம்பிக்கும்.
அழுதால் கிடைக்கும்:
ஆன்மிகம் கைகூடும்போது இறைவன் திருநாமம் நம் காதுகளில் விழும்போது கண்களில் கண்ணீர் ததும்பும். அவனைப் பற்றி நினைக்கையிலும், அவனது லீலைகளைப் படிக்கையிலும் உள்ளம் உருகும். இந்த நிலையில் நாம் வேண்டினால் வேண்டியது உடனடியாகக் கிடைக்கும்.
பக்தியில்லாமல், கடவுளை நம்பாமல் அழும் போது கேட்பது கிடைக்காது; கிடைத்தாலும் கை விட்டுப் போய்விடும்.
உடனே கிடைக்கவேண்டும் என்றால் உருகி உருகி அழுது கேட்கவேண்டும். அப்போது நிச்சயம் தப்பாமல் வேண்டியது கிடைத்துவிடும்.


பொறாமையை வென்றுவிடு.

பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ , நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிர...