என் ஆன்மக் குழந்தைகளே!
சாயி பக்தர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரே ஒரு விஷயம் தைரியம். யார் பொறுமையுடனும்
நம்பிக்கையுடனும் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தைரியம் கைகூடும்.
பிரச்சினையில்லாமல் யாரும் வாழவில்லை, அதிலிருந்து தப்பிக்கும் வழி தெரியாமல்தான்
நம்மில் பலர் சிக்கித் தவித்து வருகிறோம்.
இப்படிப்பட்ட பிரச்சினைகளில் சிக்கி, கடைசி நேரத்தில் மீண்டு எழுந்து இறைவன் அருளால்
சுகமாக வாழ்கிற சாயி பக்தர்கள் உங்கள் அனுபவங்களை எழுதுங்கள். அது பிறரது வாழ்க்கை மாற்றத்திற்கு உதவியாக
இருக்கும்.
நம்முடைய பக்தி முதலில் நம்மையும் நமது வாழ்வையும் மாற்றுவதாக இருக்கவேண்டியது அவசியம்.
இந்த மாற்றம் ஏற்பட்டால் பிறகு தாமாக
நமக்கு ஆன்மிக ஞானம் தோன்றும்.
தைரியத்தை இழந்துவிடாதீர்கள், நாம் அமர்ந்து யோசித்து விவாதித்து ஒருவர் பிரச்சினையை
இன்னொருவர் எப்படி தீர்க்கலாம் என்பதற்கான
வழியை ஆராயலாம். லவுகீகத்தில் தோற்பவர் ஆன்மிகத்திற்குள் நுழைவார்கள் என்பது பழைய கதை. இப்போது வேறுவிதமாக
தவறான வழிகளில் அவர்கள் ஈடுபட்டுவிடுகிறார்கள்.
லவுகீகத்தில் வெற்றிபெற வேண்டும்.
அதுதான் ஆன்மிகத்தில் நம்பிக்கை தோன்றுவதற்கான முதல் படி. இதை நாம் பெறுவதற்காக பிரச்சினையான நேரத்தில் அமர்ந்து
இறைவன் நாமத்தை இடைவிடாமல் தியானம் செய்யுங்கள். அப்போது நமது பாரத்தை இறைவன் ஏற்றுக்கொண்டு
பிரச்சினையிலிருந்து நம்மைக் காப்பாற்றுவார்.
கீரப்பாக்கம் பாபா ஆலயத்தில் கடன் பிரச்சினைகளில் இருந்து மீள்வதற்காக மாதந்தோறும்
சத்திய நாராயண விரத பூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. சிரமம் பாராமல் கலந்து கொண்டு பலன் பெறுமாறு அன்புடன்
வேண்டுகிறோம்.
இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
அன்புடன்
ஸ்ரீ சாயி வரதராஜன்
No comments:
Post a Comment